தீட்சை அல்லது சமய இணைப்புத் தொடக்கம் ஏழு வகைப்படும் என்பர். இவற்றுள் குருவானவர் மாணவனை தொட்டும் தொடாமலும் பல்வேறு முறைகளில் சமயத்தில் இணைத்துக்கொள்வார். நெற்றியில் விரலால் தீட்டிவிடுதல் ஒருவகை. யோக முறையில் மாணவனுள் புகுந்து அவனைத் தூய்மைப் படுத்துதலில் தொடுதல் இல்லாமலும் இருக்கலாம். அருட்பார்வையினாலும் தீட்சை பெறுதலுண்டு.
தீட்சை என்ற சொல் எவ்வாறு உருப்பெற்றதென்பதையே நாம் இங்கு ஆய்வு செய்கின்றோம். அது சுருக்கமாக:
தீட்டுதல் வினைச்சொல்
தீட்டுதல் - தீட்டுகை > தீட்கை > தீட்சை,
தீட்டுகை > தீக்கை.
இச்சொற்கள் உருப்பெற்றமையை வேறுவிதமாகவும் காட்டுவதுமுண்டு.
அறிக மகிழ்க.\
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக