போரில் இறந்தவர் நோயிற் பிரிந்தோர் எனப்பலராம்
யாரா யினுஞ்செலும் யாவருக் கும்நெஞ் சுருகியதே
நேரும் துயர்தனை நீக்கி நிலைகொள் திறம்பெறுகென்
றாரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே
உரை:
போரில் இறந்தவர் நோயிற் பிரிந்தோர் எனப்பலராம் -
இந்தக் கடினமான காலத்தில் பலர் போரில் இறந்தனர், பலர்
நோயினால் சென்றுவிட்டனர்;
உரை:
போரில் இறந்தவர் நோயிற் பிரிந்தோர் எனப்பலராம் -
இந்தக் கடினமான காலத்தில் பலர் போரில் இறந்தனர், பலர்
நோயினால் சென்றுவிட்டனர்;
யாரா யினுஞ்செலும் யாவருக் கும்நெஞ் சுருகியதே -
இத்திறத்தார் அனைவருக்கும் நம் நெஞ்சுருக்கம் உரித்தாகுக.
நேரும் துயர்தனை நீக்கி நிலைகொள் திறம்பெறுகென்
று - ( இவர்கள் உறவினர் நட்பினர் முதலானோர்) அதனால்
அடைந்த துக்கத்தினின்று மீண்டு நிலையான மனத்திடத்தினைப்
பெறவேண்டுமென்று;
ஆரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே
அடைந்த துக்கத்தினின்று மீண்டு நிலையான மனத்திடத்தினைப்
பெறவேண்டுமென்று;
ஆரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே
- அருள் நிறைந்த இறைவன் அடிகளின் முன் நின்று வணங்கி
( இறைஞ்சிக்கொண்டு) விழுந்தேம் யாம்
என்றவாறு.
ஆர் அருள் - வினைத்தொகை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக