[Re-posted after Edit.]
ஒரு
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு
முன் சில இணையதளங்களில்
பிராமணர் என்ற சொல்லின்
தோற்றம் பற்றிய ஆய்வுகளும்
உரையாடல்களும்
நடைபெற்றன.
அதில் பலர் பெருமான்
என்ற சொல்லினின்றுதான் இச்சொல்
முகிழ்த்தது என்று
கருத்துத்தெரிவித்திருந்தனர்.
இந்தச்
சொல் நீண்டகாலமாகவே ஆய்வு
செய்யப்பட்டுப் பல்வேறு
முடிபுகள் முன்வைக்கப்பட்ட
சொல்லாகும்.
ஆபி
ட்யூபா என்ற பிரஞ்சு அறிஞர்
தம் ஆய்வில் இது " ஏப்ரகாம்
" என்ற சொல்லினின்று
திரிந்துற்றது என்று கூறினார்.
இப்
பிராமணர் என்ற சொல்பற்றிப்
பிறர் கருத்துக்களை யெல்லாம்
இவண் தொகுத்துரைப்பதென்றால்
இடுகை நீண்டு படிப்போருக்கு
உறக்கமே வந்துவிடுமாதலால்
அவையெல்லாம்
ஒருபுறமிருக்க, நாம்
நேரடியாகவே நம் ஆய்வினைத்
தொடங்கிவிடுவோம்.
பெருமான்
என்ற சொல் பிரான் என்றும்
பெருமாட்டி என்ற சொல் பிராட்டி
என்றும் திரியும். பெரு
- பிரா என்ற முதலசைத்
திரிபுகளைக் கவனிக்கவேண்டும்.
இவ்வாறே பெருமான் -
பிராமான் > பிராமனன்
என்று இச்சொல் திரிந்துவிட்டது.
இதில் 0னகரம்
என்ற எழுத்தே வந்திருக்கவேண்டும்.
ணகரத்துக்கு வேலையில்லை.
ஏனென்றால் பெருமான்
என்ற மூலத்தில் ணகர ஒற்று
இல்லை. இன்றைய
நிலையில் பிராமணர் என்றே
தமிழில் எழுதப்பட்டும்
பேசப்பட்டும் வருதலால்,
இந்த மரபினை நாம்
போற்றவேண்டியுள்ளது. ஆனால்
இந்த மாற்றீடுதான் ஆய்வாளர்களைத்
திசைதிருப்பி விட்டதென்பதை
உணர்க.
------என்று
முடிக்கவே, பிரம்மன்
என்ற சொல்லும் பெருமான் பிரம்மன்(திரிபு)
என்பதையும்
அறிந்துகொள்ளவேண்டும்.
பெருமான்
என்பதும் திரிசொல்லே. அது
பெருமகனென்பதன் திரிபே என்று
உணர்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக