அங்கீகாரம் என்ற சொல்லுக்கு முன்பு யாம் கருத்துவெளியிட்டதும் உண்டு; எழுதியதும் உண்டு. இங்குத் தேடியதில், அதைக் காணவில்லை. அஃது அழிந்துபோயிருக்கலாம்; அல்லது வேறு எங்காவது அதை யாம் எழுதியிருந்திருக்கலாம். அதைத் தேடி நேரத்தை வீண்செய்யாமல், இப்போது ஆய்வு விவரங்களைச் சுருக்கமாக எழுதிவிடலாமே என்று எண்ணுகிறோம். இதை மறந்ததில்லை. காரணம், இச்சொல் எளிமையான உட்பகவுகளைக் கொண்ட ஒன்று என்பதுதான்.
இங்கு என்பது நாம் இருக்கும் இடம். அங்கீகாரம் இங்கு இல்லை. இதன் காரணி யாதென்றால், நாமே ஒன்றை அங்கீகரித்துக்கொள்வது ஒரு குறிக்கத்தக்க நிகழ்வு ஆகாது.
அங்கீகாரம் என்பது அங்கிருந்துதான் வரவேண்டும். அங்கு என்பது ஓர் அரசுச் செயலகமாகவோ நம் அப்பன் அம்மாவாகவோ அல்லது ஏதேனும் ஓர் இணக்கம் தரத்தக்க அதிகாரம் உள்ளவராகவோ இருக்கவேண்டும். அங்கீகரிக்க வேண்டும் விழைவு அல்லது வேண்டுதல்மட்டுமே இங்கிருந்து செல்வதாகும்.
நம் வேண்டுதல் அங்குச் சென்று , ( அங்கு ) ஆமென்ற இசைவை இங்கு ஈர்த்து வருதல். ஈர்த்து என்றால் "இழுத்து".
அங்கு + ஈர் + கு + ஆர் +ஆம்.
கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல். எ-டு: மதுரைக்கு.
ஆர்தல் - இங்கு செயலைக் குறிக்கிறது. வந்து பொருந்தும் செயல்.
அம் விகுதி.
எல்லாம் புணர்த்த, அங்கீர்காரம் ஆகி, ர் இடைக்குறைந்து அங்கீகாரமாகும்.
பேச்சுமொழியில் தள்ளுபடி என்பது " ஈர்ததல்" [ " ஈ(ர்)காரம் " ] என்பதற்கு எதிர்ச்சொல் ஆகிவிடுகிறது எனக்காண்க.
இது அழகிய சொல்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக