சனி, 20 ஜூன், 2020

ஆடு மேய்களம் இலடாக்கு.



ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார் வாழும் இடமே
ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை திடமே
ஆடுகொடு மனத்தராய் அரசுகளில் வல்லோர் ஊன்று கடமே
ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் செல்லார் எனில் மடமே.


பொருள் 

1.ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார்
 வாழும் இடமே - அமைதியாக ஏழைகள் ஆடுமேய்த்து 
வாழ்க்கை நடத்தும்  இடமாகும்; 
 ( இல்லார் - ஏழைகள்)

2.ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை  - 
இலாடாக்கு என்னும் இந்நிலப் பரப்பில் ஆடவேண்டியவை 
ஆடுகளே; 
 ( அதுதான்இறைவன் அமைத்தவழி என்பது).

3. திடமே   ஆடு   கொடு மனத்தராய் அரசுகளில்
 வல்லோர் ஊன்று கடமே - ( இப்போது)  அவ்விடம் 
வளைந்த  மனத்திடம் வாய்ந்த வல்லரசுகள் 
அசையாமல் நிற்கும் மலைப்பகுதி  ஆகிவிட்டது!!

(ஊன்றுதல் - நிலையாக நிற்றல் .
 கடம் - மலைப் பகுதி. 
 எ-டு: வேங்கடம் - வெப்பமுள்ள மலைப்பகுதி) 

திடமே  ஆடு(ம்) கொடு மனத்தர் -  மிகுந்த மன 
அழுத்தமுடன்  செயல்படும் கொடிய நெஞ்சினர்.
  (  போரினை விரும்புவதால் ).


4.  ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் 
செல்லார் எனில் மடமே. -   இந்த வல்லரசுப்
படையினர் அங்கிருந்து செல்லாவிட்டால் 
அது மடமையாய் முடியும்.  
( அழிவை உண்டாக்குவது மடமை என்பது 
கருத்து. மடம் - மடமை)


இக்கவிதையை நுகர்ந்து இன்புறுவீர்.

மெய்ப்பு - பின்
Edited 5.31 am 22.06.2020


2 கருத்துகள்:

Sivamala.blogspot.com சொன்னது…

Locals remain anxious amid India-China border stand-off

Tensions have been at an all-time high after deadly clashes between Indian and Chinese troops erupted along the disputed Himalayan border in June. For locals in the region, anxieties and fear over their pasturelands remain constant, report the BBC's Aamir Peerzada and Rinchen Angmo Chumikchan.

BBC 04072020

SIVAMALA சொன்னது…

சிங்கப்பூருக்கும் பினாங்குக்கும் நெடுஞ்சாலை வழியாக 712 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ( திபேத்துக்கும் ) உள்ள எல்லையின் தூரம் இதைவிட 5.6 தடவை அல்லது கூடுதலான நீளமானது ஆகும். இவ்வளவு நீள எல்லையைக் கவனித்துக்கொள்வதென்பது ஒரு கடினமான காரியம்தான்! கணக்கெடுப்பதிலும் கண்காணிப்பதிலும் சோர்வுகள் தோன்றக்கூடும்.