இங்குள்ள தாளிகை வலைத்தளத்துக்குச் சென்று, அதில் உள்ள படத்தைப் பார்த்தபின் கவிதையையும் பிறவற்றையும் வாசிக்கவும்:
https://www.hindustantimes.com/india-news/india-china-hold-diplomatic-meeting-on-border-stand-off-in-ladakh/story-wrnl1LQZ1UTOdItWRJrMvL.html?utm_source=browser_notifications&utm_medium=Browser&utm_campaign=notification
நிலவின் படமென உலவுமென் கண்கள்;
கண்களை உறுத்தும் கருமுகப் பாறை;
பாறையின் பாங்கினில் பயிர்களோ இலவே;
இலர்சிலர் உளர்; இல் அடாஆக்கு மலையே.
அந்தாதிப் பாடல்.
உரை:
என் கண்கள் இது நிலவின் படமோ என்று
அப்படத்தில் மேல் உலாவுகின்றன;
அந்தக் கருமுகம் காட்டும் பாறைகள் கண்களை
உறுத்துகின்றன.
எந்தப் பயிரும் அங்கு முளைக்கவில்லை;
சில ஏழைகள் பக்கத்தில் உள்ளனர்.
இது இலாடாக்கு மலை.
இல் = வீடுகள்' (வீடுகளுக்கு)*
அடா = அடுத்துக்கூட வர இயலாமல்;
( கொடிதானமுறையில் )*
ஆக்கு = இயற்கை ஆக்கிய;
மலை.
*இப்படி உரைப்பினும் ஆகும்.
இல்+ அடா+ஆக்கு = இலாடாக்கு!!.
(பயன்பாடற்ற நிலப்பகுதி
என்பது.)
எ-டு:
அடு > அடி. (தொழிற்பெயர்). அடுத்துவரலால் அடி என்ப.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக