கொரனாக் கொல்நோய், பரவும் முடிமுகி!
வருவார் வாய்ப்புகள் கருதுக குன்றுதல் ;
தெருவிற் பனையும் அருகிய நிலையே!
முருகிழந் ததுவே முதுபே ருலகே.
உரை:
உரை:
கொரனாக் கொல்நோய் - கொரனா என்னும்
உயிர்க்கொல்லி நோய்;
பரவும் முடிமுகி! - இது தொற்றிப் பலரையும்
பீடிக்கும், மணிமுடி வடிவில் தெரிவதாம் நோய்
நுண்மி;
வருவார் வாய்ப்புகள் கருதுக குன்றுதல் -
கடைகள் பொதுமக்கள் வருமிடங்கள் எல்லா
வற்றிலும் வரத்துக் குறைந்துவிட்டது; தொழில்
வாய்ப்புகளும் குறைந்துவிட்டன;
தெரு விற்பனையும் அருகிய நிலையே! -
தெருவில் இருக்கும் கடைகள் கூட மிகக்
குறைந்துவிட்டன, இதுவே நிலை.
தெரு விற்பனை; தெருவிற் பனை என்று
ஓசைப்பொருட்டு வகையுளி.
தெருவில் வளர் பனைமரத்தைக் குறித்திலது.
முருகிழந் ததுவே முதுபே ருலகே. - இவ்வாறு
இவ் வயதாகிவிட்ட பெரிய உலகம் தன் அழகை
இழந்துவிட்டதே!
என்றவாறு.
முடி - மணிமுடி, முகி - முக உருவம். (கொரனா)
முருகு - அழகு. இதை வேறு பாடல்களில் மகுடமுகி
என்றும் குறித்துள்ளேம்.
என்றும் குறித்துள்ளேம்.
நிலைமை விளக்கும் கவிதை.
திருத்தங்கள்:
இதில் கொரனா என்னும் முடிமுகி நோயினால்
என்பதை "கொரனாக் கொல்நோய், பரவும் முடிமுகி!"
என்றும் "வருவார் குன்றினர் வாய்ப்புகள் குன்றின"
என்பதை வருவார் வாய்ப்புகள் கருதுக குன்றுதல்
என்றும் மாற்றியுள்ளோம்.
பரவும் முடிமுகியையே கொரனா கொல்நோய் என்று
உலகம் சொல்கிறது என்பது முதல்வரி..
எதுகைகள்:
எதுகைகள்:
கொர, பர, வரு, கரு,
தெரு, அரு, முரு.
மோனைகள்
மோனைகள்
கொரனாக் கொல்நோய்!
வருவார் வாய்ப்புகள்
முருகிழந் ...முதுபே
என்பவற்றில் மோனைகளைக் கண்டுகொள்க.
மெய்ப்பு பின்.
முருகிழந் ...முதுபே
என்பவற்றில் மோனைகளைக் கண்டுகொள்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக