புதன், 21 டிசம்பர், 2022

எதேச்சை

 இன்று பேச்சில் வரும் "எதேச்சை(யாக)"   என்ற சொல்லை அறிவோம்.

இதில் வரும் " இச்சை " என்ற சொல்,  இங்கு விளக்கப் பட்டுள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_88.html

இதில் வரும் இ என்பது ஓர் சுட்டடிச் சொல்.  இங்கு என்பது இதன் சொல்லமைப்புப்  பொருள்.  இதன் பொருண்மை யாதெனின், இங்குள்ள ஒன்றன்மேல் மனத்தை இட்டு,  அதன்மேல் கவிந்திருத்தல் என்பதாகும். மனத்தொடர்பு உட்படுத்தாத  விடத்து  ,  இங்கு வைத்தல் என்பது இதன் பொருள்.

இ >  இ+ சை >  இச்சை.   சை என்பது தொழிற்பெயர் விகுதி.

இ என்பதிலிருந்து அமைந்த  வினைச்சொல்தான்,   இ > இடுதல் என்பது.

இச்சை என்பது  இ >  இ+ சை ( விகுதி )  .>  இச்சை.

இதனை:  இடுதல்:  இடு+ சை >  இடுச்சை > (  இடைக்குறைந்து  "இச்சை"  என்றும் காட்டலாம்.).

இதில் வேறுபாடு ஒன்றுமில்லை. ஒன்றைச் சுட்டடியிலிருந்து விளக்கினோம்.  மற்றொன்றை வினைச்சொல்லிலிருந்து விளக்கினோம்..   இடு என்ற சொல்லில் டு என்பது வினையாக்க விகுதி.   அ > அடு என்பதிலும் டு விகுதியே ஆகும்.  

இன்னோர் எடுத்துக்காட்டு:

ப என்ற ஓரெழுத்துச் சொல்லின் பொருள், ஒன்று நிலத்துடன் படர்வாக இருத்தல் (lying flat)  என்பதாம்.   படிந்திருக்கக் காணப்படுவது.   ஒரு மனிதன் படுத்திருக்கையில் நிலத்துடன் படிந்துள்ளான்.  ப>  பலகை என்பதில்,  மரம் அல்லது அதனால் அமைந்து நிலத்துடன் படிவான வகையில் இருப்பதைக் குறிக்கிறது.  பலகை என்பது பரப்புடைய  வெட்டப்பட்ட மரமாதலின்   :  பர > பரகை > பலகை என்று அறியப்படுதல் எளிமையான வழி. மற்றும் ல- ர அல்லது மாற்றீட்டுத்  திரிபு என்பது தெளிவு. நிலத்தைச் சமன்படுத்தல், "பரம்படித்தல்"  எனப்படுதலும் காண்க.  பர> பரம்பு.  பு விகுதி.  

இவற்றால்,  எப்படியாவது இட்டவண்ணம் ஒன்றைச் செய்தல், " எதேச்சை" யாகச் செய்தல் எனப்பட்டதன் பொருத்தத்தை அறியலாம். 

எதாவது ஒருவழியில் "எடுத்துச்செய்தல்" எனினும்  ஒக்கும். எதாவது ஒருவழியில் "எடுத்துக்கொள்ளுதல்."   எது+ எடுச்சை  > எதேச்சை..

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

பன்றி - சொல்லமைப்பு, பாடலுடன்.

 அழகிய வெள்ளைப் பன்றி

அருகினில் வந்தார் தம்மை, 

இளகிய  நெஞ்சன் யானென்

றினிமைசேர் பார்வை காட்டி

பழகிடும் அன்பால் காணீர்.

"பசிக்கெனக்  குண்ணத் தாரீர்

விளைத்திடும்  எதுவும் ஏற்பேன்,

வேற்றுமை இல்லேன்" என்னும்.


"தவிக்கின்ற பசி-ப  ரிந்து

தருவிரே  உங்கள் கையால்,

அவித்தது பச்சை என்றும்

ஒதுக்குவ  தில்லை கண்டீர்

ஒழிக்கின்ற  ஊணொன்  றில்லை

உயிர்வதை ஒதுக்கி விட்டேன்,

பழிக்கின்ற செயல்கள் இல்லேன்

பரிந்துதா  பம்செய் வீரே!"  



பல்+ தி >  பன் தி >  பன்றி. வலிமையான பல்லுடைய விலங்கு.  ( சொல்லமைப்பு)

இ(ன்) + து >  இன்று.  ஒப்பிட்டு அறிந்துகொள்ளவும்.

எ(ன்) + து  இது கன்னடத்தில்  எந்து என்று வரும்.    தமிழில்: என  என்று பொருள்.

வினை எச்சம்:  செல்+ து >  சென்று.    சென்று வந்தான் என்பதில் அறிக.

எல்லா உயிர்களின்மேலும் அன்பு காட்டுதல் நம் கடமை. எதையும் வதைத்தல் ஆகாது.

இந்தப் பன்றியின் வாழ்விடம்  ஃபூஜி மலை,  ஜப்பான்( யப்பான்)  .  வெளிநாட்டு வருகையாளர்கட்குக் காட்சி கொடுக்கும் ( பாவப்பட்ட) பன்றி.  அங்கேயே உணவை வாங்கி அதற்கு ஊட்டலாம்.  வெகு தூய்மையாக  வளர்க்கிறார்கள். சுற்றி வரும் பயணிகள் சுத்தக் குறைவை பன்றிக்கு ஏற்றிவிடாமல் காத்துக்கொண்டால் போதுமே!  அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

பரிந்து தாபம் செய்தல் - பரிதாபம் காட்டுதல்.

விளைத்திடும் -  உண்டாக்கும் (உணவுவகை)

வேற்றுமை இல் -  எல்லா உணவும் கொள்ளுதல்.

பரிந்து -  இரங்கி

ஊண் - உணவு.

பரிந்து தாபம்  ---- இரங்கி அன்புகாட்டுதல்.

தருவிரே -  தருவீரே, முன்னிலைப் பன்மை:  இர். ஈர்.  தருவிர் - தருவீர்.

இவ்விடுகையில் சில எழுத்துகள் மாறிவிட்டன. மீண்டும்  இடுகை சரிசெய்யப்பட்டது,

மாறியது ஏனென்று தெரியவில்லை.

வரைவுத்திரை ( compose mode) மாறியிருந்தது.


படம்:  திரு.குமரன் பிள்ளை.

,மெய்ப்பு மீண்டும் பார்வை பெறும்.

சனி, 17 டிசம்பர், 2022

மரம், மரத்துப்போவது, மரி, மடி, மரணம், இன்னும் தொடர்பின ( பதிவுவரும்)

 


ஒரு காலத்தில் மக்கள்  மரங்கட்கு மனிதனைப் போல் "புலன்கள்" இல்லை என்று நினைத்தனர்.ஆனால் அன்றிருந்த தமிழர்களில் சிந்தனைத் தெளிவு ( தொல்காப்பினாரைப் போல் )  உள்ளோர் எல்லாப் புலன்களும் இல்லாவிட்டாலும் ஒரு புலன், இரண்டு புலன் என்று சில புலன் களாவது சிலவற்றுக்கு இருந்தன என்பதை உணர்ந்துகொண்டு, ஓரறிவு  , ஈரறிவு என்றெல்லாம் வகைப்படுத்தினர்.

உயிரோடு இருந்த ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவன் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறுகிறோம்.  இறப்பு என்பது "கடைசி" நிலையை அம்மனிதன் அடைந்துவிட்டான்"  என்பதுதான்.  இறுதல் என்றால் இறுதிநிலை என்பதே ஆகும்.

இறுதல் -வினைச்சொல்.  பொருள்:  முடிதல்.

இறு என்ற வினையிலிருந்து  " இற "  என்ற சொல் தோன்றியது. 

இறு - இறுதல்.

இற  ( இறு + அ )  > இறத்தல்.    இங்கு,  "அ"   என்பது ஒரு சுட்டடி எழுத்து அல்லது  சொல்'.  " அ " 

இதுபோலும்,  இன்னொன்று கூற வேண்டுமானால்,   கட என்பதைக் கூறலாம்.  எதையும் கடந்து செல்ல, முயற்சி  தேவைப்படும்.  முயற்சி என்பது ஒரு கடினச் செயல் ஆகும்.   இஃது  கடு > கட   ( கடு>  கடு+ அ > கட).  இங்கு கடு என்பது கடினநிலையைக் குறித்தது. ஓர் ஆற்றையோ மலையையோ கடந்து  செல்ல, மிக்க முயற்சி தேவைப்படும்.

ஒரு வீட்டில் மகனாய் வளர்ந்தவன் இன்னொரு வீட்டில் மணவினைக்குப்  பின் செல்கிறான் என்றால்,  அந்தப் "புக்ககத்தை" மருவுகிறான்.  ஆகவே மருமகன் ஆகிறான். ஆகவே  மன்பதைச் சூழலில் அவன் ஓர் மாறுதலை  ஏற்றுக்கொள்கிறான்.

பழங்காலத்தில்,   மரு என்ற சொல்லும்  மறு என்ற சொல்லும்  பொருண்மையால் அணிமையில்தான் இருந்தன.  ( பொருள் தொலைவு இல்லை).  ரகர றகர வேறுபாடுகள் இன்றிப் பழங்க்காலத்தில் வழங்கிய சொற்கள் பலவிருந்தன.  இவற்றைக் கூறும் இலக்கண நூல்களும் இருந்தன.

கடு என்பது கட என்றானது போலவே,  மரு என்ற அடிச்சொல்லும் மர என்று மாறியது.

புலனுணர்வு மாறிய நிலையில்,  " மரத்தல் " என்ற சொல் புலன் மாற்றமடைந்த நிலையை உணர்த்தியது.  :  கால் மரத்துப் போயிற்று,   கை மரத்துப் போயிற்று என்று அறிவித்தனர். வேறு புலன் நிலை,  அல்லது புலன் மாற்ற நிலை என்று பொருள்பட்டது.   ஆகவே  மரு,    மரு என்பதன் பொருள்தொடர்பினை அறிக.

மரம் என்ற சொல்லின் பொருள் இப்போது தெளிவு  ஆகிவிடும்.  மரு+ அம் > மரம் என்பது உணர்வற்ற நிலையில் உள்ள பொருள் என்பதே ஆகும்.

(  உயிர்கள் பல  தம் ஐம்புலன்களும் ஒரே சமயத்தில் இயங்கும் நிலையில் உள்ளன.   ஆனால் நிலைத்திணை உயிரிகள் பல இந்த நிலையினின்று மாறிச் சில புலன்களே இயங்குதற் குரியனவாய் உள்ளன. எடுத்துக்காட்டாக, தொட்டாற்சிணுக்கி என்பது. தன் ஊற்றுணர்வு மட்டும் இயங்குவதான நிலையில் உள்ளது. ஜகதீச சந்திரபோஸ்  போன்ற அறிவியலார் தங்கள் ஆய்வின் மூலம்,  செடிகள் இசையையும் அறிந்துகொள்ளும் தன்மை உடையன என்று காட்டினார்.  பாம்பு முதலியவை,  கண்ணும் செவியும் ஒன்றாக இருப்பதனைக் காட்டுகின்றன. நாய்கள் மிகுந்த மோப்ப உணர்வினை வெளிப்படுத்துகின்றன. அதன்மூலமே தம் இயமானனை அறிந்துகொள்கின்றன. ஆகையால், இவற்றின் 'மருவுநிலை' ஆய்ந்து காணத்தக்கவை. மனிதன் நீங்கிய மற்றவெல்லாமும் ஒருநிலைப்பட்டன என்று சொல்வதற்கில்லை.

நில செடிகொடிகள் வெட்டுப்பட்டாலும் ஒட்டிவளர்கின்றன.  ஒடித்து நட்டாலும் வளர்ந்துவிடுகின்றன. வாழைமரம் வாழையடி வாழையாய் வாழ்கிறது  மனித உடல் வெட்டுப்பட, பிழைக்காமல் இறந்தொழிகிறது.

மரு >  மரி   ( மர்+இ )  அல்லது மரு+ இ..

மரி >  மரி+ அண் + அம்  >  மரணம். ( மருவிய அண்மை நிலை )

மரி + அகம் >  ,மாரகம்  (முதனிலை நீண்டு விகுதி பெறல்)

மரணி > மரணித்தல் ,   மரி > மரித்தல்.

இவை எல்லாம் மருவுதல் என்னும் அடிப்படைக் கருத்துடைய சொற்கள்.


மடி >  மரி  ( போலி)

இல் > இறு திரிபு அறிக.

ஒப்பீடு:  நல் > நறு என்பதும் அறிக.



மேலும் அறிய:   

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_13.html


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்


17122022 :பதிவேற்றம் செய்யப்படும் .... மீண்டும் வருக

இடுகை: முற்றும்

Are you frightened of swimming?

 


Let it be an ocean
That's in front of me?
I will bathe and and enjoy 
No fear in my eyes.......
I am ultra modern.......

Leah's swim video from Mrs Roshini.

வியாழன், 15 டிசம்பர், 2022

பெட்டி, காபினெட்டு முதலியவை

 ஓரிரு முறை பயன்பாடு கண்டபின்,  இன்னும் சிலகாலங்கட்கு  காத்துவைக்கப்படும் பொருள்கள் உள்ளன.  இவை பின்னர் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுபவை.

இவை வைக்கும் பெட்டி அல்லது அறையை உண்டாக்கிப் பொருள்களை அங்கு வைக்கவேண்டுமானால், இத்தகைய பெட்டிகட்கு ஒரு பெயர் வேண்டும்.  உலக மொழிகளில் இத்தகைய பெட்டிகள் பல்வேறு பெயர்களில் குறிக்கப்பட்டன, இஃது இயல்பானதே.  

சில மொழிகள் தமக்கு மூத்த மொழிகளிலிருந்து பெயர்களை மேற்கொண்டதும் ஒரு முயற்சிச் சிக்கனம் ஆகும். இதனால் இழுக்கொன்றும் இல்லை. பெட்டி என்ற தமிழ்ச் சொல்லை மலாய் மொழி எடுத்துப் பயன்படுத்துகிறது.  பெட்டிக்குப் பெட்டி தான். தமிழர்கள்மற்றும்  ஏனை இந்தியரும் முற்காலத்தில் மற்ற இனங்களுடன் இணக்க உறவுகள் கொண்டிருந்தனர். இராசராச சோழன் தன் மகளைக் கம்போடிய மன்னன் அனிருத்தனுக்குத் தந்ததும் அறிக. சமத்கிருதம் பரவச் செய்தான்.  வெளிநாட்டில் கோயில்கள் அமைத்தான்.

பெள்தல் என்னும் வினைச்சொல்,  பாதுகாத்தல் என்று பொருள்படும். பின் தேவைப்படும் பொருள்களை,  பெட்டிக்குள் வைத்துக் காப்போம். பிறரிடமிருந்தும் பூச்சிகள் முதலியவற்றிடமிருந்தும் காத்தல் என்பதே குறிக்கோள்.

பெள் >  பெள்தல்.  இது புணர்ச்சியில் பெட்டல் என்றும் வரும்.  பெட்டல் > பெட்டி ஆயிற்று.

முதலில் காத்துவைத்து பின் எடு >  எட்டு > எட்டுதல்  என்ற பொருளில் " கா+பின்+எட்டு என்ற சொல்லை சில ஐரோப்பிய மொழிகள் ஒரு வாக்கியம்போலவே மேற்கொண்டன. மரங்களைக் காயவைத்து பலகைகளாக அறுத்து வேலைசெய்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை, ஆசிய நாடுகளில்தான் சிறப்பாகவிருந்தது. தேக்குமரங்கள் ஆசியாவில் மிகவும் விரும்பப் பட்டவை. மரவேலைப்பாடுகட்கு தெரிந்துகொள்ளப்பட்டவை ஆகும்.

காத்துவைக்கும் பலகைச் சிற்றறை என்ற பொருளையே பெட்டி என்பதும், காபினெட்டு என்ற வாக்கியச்சொல்லும்  குறிக்கின்றன.

கேபின் என்ற ஆங்கிலச்சொல்லும் காத்துவைக்கும் இடமென்று பொருள்தரும். இது  "கா-பின்" என்பதே. தமிழிலிருந்தும் சமத்கிருதத்திலிருந்தும்  ஐரோப்பிய மொழிகள் கடன் கொண்ட சொற்கள் மிகப்பலவாம்.  தமிழ் மற்றும் சமஸ்கிருத சொற்களில் பலவற்றை அவர்கள் எடுத்தாண்டுள்ளனர்.  சுமேரிய மொழியிலும் தமிழ்ச்சொற்கள் உள்ளன. எபிரேயத்திலும் தமிழ் உள்ளது.

மன்னன் சாலமோன்:  

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_36.html

தமிழ் என்பது வீட்டு மொழி.   ( தமில்> தமிழ்).   தம் இல்லில் பேசிய மொழி. ( இதை மேலை ஆய்வறிஞரும் கூறியுள்ளனர்.1   சமத்கிருதம் பாணர்கள் தங்கள் பூசைகளிலும் வீடுகள் முன் சென்று பாடின காலையும் கதை சொன்ன போதும் பயன்படுத்திய உள்நாட்டு மொழிதான். இச்சொற்கள் இந்தியாவிலிருந்து சென்றவை.  பாணினி ஒரு பாண இலக்கிய இலக்கண அறிஞன்.   அவன் திறமையை பின்வந்த வெளியார் திருடிக்கொள்ளக்கூடாது.  திறமைக்கு உரிய பாராட்டுதலை வழங்கவேண்டும்.

தமிழ் வீட்டு மொழி என்ற நிலையையும் தாண்டி,  இலக்கிய மொழியாகவும் அரசு மொழியாகவும்  பின்வளர்ந்த மொழிகளின் தாயாகவும்  படைகளின் மொழியாகவும் இன்னும் பரிமாணங்கள் பலவற்றுடன் வழங்கிய மொழியாகவும் இருந்ததென்பதில் ஐயமில்லை.  வீட்டு மொழி என்ற குறியீடு, அதன் பிற பயன்பாட்டுப் பரிமாணங்களை குறைத்துவிட்டதாகக் கொள்ளலாகாது..

காபேணு (cabane)  என்பது,  காத்தல்,  பேணுதல் என்ற இரண்டும் அமைந்த ஒரு மீமிசைச் சொல்லாக உருவானது. காபேணு என்பது பழைய ஃபிரஞ்சு மொழிப் பழஞ்சொல், அவர்கள் கடன் கொண்டவை.  காத்தல் , பேணுதல் என்பனவும் தமிழ். இன்னொருவழியில்,  "காபேணிட்டு"   என்பதும்,  "கா" + "பேணு" + "இட்டு" என்ற மூன்று சொற்கள் கூட்டு ஆகும்.2

cabane முதலியவை பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை என்பது காலக்கணக்கர்களின் கணிப்பாகும். மேலை மொழியாளர்களுடன் இக்காலங்களில் தொடர்பு கூடிவிட்டன என்பதறிக. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

குறிப்புகள்:

1.  எ-டு:  கமில் சுவலபெல்

2. French Letters Patent issued around 1668 AD or thereabouts.

சனி, 10 டிசம்பர், 2022

சீயகங்கன் என்ற மன்னன் பெயர் தமிழ் ( சமகாலம் "நன்னூல்")

 இது ஒரு மன்னனின் பெயர்.  திரிபுப் பெயர் ஆகும்.

 சீரிய -   சீய  ( ஸ்ரீ ய,  ஸ்ரீஜ ).

சீய என்ற வடிவம் இடைக்குறை.(  மற்றவை கூடுதல் மேம்பாடு செய்யப்பட்டவை).

கங்கன்:  

இதிலுள்ள அன் விகுதி தமிழுக்குரிய ஆண்பால் விகுதி.

கங்கையன் >  கங்கயன் >  கங்கன்  (  யகரம் இடைக்குறை).

கண்+ கை + அன் >  கங்கையன்,  ஒப்பீடு:  கண்காணி >  கங்காணி.

மேலரசர்க்கும் மக்கட்கும் கண்ணும் கையுமாகப் பயன்படு ஆட்சியன்.

சீரிய கங்கையன் >  சீயகங்கன்.

ஒப்பீடு:

ஆர்+இய >  ஆரிய  > ஐய  இதுபோல் சீரிய >  சீய.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


வேங்கடமும் குடமும்.

 சொல்லமைப்பில் இவ்விரண்டு சொற்களுக்கும் மிக்கத் தொடர்பு உள்ளது.

அகரத் தொடக்கத்துச் சொல்,  உகரத் தொடக்கமாகும்  என்பதை  முன் இடுகைகளில் உணர்த்தியிருந்தோம். சொல்லாய்வுகளில் இதுபோலும் திரிபுகளை மறந்துவிடுதல் ஆகாது.  இவை நினைவிலிருத்தப் படும்வரை பயிலப்படுதல் வேண்டும்.  இவற்றையெல்லாம் நினைவு கூர்தல் கடினம் என்று நினைப்போனுக்கு,  இவற்றுடன் உள்ள தொடர்புறவு நீடிக்குமாறு ஓர் வழியில்லை என்பதறிக.

எடுத்துக்காட்டு:   அதழ் > இதழ்.   முறைமாற்றுத் திரிபும்  அதுவே. ( இதழ் - அதழ் எனினுமது ).

அதுபோலவே, கடம் என்பதும் குடமென்று வரும்.  ( அ - இ அல்லது இ-அ).

கடமென்பது  காடு அல்லது தாழ்வரு செடிகொடிகளும்  ( தாழ்வரம்> தாவரங்(கள்)  நிறைய வளர்ந்து  கடந்துசொல்லற்கு  இயலாமை போலும் ஓர் அரிய நிலையை உண்டாக்குமிடம்.  கடு > கடம்;  கடு > (முதனிலை நீண்டு) காடு என்று இச்சொற்களின் உறவு கண்டுகொள்க.

கடம்  மற்றும் குடம் என்ற இருசொற்களும்,  திரிபெழுத்துக்களால் உறவாயின என்பது மட்டுமன்றி.  பொருளிலும் தொடர்பு உள்ளவை.

குடத்திட்டவை,  அதைக் கடந்து செல்ல இயலாமையும் இச்சொற்களின் பொருளுறவு ஆகும்.  காட்டையும் கடத்தல் கடினம்.  குடத்தின் சுற்றுக்கட்டினையும் உள்ளூற்றிய நீரினால் கடந்து செல்ல முடியாது.  இங்கு முடியாது என்று நாம் சொல்வது,  மிகமுயன்றாலே முடியுமென்று பொருள்கொள்ளவேண்டும். 

மனிதன் காட்டைக் கடப்பதற்கு விடா முயற்சி தேவை.  நீருக்கோ இட்ட அரிசி முதலியவற்றுக்கோ,  நிறைவடைந்தாலன்றிக் கடத்தல் இயலாது.  நிறைவு கொண்டாலும், குடவாய் கடக்கும் நிலை எய்தினாலன்றிக் கடக்க இயல்வதில்லை.

கடம்  - மலைச்சாரல் -  அடிப்படைப் பொருள்:  கடக்கக் கடினம்,

குடம் -  குடவாய் கடக்க நிறைந்தாலன்றி,  கடக்க இயலாமை.

வேங்கடம் என்பது வேகும் அளவு வெப்பமிகை உணர்த்துகிறது.

வேகு கடம் என்பவற்றில்,  கு என்னும் வினையாக்க விகுதியும் கெட்டது. மூளையற்றவன் தான் விகுதிகளைக் கட்டி மாரடிப்பவன். இன்னொரு சொல்லிருந்து உதவுமா என்பதே கேள்வி. இல்லையேல் இல்லை பயன்.

இனி,  குடம் எனற்பாலது,  குடைவாகவு மிருத்தலால்,  குடை + அம் > குடமாகும். பகுதியும் விகுதியுமிணைய,  ஈற்று ஐ  கெட்டது.   கடு > குடு> குடம் என்றும் விளக்கலாம். வேறு சொல் அமையுங்கால்,  விகுதிகளை விடாமல் வைத்திருத்தல் சில வேளைகளில்  வேண்டற்பாலதால்.   குடையம் என்று ஒரு புதுச்சொல் அமைக்கையில் வேறுபடுத்த,  அதை வைத்துக்கொள்ளலாம்.  

வாத்தியக்குழுவில், குடம் கடமெனப்படும்.  இது Gadam  அன்று.  கடம் தான். எடுத்தொலித்தல் தவிர்க்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


குமாரி என்ற சொல்.

 கொம்மை என்பது  ( கொம் )  ஓர்  அடிச்சொல் ஆகும்.

ஒரு சொல்லின் உறவுச்சொல்லைக் கவனித்தால் பொருள் தெளிவாகிவிடும்.

கொழு என்ற சொல்லிலிருந்து கொழுப்பு.  கொழுமை என்ற சொற்களும்,  கொழுத்த,  கொழுவிய என்ற சொற்களும் வருகின்றன.  "கொழுவிய வாத்து,  ஆற்று நீரில் விழுந்துவிட்டது"  என்பது ஒரு வாக்கியம்.

கொழு கொழு என்று இருந்தவள்,  கோவிட்டுக்குப்பின் இளைத்துவிட்டாள் என்பது இன்னொரு வாக்கியம்.

கொழு  >  கொழுமை.

கொழுமை >  கொம்மை.   இதிலிருந்து   " ழுகரம் " நீங்கினால்  கொம்மை.  இதனமூலம்,  பொருள் தெளிவாகிவிடுகிறது.

கொம் >  கும். உருண்டு திரண்ட சதைப்பிடிப்புள்ள தன்மை.  இது இளம் வயதினர்க்கு உள்ளதாகும்.

கும் >  குமரன்  > குமரி.

இவை இருக்கட்டும்.  குமாரன், குமாரி என்பன காண்போம்.

கும் -  உடல்திரட்சி உடைமை.

ஆர் -  நிறைவுடைமை.

கும் + ஆர் + இ  >  குமாரி.   இளையவள்.  கொழுகொழு வென்னும் உடலள்,  திருமணம் ஆகாதவள்.

குமாரன் என்பது ஆண்பாற் சொல்.

பிற வகை விளக்கங்களும் உள்ளன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 8 டிசம்பர், 2022

Here a Child with her two Bodyguards

 


Leah with her two 24/7 Security.

When I decided to descend
To this beautiful earthen paradise, 
The angels told me, you go slow!
Every place you can find 
In its once clean atmosphere,
And even top of its crusts ,
Is much defiled by virus and bacteria.
Meeting my friends Yuki and Lara.
Came to know they were willing to descend first
And Provide me with Protection and Care!
They came first to provide the cover.

Reaching my sought after nice home, 
And finding Yuki -  Lara pair in it, 
Running about and playing  and playing,
With greetings to my beloved mom and dad,
I took up position, in their midst.
Yuki on my right,
Lara on my left. 
After drinking sweet sweet milk.
Here I am, enjoying myself.

Hi People of the Earth,
Our Greetings to all of you.

Long live, Earth and Sky.
May the Lord in heaven protect you all.


புதுவரவு காக்கும் செல்லங்கள் இருவர்


புதுவரவாகிய பொன் இள வரசி.
இலியா என்னும் இணையற்ற செல்வம்,
புவிசெல்வ தாயின் மெதுவாய்ச்  செல்க என,
வான் தேவதைகள் மேன்மொழி புகல,
ஏனோ அஞ்சுவேன் இனியும்  யான் என,
தானிரு செல்லங்கள் யூகி லாரா
தூதுவர் களாக  முன்செலச்  செய்து,
கிருமிகள் நோய்கள்  சூழலைத் தவிர்த்து,
விரும்பிய  வீட்டினை புவியில் நோக்கிட, 
வீட்டினுள் யூகியும் இலாராச் செல்லங்கள்
ஓட்டம் ஆட்டம் பெருகிய மகிழ்வில் 
ஆங்கிருந் தனரே  அதுகண்டு இறங்கி
ஏங்கரு  இல்லத்து ரோஷினி பிரகாஷ்
இவர்கள் தம்முடன் இனிது வைகிய
புதல்வியாக ஈண்டு தோன்றினர் !
அன்பும் அணைப்பும் ஏமமும் ஓங்கிய
பண்புயிர் இருவர் புடைசூழ் காவல்
நுகர்தரு வாழ்வில் பாலும் ஏற்ற 
 ஊண்பிற யாவும்  ஒப்புடன் மகிழ்ந்து
அல்லும் பகலும் செல்லங்  களுடன்
சொல்லி முடியா இனிமையில்  செல்வி.
யாவரும் மகிழ்க.   வானும் பூமியும் 
தேனெனத் திளைக்க. தேவர் தமக்கு
வாழ்த்தும் வணக்கமும்  .யாவும்  உரியவே.


Photo from Leah's Mom Roshini and  Dad Prakash

THANK YOU MR AND MRS PRAKASH. ROSHINI.
BEST REGARDS FROM SIVAMALA BLOG.





கவியும் பொருளும்

 அன்பர் ஒருவர்,  தெரிவித்த வாழ்த்துக்கு, யாமெழுதிய பதில் ஒரு சிறு கவியானது.  அது இதுதான்.

விண்ணதில் விரிந்து

வியாழனில் சிறந்து

கண்களில் பணிந்த

காலை வணக்கம்.


இன்று வியாழக் கிழமை.

கைகளால் பணியலாம்.  கண்களால் எப்படிப் பணிவது. இவ்வாறு ஒரு கேள்விக் கணை தொடுக்கலாம். 

பணிதல் கண்கட்குள் நடைபெறுகிறது.

நேராகப் பார்த்துக்கொண்டிருந்த உங்கள் கண்களை 45 பாகைக்குக் கீழிறக்கி இமைகளை சற்று மூடித்திறந்து அப்புறம் நிமிர்த்த வேண்டும். அப்படித்தான் பணிதலைத் தெரிவிக்க வேண்டும். 

கண்களால் என்னென்னவோ செய்யலாம்.

கண்களால் காதல் காவியம்

செய்து காட்டிடும் உயிர் ஓவியம்

என்று கூத்தாட்டில் பாடுவர்.  காவியமே செய்கையில் ஏன் பணிதல் முடியாது?

ஆகவே பொருள் இதில் பொதிந்துள்ளது.   படித்து மகிழ்க.

விரிந்த கோள்களில் வியாழன் ஒன்று.  விய  என்பது விரிவு குறிக்கும் அடிச்சொல்.  ஆழன் என்பத்  ஆழ் + அன்.   ஆழமானதும் ஆகும்.  அன் என்பது விகுதி.

கேட்டோம், வியந்தோம் .  

கேட்டு விரிதலைத் தான் வியந்தோம் என்ற சொல் தெரிவிக்கும்.

ஆவென்று கத்திக்கொண்டு சரிந்து விடுதலை ஆச்சரியம் என்ற சொல் தெரிவிக்கிறது.  Very dramatically descriptive term.

அறிக மகிழ்க.

எழுத்து மாறுதல்கள் பின் சரிசெய்யப்படும்.

மதுரம் என்ற சொல். அமைபு

அமைபு,  அமைப்பு வேறுபாடு:  

அமைப்பு என்ற சொல்லுக்கும்  அமைபு என்ற சொல்லுக்கும் வேறுபாடு உள்ளது. இது தெரியவில்லை என்றால் அதை அறிந்துகொள்ளுவது நன்று.  அமைபு என்ற இச்சொல்லில்,  தன்வினைக் கருத்து உள்ளது.   இதையும் அறிந்துகொள்ளுதல் இனிதேயாகும்.

மொழிநூலறிஞர் வேங்கடராஜ்லு ரெட்டியார், " தமிழ்ச்சொல்லமைபு" என்ற சொல்லாய்வு நூலை எழுதியுள்ளார். சுருக்கமாகச் சொல்வதானால்,  தமிழ்ச் சொற்கள் தாமே எவ்வாறு உருவெடுத்தன  என்பதைப் பற்றிய நூலே அவர் எழுதி வெளியிட்டது ஆகும்.  தமிழின் பல சொற்கள்,  மக்களின் பயன்பாட்டில் இயற்கையாக எழுந்தவை ஆகும்.  A similar incidence is the distinction  between Natural Law and Positive Law.

மதுரம்:

இன்று மதுரம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

மது என்ற சொல்லே " மயங்குவது"  அல்லது  " மயக்குவது" என்ற சொல்லுருக்களின் குறைச்சொல்லே  ஆகும்.  இவை இரண்டையும் குறைச்சொற்களாய்க் கருதாமல்,  பகுபதங்கள் ஆதலின், தொகைச்சொற்களாய்  ஆசிரியர் சிலர் காண்பர். இப்படிக் குறியீடுகள் செய்வதில் பயன் இருந்தால் அதுவும் நன்றே.  பயனில்லை என்பது எம் கருத்தன்று.  எத்தகு பயன் எங்கு என்பவற்றைப் பொறுத்து, இக்குறியீட்டை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

மது + உரு + அம் >  மதுரம்  ஆகும்.  அதாவது இச்சொல்லின் பொருண்மை யாதெனின்,  உண்மை மதுவாக இல்லாமல், மதுவைப்போன்ற ஓரின்பத்தை வருவிக்கும் பொருள் என்பதே  அர்த்தம் ஆகும்.  அப்பொருள் தரும் சுவையையும் இச்சொல் குறிக்குமாறு விரியும்.  இஃது ஒப்பீட்டு அமைவு ஆகும்.

மதுரம் என்ற சொல்லில் தகரம் இரட்டிக்கவில்லை. அதாவது " மத்துரம்" என்று வரவில்லை.  அப்படி வந்திருக்கவேண்டுமென்று கருதினாலும், அஃது பின் இடைக்குறைந்து மதுரம் என்றாவதனால், இந்த வாதத்தில் அத்துணைப் பயனில்லை என்று தள்ளுபடி செய்யவேண்டும். வலி இரட்டித்தல் முதலியவை சொல்லமைபில் முதன்மை உடையதன்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


எச்சரிக்கை என்ற சொல் அமைதல்

 இருட்டு நேரத்தில் கலங்கள் அல்லது கப்பல்கள் கரைக்கு வருமானால், கரையில் எவ்விடத்தில் அணைய வேண்டும், அல்லது  அருகில் எங்கு நங்கூரம் இடவேண்டும் என்று கப்பலோட்டிக்குத் தெரியவேண்டும்.  மின் ஆற்றல் பெரிதும் இல்லாத காலத்தில்,  மின்விளக்கும் இதற்குப் பயன்படுத்தப் படவில்லை.  கரையில் ஓரிடத்தில் தீயை மூட்டி,  கப்பலோட்டி அறியும்படி எரித்தார்கள்.  கப்பலோட்டியும் கவனமுடன் வந்து கரையை அடைந்தான். 

எரித்து அறிக்கை செய்தபடியினால், அது எரித்த அறிக்கை ஆனது. பின் திரிந்து எரிச்ச  அறிக்கை > எச்சரிக்கை  என்றானது.

எரிச்சறிக்கை >  எச்சரிக்கை. ஆனது. ரிகரம் இடைக்குறை.  ஒரு பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு எழுதிய ஒப்பந்த அறிக்கை,  முடிச்ச அறிக்கை >  முடிச்சரிக்கை > முச்சரிக்கை ஆனது போலுமாம்.

தொடக்கத்தில் "எச்சறிக்கை" என்று எழுதியவர்கள்,  அதன் வரலாறு உணராமையால்,  றி என்னுமெழுத்தை ரி ஆக்கிவிடினும்,  இது மொழியில் பயன்பாடு கண்டபின்,  இப்போது இதனை மாற்றுவதற்கில்லை. இது பிற்கால நூல்களில் கண்டவாறே எழுதவேண்டியுள்ளது.  இது திரிபு என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும், ஒரு முழுச்சொல்லின் பகுதியாய் வரும் றி,  தன் வன்மை இழந்து ரி என்று ஒலித்தமையும் காரணமாகலாம்.  அவ்வாறாயின் இத்திரிபு ஒலிநூல் முறைப்படி அமைந்தது கண்டு மகிழ்வெய்தலாம். எதற்கும் மகிழ்ந்திருப்பதே இப்பிறவியின் தலையாய நோக்கமாகலாம்.

இவை பன்மடித் திரிபுச் சொற்கள்.  இவற்றுள் அறிக்கை > அரிக்கை என்று மாறிற்று  என்பது  தலையாயது ஆகும்.

ஆரியர் என்ற சொல் அறிவாளிகள் எனற் பொருட்டு என்பர்.  இதிலும்  அறிந்தோர் என்ற றிகரம் திரிபில் (ர்) ரிகரம் ஆனதாகக் காட்சியுறுதல் காண்க. இவ்வாறுஎழும் திரிபுகள் பற்றி முன் உரைத்துள்ளோம்.

அறி > ஆர்  ( அறிவாளிகள் ஆர் விகுதி பெற்றனர்). இதன் தொடர்பற்றி விளக்கம் தேவைப்பட்டால், பின்னூட்டம் செய்க.

இவை பின் பொருள் விரிந்து எல்லாவித முன்னறிவிப்புக்கும் அல்லது எதையும் செய்யுமுன் கவனமில்லையேல் ஏற்படும் இடர்முன்னறிவுப்புக்கும் பயன்படுத்தப் பட்டன.

இவை பற்றி மேலும் சில விளக்கங்கள் உண்டு.  அவற்றை இங்கு எழுதவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

நச்சினார்க்கினியர் என்ற பெயர்.

 நத்தி உடன் வந்தவர் என்ற வாக்கியத்தில், நத்துதல் என்ற சொல்லுக்குப் பொருள் தமிழ் மொழி பேசுவோர்க்கு தெரியும் என்று உறுதியாகச் சொல்லலாம். தெரியாமல் இருப்பின்,  அல்லது கொஞ்சம் விளக்கம் வேண்டின், கீழ்வரும் இடுகைகளைப் படிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post.html

https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_29.html

https://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_29.html  (நத்தை ).

இவற்றுள்  பல சொற்கள் விளக்கப்பட்டுள்ளன.

நச்சு-தல் என்னும் வினையும் காணப்படுகிறது.  யாரும் விரும்பினவனையே நத்திச் செல்வர்.  நச்சுதல் என்பதற்கும் விரும்புதல் என்ற பொருள் உள்ளது. ஒன்று மற்றொன்றன் திரிபு என்னலாம்.  நசைஇ என்ற அளபெழுந்த சொல்லும் உள்ளது.

எனவே,  நத்திச் சென்றவர்க்கும் விரும்பிச் சென்றவர்க்கும் ( நச்சுதல்- நச்சினவர்) இனியவர் என்பதே நச்சினார்க்கினியர் என்ற பெயர்க்குப் பொருள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்/


UNFORGETTABLE SIGHTS OF MOM AND GRANNY.




BEAUTIFUL New citizen to the world,  Leah  with her caring mother. Leah is carefully watching her mother." Why am I not given a pair of spects like yourself?"

எனக்கும்தான் கண்ணாடி போட்டுக்கொள்ள ஆசை.
நீ மட்டும் போட்டுக்கொண்டாய்.  நானும் ஒரு குடிமகள் தான்.





A similar careful scrutiny took place many years ago.  This time Roshini seems to have been mesmerized by the beauty of her granny.
Reading a fairy tale in her face before even going to kindergarten.


கண்ணில் தோன்றும் காட்சி எல்லாம் என் பாட்டியின் அழகுதான் என்கிறார் பேத்தி ரோஷினி. ஏரிக்கரையில் தோன்றிய தேவதையா? மாரிகாலத்தில் மழைத்துளி மின்னும் கன்னங்கள் உன்னவை பாட்டி.
இப்போதே உன்னைப் படித்துவிட்டேன். சிறுவர் பள்ளிக்கு ஒன்றும் செல்லவேண்டாம்.

 

பவணந்தி என்ற பெயர். (நன்னூல் ஆசிரியர் ) 13th c AD approx

 பவணந்தி என்பது ஒரு கொடி.  இக்கொடி மற்ற கொடிகளைப் போல்  படரும் கொடியே.  ஓர் முனிவர் பெயருமாம்.

பர  என்பது முதற்சொல்.  அடுத்து நின்றது  வண் என்ற இன்னொரு சொல். இவற்றைச் சேர்க்க, பரவண் ஆனது.

அந்தி என்பது அழகு என்றும் பொருள்தரும்.  அம் :  அழகு.  தி என்பது விகுதி.

பரவண் என்பது பவண் என்று இடைக்குறைந்து  அந்தி என்ற சொல்லுடன் இணைவுற்றது.

இந்த இடைக்குறைச் சொற்களையும் அறிக:

பருவம் >  பவ்வம்.

கடலும் பரந்தது ஆகலின்,  பவ்வம் ஆனது.  பருவமும் ஆம்.

பரவு அம் > பவு அம் > பவ்வம். 

அந்தியிற்பரவும் அழகு எனினுமாம்.

பிறவழிகளிலும் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சுமங்கலிப் பூசையும் இராகுகாலப் பூசையும்

 சுமங்கலிப்பூசை என்பது சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு  சிங்கப்பூரில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதை இங்கு அறிமுகப் படுத்தியவர், இலங்கையிலிருந்து வந்து  சிங்கைச் சிவதுர்க்கா ஆலயத்தில் ( முன்னையப் பெயர்:  சிவன் ஆலயம் ) இதனைத் தொடங்கியவர் ஆவார்.  வனஜா அம்மையாரே தம் நண்பர்களுடன் இதில் முதலில் ஈடுபட்டவர்.  இது பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றது.  அடுத்துவந்த செவ்வாய்க்கிழமையில் இராகுகாலப் பூசை என்ற ஒரு நிகழ்வும் நடைபெற்றது.

16.8.2016ல் நடைபெற்ற  இரு மேற்கண்ட வகைப் பூசைகளிலும் $6672 (வெள்ளிகள்) செலவிடப் பட்டிருக்கலாம்.  இதனினும் கூடுதலாக இருந்திருக்குமே தவிரக் குறைந்திருக்காது.  இது கோவிலுக்குக் கட்டிய தொகையே.  மற்ற அலங்கார வகைகளுக்கும் பூமாலை முதலியவற்றுக்கும் கூடுதல் செலவு ஆகியிருக்கும்.  அவற்றை முன் இடுகைகளில் கண்டுகொள்க.






இந்தப் பழைய பதிவுகளிலிருந்து  அறியப்படுவன.


As you can see, these were unedited and likely to be originals.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


வீட்டுப் பூசைகள்


 பூசைகள் கோவில்களில் மட்டுமே நடைபெறுபவை அல்ல.  பலர் வீடுகளிலும் இறைப்பற்று மேம்பட்டுப் பூசைகள் நடைபெறுகின்றன. நம்பாதவர்கள் தொகை குறைவு என்பதே எம் கணிப்பு ஆகும். பல்வேறு நம்பிக்கைகள் உடையவர்களும் அவரவர்கள் நம்பிக்கைகளுக்கு இணக்கமான முறைகளில் இத்தகு பூசைகள், பிரார்த்தனைகள்,  செபங்கள், ஓதுதல்கள் முதலியவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள். அதனால் நன்மைகள் அடைதலையும் உணர்கிறார்கள்.

இவைகட்கு உணவு ஏற்பாடு செய்யும் வணிகர்களும் சிங்கப்பூரில் நிறைய இருக்கிறார்கள்.இந்நகரம் அதற்குப் பெயர் பெற்றதாகும். ஏற்பாட்டாளர்களுக்கும் குறைவில்லை.  

மேற்காணும் ஒரு பதிவு இதை நன்கு உணர்த்தவல்லதாகும்.

பல்வேறு வணிக வகைகளிலும் உணவுப் பகிர்மானம் சிறந்தது ஆகும். இது ஒரு விளம்பரம் அன்று.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

புதன், 7 டிசம்பர், 2022

உண்மை சொல்லும் குற்றொளிப்படம்

 துருக்கரின் துணைவி சொன்ன  ---- பொய்

தோய்ந்த மொழிகளெல்லாம்,

பருக்கையும் குழம்புமென்று ----  அள்ளிப்

பருகிடும் குழுவுமுண்டே.

உரக்கவே உளவுரைக்கும் ----  குறுவை

ஒளிப்படம் நிறுவியுள்ளோம், 

நறுக்கென உரைக்குமுண்மை --- அதனால்

நமக்கொரு  சிரமமில்லை,


குறுவை ஒளிப்படம்  -----  CCTV.  குறுகிய மின் சுற்றில் ஓடுவது

துருக்கரின் துணைவி  ---  துருக்கியைச் சேர்ந்த திருட்டுக் கும்பல்  பெண்

இவர்கள் பரப்புரை ஏற்போர் உண்டு.

உள -  உள்ளவை

சிரமம் -  சிறு தொல்லை.  இது சிறுமம் என்ற  மறைந்த சொல்லின்

திரிபு

திங்கள், 5 டிசம்பர், 2022

கார்த்திகைத் தீபம்

 தீபம் மறுமலர்ச்சி,                                                                                                                      தேனினிய மீள்சுழற்சி,                                                                                                            காவந்துக் கனிவளர்ச்சி,                                                                                                    கல்லுருகும் தமிழுணர்ச்சி                                                                                                கார்த்திகை இறைநிகழ்ச்சி                                                                                              காலமெல்லாம் நம்புகழ்ச்சி.


கார்த்திகைத் தீபம் என்றால் அண்ணாமலையார்க்கும் மிக்கச் சிறப்புகள் மகிழுறுமாறு நடைபெறும்.  இந்தக் காலக் கட்டத்தில் ஒரு வாழ்த்தைத் தெரிவித்தலும் மிகுசிறப்புத் தருவதே ஆகும்.  எமக்கு அன்பர் ஒருவர் வாழ்த்துத் தெரிவித்தார்.  அவர்க்கு யாமெழுதிய பதிலெழுத்து,  எழுதுகோல் சென்றபடி வரைவுகண்டது.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இதற்குப் பொருள் ஏதுமுண்டா என்று வினவுங்கள். பொருள் சொல்லத் தெரிந்தவன் எதற்கும் ஒரு பொருள் சொல்வான்.  தெரியாதவனுக்குப் பொருளிருந்தாலும் ஒன்றும் தோன்றுவதில்லை. உலகம் அவ்வாறானதே ஆகும். உங்களுக்குத் தோன்றும் பொருளை நீங்கள் மேலெடுத்து உரைகொள்க. 

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

கலம், கலன் என்பது கப்பலைக் குறிப்பதெப்படி.

 கலன் என்ற சொல்லுக்கு நம் முன் தோன்றும் உள்ளுறைவுகள் பலவாகும்.

கலன் என்பது அணிகலன்களையும் குறிக்கும்.  இஃது  "கலன் கழி மடந்தை" என்ற தொடரில் கண்டுகொள்ள  இயல்கின்றது.  இதன்பொருள் "விதவை" என்பதாகும்.  கையறு நிலைக்கு வருந்தி நிற்கும்  பெண்,  கைம்பெண். இதனைக் கையறவு  எனலும்  ஆகும். 

கடிஞை என்பதும் கலம்தான். இது கடு என்பதனடியாகத் தோன்றியது காணத் தெரிகின்றது. கடு> கடி.  கடினமான ஓட்டாலானது.

கலம் - கலன் என்பவை வெவ்வேறு   அடிச்சொற்கள் பொருந்தி அமைந்து உருவாகி ஓர்முடிபு கொண்ட சொல்லாகும் வாய்ப்பினையும் ஆய்வு செய்தல் வேண்டும்.  கடிஞை என்பது கடு என்பதடித் தோன்றியதால், கலன் என்பதற்கும் அஃது அடியாய் இருக்குமா என்று நோக்குக.

கடத்தல் என்ற சொல்லுக்கும் கடு > கடு+ அல் என,  கடு எனல் அடியாதல் முன் உரைக்கப்பட்டது.  கடல் கடத்தல் ஆதிநாளில் கடத்தற்கரியது,  அதற்கு அல்லாதது என்று மக்கள் எண்ணினர்.  இந்த அச்சத்திலிருந்து நாளடைவில் பல் இனங்களும் விடுபட்டன. முயற்சியும் பயிற்சியும் தேவைப்பட்டன.

அன் என்ற சொல்,  அணுகி நிற்றலைக் குறிக்கும்.  அன்-பு என்ற சொல்லின் பொருளில் இவ்வணுக்கம் தெளிவாகிறது.   அன்  என்பது அண் என்பதற்கு இணை நிற்பதான சொல்.

கடு> கட.

கட >  கட + அல் > கடல்.

கடு>  கடி > கடிஞை.  பிச்சைக்கலம். இரப்போர்கலம்.

கடு>  கட + இல் + அன்  >  கடிலன் >  இடைக்குறைந்து,  கலன்.

கடு > கட > கடப்பு+ அல் > கடப்பல் > கப்பல்

கடப்பதற்கு ஓர் இல்லம்போலும் அமைந்தது,  கலம் என்பது தெரிகிறது.

நீருடன் ஒட்டி மிதக்கும் இல்லம் என்பதை அன் என்ற ஈறு  தெளிவாக்கும். விகுதியாகவும் இரட்டித்த பயன் தரும் இது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

புதன், 30 நவம்பர், 2022

கு, கூ. குடு, குவ, குவி முதலான அடிச்சொற்கள் விளக்கம்.

 கு என்ற ஒலிக்கு மிகப் பழங்காலத் தமிழில்  " கூடியிருத்தல்",  "சேர்ந்து(வாழ்தல்)"   "ஒன்றாகவளர்தல்"   என்றிவ்வாறான பொருண்மைகள் அடிப்படையாக இருந்தன என்பதை இற்றை நாள் ஆய்வுகள் தெரிவித்தல் தெளிவு.  இப் பொருண்மை தெரித்தலில்,  குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடுகள் இல. கூடு என்பதும் இணைந்திருத்தல்  குறிக்கின்றது.  குடு  ( குடும்பம்,  குடி)    என்பதும் அவ்வாறே இணைந்திருத்தலைத்தான் குறிக்கின்றது. கூடு என்பது குருவிகள் கூடிவாழ் இடத்தினைக் குறிக்கிறது என்பதையும்,  மனிதன் செய்துவைத்த கூண்டு என்பது இவ்வடிச்சுவடுகள் பற்றியமைந்த சொல் என்பதையும் அறிய எறிபடை  அறிவியலைத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தான் சொற்கலை* ( சொல்லின் கலை அல்லது கல்வி )  நமக்கு நுகர்பொருளாயும்  பரிமாணம் அடைந்துள்ளது.  

குவி(தல்).  குவவு(தல்), 

குவிந்த வேர்வகை,  குவா என்று  ஆவிறுதி பெற்றமைந்ததுடன்,  கூவை என்றும் நெடின்முதலாயும் அமைந்தது காண்க.   குவி > குவா,  இது  கல் > கலா என்பதுபோலும்,  காண்க.

குவிந்ததுபோலும் ஒரு சிப்பி,  குவாட்டி என்னும் பெயரினதாயிற்று.

குவியுருவினதாய பாக்கு,  குவாகம் ( குவி+ அகம்).

குவளை -  குவியுருவக் கடுக்கன்.

குவளை - குவியுருவின் மலர். 

குவளை மாலை யணிந்தார்,  வேளாண்மக்கள்,  எட்டியணிந்தார் செட்டிகள் போலுமேயாகுவர்.

இனிக் கூடி யிருக்கும் , வாழும் ஊர் குவலிடம் எனப்பட்டது.

நாம் வாழும் ஊர் . நம் ஊர்.   அப்பால் உளளது உலகம்.   அப்பால் என்பதை "அ" என்ற சேய்மைச் சுட்டு உணர்விக்கும். 

குவ >  குவல் >  குவல்+ அ+ அம் (விகுதி) >  குவல+ய்+ அம் > குவலயம்.

குவ> குவல்  ( குவ+ அல் )  - அல்:  சொல் இடைநிலை.

ய்  -  யகர உடம்படு மெய்.

அம் -  அமைந்தது குறிக்கும் இறுதிநிலை ( விகுதி).

குவலிடம் -  குவிந்து வாழும் ஊர்.

குவலயம் -   சூழ் உலகு..

குறிப்புகள்

பரிந்து மாணுதலே பரிமாணம்.  பரிதலாவது உள்ளிருந்து புறம்வருதல் (  சிறந்து விரிதல்.பின் மாணுறுதல் ).  இச்சொல் எழுத்து முறைமாற்று அமைப்பில் விசிறி > சிவிறி என்றமைதல் போல்,  பரிணாமம் என்று மாகும். இன்னோர் எ-டு:   மருதநிலம்சூழ் நகரம்:    மருதை > மதுரை.  இதைப் பண்டை மக்கள் மருதை என்றே அழைப்பினும்,  மதுரை என்று சொன்னது கல்வியுடையார் செய்த திரிபு என்று முடிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.

எழுத்துப் பிழைகள்  - பின்னூட்டமிட்டு உதவுக.

திருத்தம்: சொற்கலைதான், " சொற்களை"  அன்று. கற்கப்படுவது எதுவென்றாலும் அது கலை. கல்( கற்பது என்பதன் வினைச்சொல்) > கலை.


சடிதி, மற்றும் சடுதி, ஜல்தி

 அடு >  அடுத்தல் என்பதன் வினை எச்சம்  அடுத்து என்பது.

அடுத்து நடைபெறும் நடனக் காட்சி என்ற தொடரில்  அடுத்து என்பது நடைபெறும் என்பதற்கு அடைவாக வந்தபடியால் அஃது வினை எச்சம் ஆகும்.

ஒன்றற்கு அடுத்து இன்னொன்று நிகழுமானால் அது விரைவாக நடைபெறுதலைக் குறிப்பதனால்,  அது விரைவு குறித்தது.  ஆகவே அடுத்தது விரைவுமாகும்.

இதிலிருந்து,   அடு>  சடு >  சடு+ இது + இ >  சடிதி என்ற சொல் பிறந்தது.  இடையீடு இன்றி அடுத்து வருதலை உடையது எனவே, விரைவு ஆகும்.

சடு என்பது தி விகுதி பெற்று சடுதி என்றுமாகி விரைவு குறிக்கும்,

இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பீடு மன் > பீடுமன் > பீமன் ( வீமன்).  பீடுடைய மன்னன். 


சடுதி அல்லது சடிதி என்பது ஜல்தி என்று திரிந்து விரைவு குறித்தது. சடுதி அல்லது சடிதி என்பது மூலச்சொல் ஆகும்.  அடுத்து நிகழ்தலால் கால தாமதம் இன்றி நடைபெறுதல் குறித்தது.

காலம் தாழ்த்தாமல் ஒன்று நிறைவேறினால்,  காலம் தாழ்த்தி மதிப்புறவில்லை என்று பொருள். ஆகவே,  தாழ்+ மதி >  தாமதி என்பது காலம்தாழ்வுறுத்தலைக் குறித்தது.  தாழ் என்ற சொல்லில் ழகர ஒற்று கெட்டது.

தாழ் + கோல் > தாழ்க்கோல்> தாக்கோல்.   கதவில் தாழ ( கீழ்ப்பகுதியில் உள்ள) கோல்.

இங்கும் ழகர ஒற்றுக் கெட்டது. 

தாழ்க்கோல் என்பது தாட்கோல் என்றும் திரியும். தாட்பாட்கட்டை என்றும் வரும்.  தாட்பாள் என்றும் வந்துள்ளது.

தாழ்க்கோல் என்பது தாழக்கோல் என்றுமாகும்.

இக்கோலைச் செறிக்கும் வாய் மூட்டுவாய் எனப்படும்.

கதவிற் சேர்ந்தபடி ஒரு மூட்டும் கதவுப்பலகைக்கும் மூட்டுக்கும் இடையில் ஒரு செறிவாயும் இருப்பதால்,  மூட்டுவாய் ஆயிற்று.

தாழ்ப்பாள் உ

ள்விழும் இரும்புக்கூடு "முளையாணி"  ஆகும்.

கதவை முடுக்கி இருத்தும் ஆரம்  ( வளைவு)  ஆதலால் அது முடுக்காரம் என்று அமைந்து  பின் முக்காரம் என்றும் ஆனது.

இனிச் சதி என்பதைக் காண்போம்.

அடுத்திருந்து செய்வதே சதி.

அடு > சடு >  சடுதி >  ( இடைக்குறைந்து )  > சதி.   ( அடுத்துக்கெடுத்தல்).

சதி > சதித்தல் ( வினையாக்கம்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


சனி, 26 நவம்பர், 2022

திருட்டுப் போனால் என்செய்வது?பூசைக்குரிய நகை!

( இது ஒரு பழைய நிகழ்ச்சியைக் கூறும் வரிகள்) 


கோவி   லென்பது பொதுவிடம் --- அங்கேயும்

கோணல் புத்தியர் வருவதுண்டு!

ஆவி  போயினும் பிறர்பொருள் --- ஏலா

அன்பர்  தாமுமே  வருகின்றனர்.

திருடர் இயல்பு:

நீட்டும் கைக்கெது கிடைகுதோ  ---  எண்ணம்

நீங்கா முன்னதை எடுத்திடுவர்

பாட்டின் நல்லொலி திரும்புமுன் ---  எடுத்துப்

பக்கெனப் பைக்குள்  போட்டிடுவர்.

நகைகள்

அம்மன் போட்டிட  அணிசெய  ---   பற்றர்

ஆழ்ந்தும்  எண்ணியே  வாங்கினவே!

எம்மின் கண்களை மறைத்தவர்  --- திருடர்

கொண்டு   சென்றிடில் செய்வதென்னே?


போனவை போனவையே  ஆகட்டும் நீநெஞ்சே

ஆனவைக்கு  நீமகிழ்  ஆவன --- ஈனுபயன்

நீயறிந்து  மேற்கொள்வாய்  ஆயம்மை தானறிவாள்

ஓயாத தொண்டுசெய் வா.



 

பல நகைகளில் எது தொலைந்தது என்று இப்போது தெரியவில்லை. இருந்தாலும் இதுவும் அங்குகொண்டுவரப்பட்டவைகளில் ஒன்று.


கோணல் புத்தியர் -   நேர்மையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர்.

ஆவிபோயினும்  - உயிர் இழக்க நேர்ந்தாலும்

ஏலா - கொடுத்தாலும் ஏற்க மறுக்கும்

எண்ணம் நீங்கா முன் -  திருடத் தீர்மானித்து,  வசதி இல்ல்லாமல் அதை

மாற்றிக் கொள்ளுமுன்.

பாட்டின் நல்லொலி :  பாடிக் கொண்டிருப்பவர்கள் நிறுத்திவிட்டால்

மற்றவர்கள் பார்க்கக்கூடும்,  அதன் முன்பே திருடிவிடுதலைக் குறிக்கிறது.

ஆழ்ந்தும் எண்ணியே -  நல்லபடி யோசித்து.

ஈனுபயன் -  பிறப்பிக்கும் பயன்.

ஆய் அம்மை -  துர்க்கை அம்மன்.


அறிக மகிழ்க

மெய்ப்பு   பின்னர்



புதன், 23 நவம்பர், 2022

உங்களின் போட்டியாளன்யார்? சொல்: சடுத்தம்.

 நீங்கள் வாழுமிடத்திலிருந்து  ஆயிரம் கல்தொலைவில் உங்களை அறியாத ஒருவன் வாழ்கிறான்.  அவனுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை.  அவன் உங்கள் எதிரியாக ஆகிவிடமுடியாது. உங்களுடன் கூடித் திரிபவன் தான் உங்களுக்கு எதிரியாக வருவதற்கு மிக்கப் பொருத்தமான இயல்புகளை எல்லாம் வெளிக்காட்டி, நாளடைவில் முழு எதிரியாக மாறத் தக்கவன்.

அடுத்திருக்கும் நண்பனே  உங்கள் எதிரி.  அதற்கான கால நேரம் வந்துவிட்டால் கணவனும் எதிரியாவான்; மனைவியும் எதிரியாவாள்.

ஔவைப் பாட்டி என்ன சொன்னாள் என்பது உங்களுக்குத் தெரியும்.

" உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா;

உடன்பிறந்தே கொல்லும் வியாதி ----- உடன்பிறவா

மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரு முண்டு"

என்றது பாட்டியின் மூதுரை.  

உறவும் பகையாகிவிடும்; நட்பும் நஞ்சாகிவிடுவதுண்டு.   ஆகவே எதையும் ஒருகை நீட்டத்துக்கு எட்டவிருந்து கையாளுதல் எப்போதும் நல்லது.

இந்தக் கருத்து, சொல்லமைப்பிலும் இடம் பிடித்துள்ளது.

"அகலாது அணுகாது தீக்காய்க " என்கின்றார் தேவர்தம் திருக்குறளில்.  அது நண்பனுக்கும் பொருந்தும். 

இதையே தெரிவிக்கிறது சொல்லாய்வு.   

போட்டி பகைமையாகவும் மாறும்.   சடுத்தம்  என்பது அடுத்தியலும் போட்டி.

அடு (த்தல்) >  சடு >  சடுத்து + அம் >  சடுத்தம் ஆகிறது.

ஒரு காலத்தில் இச்சொல்வழங்கி  நல்ல வேளையாக இன்னும் நிகண்டுகளில் உள்ளது.  நம் நற்பேறுதான்.

நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வீரம் பேசுவதும் சடுத்தம் பேசுதல் எனப்படும்.

இந்தியாவுக்கு அடுத்தது பாகிஸ்தான்.  அதற்கடுத்தது ஆஃப்கானிஸ்தான்.

உக்ரேன் ரஷ்யாவினின்று பிரிந்தது.  அடுத்துள்ளது.

இவையெல்லாம் பிறப்புக்கணிப்புகளின்படி தொடர்வது.

அடு > சடு என்பது உங்களுக்குத் தெரிந்த அகரச் சகரத் திரிபு.   அமணர் > சமணர் என்பது போலும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




சத்துரு என்பது தமிழ்த் திரிபுச் சொல்.

 இன்று சத்துரு என்ற சொல்லைச் சிந்தித்து அறிந்திடுவோம்.

நட்புடன் நம்முடன் இருப்பவனை நாம் நண்பன் என்கிறோம்.  ஆனால் சத்துருவுடன் நட்பு என்பதோ இல்லை.  நட்பு அற்றொழிந்த நிலையில்தான்  சத்துரு இருக்கிறான் என்பது இச்சொல்லுக்குப் போதுமான சொல்லமைப்பு விளக்கமாகும்.

நட்பு அற்று ஒழிந்த நில்லையில் எதிர்ப்பு மனப்பான்மை உருவெடுத்துவிடுகிறது.

அகரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாகத் திரியும். பலசொற்களை முன் இடுகைகளில் காட்டியுள்ளோம்.  ஒன்று இவண் நினைவுபடுத்திக் கொள்வோம்.  

அமண் >  சமண் > சமணர்.

இன்னொன்று வேண்டுமானால்,  அடு> சடு> சட்டி  ( சடு+ இ).

அடு என்பது அடுப்பில்வைத்துச் சூடேற்றுவது.

இனியும் ஒன்று:  அடர்-  அடை > சடை.  இது ஜடை என்று உருக்கொள்ளும்.

அடர்-  அடை முதலிய ஒரு மூலத்தில் தோன்றியவை.  அடிச்சொல்  அடு என்பது.

அடர்முடி > ஜடாமுடி. 

நட்பு அற்று உருவெடுப்பவன் :  அற்று உரு>  அற்றுரு>  அத்துரு>  சத்துரு.

இப்போது இதன் தமிழ்மூலம் நல்லபடி புரிந்துகொள்ளும் நிலைக்கு உங்களைக் கொண்டுசெல்கிறது.

இன்னொரு சொல்:  சகி என்பது.  ( தோழி).

அகம் >  அகி > சகி.

தலைவியுடன் அகத்தில் தங்கிப் பார்த்துக் கொள்பவள்:  சகி.

அகக் களத்தி >  சகக்களத்தி > சக்களத்தி.   அ - ச.

இயற்சொற்களுக்கு அடுத்து திரிசொற்களைக் கூறினார்  தொல்காப்பிய முனிவர்.  காரணம் என்ன?   திரிசொற்கள் இயற்சொற்களுக்கு  அடுத்துக் கூடுதலாக இருந்தமைதான்.

இன்று யாம் கணக்கெடுக்கவில்லை. திரிசொற்கள் பெருகி, இனமொழிகளும் தோன்றிவிட்ட படியால், திரிசொற்களே மிகுதி. 

எடுத்துக்காட்டு:  

வரு  ஓ >  ( பரு ஓ) > பாரோ    (  வருவாய், வாராய்).

இன்று, அற்று ( நட்பு அற்று) உருவெடுப்பவனே சத்துரு என்றறிக.

இந்த மாதிரித் திரிபுகளெல்லாம் இலக்கணங்களில் காட்டப்பெறா.

( மா = அளவு. திரி =  திரிக்கப்பெற்றது.   மாதிரி - அளவாகத் திரிக்கப்பட்டது.).

சத்துரு:  பிற வகையில் திரிந்ததாகவும் கொள்ளும்  இச்சொல் ஒரு பல்பிறப்பி.

"சத்துராதிப்பயல்" என்பது சிற்றூர்வழக்கு. சத்துரு என்பது சோதிடர்களுக்குப் பிடித்தமானது  ஆகும்.  சத்துரு தொல்லை என்பர்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



வெள்ளி, 18 நவம்பர், 2022

காரணம், காரணி சொல் புரிதல்.

 கரு என்பது ஒரு பெண்ணின் உள்ளிருப்பது. அதை வெளித்தெரியும் பிற அறிகுறிகளால் தெரிந்துகொள்கிறோம்.

கருமேகத்தில் உள்ளிருக்கும் நீர் நமக்குக் கண்ணுக்குத் தெரியவில்லை. அதிலிருந்து மழைபொழிவதால்,  நாம் நீரிருப்பதை  அடையாளம் கண்டுகொள்கிறோம்.

கரு >  கருது > கருதுதல்.

கருவுற்ற மானிடப் பிறவியும்  கருக்கொண்ட மேகமும் நம் முன்னறிவினால் அறிந்துகொள்ளப்படுவன போலுமே,  கருதுதல் என்பது மனவுணர்வினால் நடைபெறுகிறது.  கருது ( வினைச்சொல்) > கருத்து ( பெயர்ச்சொல்) noun formed from a verb.

ஒரு நிகழ்வுக்கான காரணம் காரணி எல்லாம் இத்தன்மையவாம்.

கரு என்பதிலிருந்து காரணம், காரணி என்ற சொற்கள், தமிழில் அருமையாக அமைந்தவை.  வெளியில் தெரிவன அல்ல.  சுழியனுக்குள் பாசிப்பருப்பும் சர்க்கரையும் போல.  மேலுள்ள மாவுத்தோலை நீக்க,  இனிய உள்ளிருப்பு நாவில் பட்டு இனிமை தருகிறது.

கருது என்ற வினையமைப்பை உணர்ந்து யாம்  இன்புற்றோம்.

தமிழ் என்ற சொல்லுக்கே 100 பொருள் சொன்னார் பெரும்புலவர் கிருபானந்த வாரியார்.  என்னே சொற்களின் இனிமை.

கருத்தினை அண்மி  ( நெருங்கி அணைந்து)  நிற்பன காரணம், காரணி எல்லாம்.

கரு +அண் + அம் >  கார் + அண் + அ,ம்>  காரணம்.

கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய் காலமே கார்காலம்.

கார்மழை  -  இவ்வழக்குகள் தெளிக.

காரணங்கள் உடன் தெரிவதில்லை.  சிந்திக்கத் தெரிவன---- கண்களுக்கு,  கருத்தும் மனத்துக்கு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

போரும் மனிதனும்

 போரொன்று வருவதற்குக் காரணிகள் பலவே

போரில்லா உலகெனலோ  ஓர்கனவாம் உண்மை!


வெற்றியதும் தோல்வியதும் கோள்களினோர் தரவே

பற்றிலன்நான் என்பவனைப் பரிந்தணைத்தல் வேண்டா.


பிறர்தருதல் இன்றிவரும் பிணிநலமென் றெல்லாம்

இறைகருணை என்பார்க்கோ  ஒருதுன்பம் இலதே.


செல்வரைக்கும் பற்றிலராய்  இங்கிருப்பார் தமக்குச்

சொல்வதற்குத் துயரமிலை   சூழ்ந்திருவாழ் மனமே.


உரை:-

காரணி -   ( இதன் அடிச்சொல்:  கரு.  இதிலிருந்து வருவது: கருது-தல்..  இதனால் இது உண்டானது என்று கருதுதலே காரணம், காரணி எல்லாம்.

கரு > கார் + அணம் > காரணம்;  கார் + அணி >  காரணி.

கருதும் எதையும் அண்மி நிற்பது காரணி.  )

இந்த அடிச்சொல்: கரு, --  கருப்பு என்றும் பொருள் உள்ளது.

ஓர் தரவு - ஒரு தரவு. கவிதையில் ஓர் தரவு என்றும் வரும்.

இதற்கான அனுமதி தொல்காப்பியனார் வழங்கியுள்ளார்.

பரிந்தணைத்தல் -  இரக்கமுற்று அரவணைத்தல்

தரவு -  விளைவு.  தரப்படுவது.

பிறர் தருதல் - "மற்றவர்களால் இது வந்தது"  என்று கருதுதல்.

செல் வரை -   இறக்குமட்டும்,  சாகும் வரை

பற்றிலராய் -  யான் எனது என்ற மனத்தொடர்பு இல்லாதவராய்.

சூழ்ந்து -  ஆலோசித்து;  இரு =  இருப்பாயாக;  வாழ் -  வாழ்க.


இதன் கருத்து:

வருகின்ற போரும் நிற்கின்ற போரும் என்றெலாம் நம் செயலால் வரவில்லை, கோள்களினால் வருகின்றன என்றிருப்பவர்க்கு,  துன்பங்களிருந்து தம்மைக் கூறுபடுத்திக்கொண்ட  தன்மையதால்,  எந்தக் கெடுதலும் இல்லை. இத்தகையவனுக்கு இரத்த அழுத்தம் முதலிய துன்பங்கள் விளைவதில்லை.  இவனுக்குப் பிறர்தரும் இரக்கமும் தேவைப்படுவதில்லை. எல்லாம் இறைவன் செயல்  என்பவன் தன்  பாரத்தை வெளியில் எடுத்துவிடுகிறான்.  அவனுக்குத் துன்பமில்லை. பற்றிலனாய் இருக்க.   சொல்வதற்குத் துன்பக் கதைகள் இல்லை.  ஆய்ந்திருந்து வாழ்க என்பது இதன் பொருள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.


செவ்வாய், 15 நவம்பர், 2022

சொல் நடுவில் வரும் திரிபு. சொல்: செதிள்.

 அசடு என்பது இசடு என்று வரும் என்றாலும், இந்த உதாரணம் அல்லது காட்டு,  ஓர் அளவிற் பட்டதே.  ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால்  சொல்லின் முதலெழுத்தில் மட்டும் இங்ஙனம் திரிதலுண்டு என்பதை மட்டுமே இது காட்டுகின்றது. ஆதலின் இது ஓர் எல்லையுட் பட்டதே எனவேண்டும்.

சொல்லின் தலையெழுத்தில் வரும் திரிபினை இலக்கணியர், " மொழிமுதற் றிரிபு" என்பர். இந்தக் குறியீட்டில், மொழி என்ற சொல்லுக்கு,  "சொல்" என்பதே பொருள். பாசை ( பாஷை) அல்லது பேச்சு என்பது பொருளன்று.

பேசு > பாசு > பாசை > பாஷை. இதை அறிஞர் பிறரும் கூறியுள்ளனர்.

சொல்லின் நடுவிலும் ( அதாவது சொல்லிடையும் )  இகர -  அகர அல்லது அகர- இகரத் திரிபு வரும்.

இப்போது செதிள் என்னும் சொல்லைக் காண்போம்.  இது சிதள் என்றும் திரியும்.  இங்கு -  தி ( இ ) என்பது  த ( அ) என்று திரிந்துள்ளது. இரண்டும் இலக்கியத்துட் காணப்படுவன ஆதலின்,  கற்றோர் வழக்குடையது ஆகும்.

அசடு என்பது இசடு என்று வரலாம்,  வரட்டும்.  அசடு என்பது பிசடு என்றுவரலாமோ எனின்,  அது வாய்மொழியில் வருகிறது.   " அசட்டுப் பிசட்டு" என்று வரலாம்.  அசட்டுப் பிசட்டு என்று பிதற்றுகிறானெனின்,  மடத்தனமாகப் பேசுகிறான் என்பதே பொருள்.

செதிள் என்பது செதில் என்றும் வரும்.  இறுதி மெய்யெழுத்து ளகரம் லகரமாதல்.

பின்னர் செதிலென்பது  செலு என்றுமாகுமே! பின்னர் இன்னும் திரிந்து சிலாம்பு என்று இன்னொரு சொல்லாகும்.  கன்னடம்: சிலு.  ( செலு > சிலு).

திரிபுகட்கும் எல்லையுண்டோ?   உண்டு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 


திங்கள், 14 நவம்பர், 2022

அசடு, இசடு கசடு முதலிய சொற்கள்.

தகர சகரப் போலியில் நாம் கவனித்துக்கொண்டிருக்கும் "இந்தச் சொல் "  (ஏதேனும் ஒன்று)  --- திரிந்திருக்கிறது என்று சொல்லுகையில், அதை இணையத்தின் மூலம் படிக்கும் ஒரு தமிழறிந்தார் தம் மனத்தினில் இதனைப் பதிவு செய்திருப்பார் என்று நாம் நினைக்கவில்லை. எனினும் எல்லா வாசிப்பாளர்களும் ஒரே மாதிரி அவ்விடுகையைக் கடந்து சென்றிருப்பர் என்று கூறிவிடவும் முடியாது.  ஓரிருவர் அதைப் பசுமரத்தாணிபோல் மனத்தினுள் அமர்த்திக்கொண்டிருப்பர். பெரும்பாலோர் இன்னொரு முறை அதைச் சந்தித்தால் ஓரளவு அது அவர்களுக்குத் தெரியவரும்.

ஒரு மனிதன் ஒன்றை 5 முறையாவது கடந்து சென்றிருக்கவேண்டும். அப்போதுதான் ஒருவன் அதை நினைவுகூரும் திறத்தினை அடைவான் என்று சொல்லப்படுகிறது.  இவை எல்லாம் பிறர்தரு ஆய்வு முடிவுகள்.

கல்விக்குப் பெரிய எதிரி எதுவென்றால் அது மறதி தான்.  கல்வி என்பது பெரிதும் நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.  

நினைவாற்றல் தடுமாற்றம் பள்ளிகளில் போலவே வழக்குமன்றச் சாட்சிகளிடமும் காணப்படுவதொன்றாகும். மாறுபாடுகள் எனப்படும் இவற்றையெல்லாம்  முறையாக உணர்ந்து இறுதியில் தீர்ப்பை உரைக்கும் நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.  அவர்களின் வேலை மிக்கக் கடினம்

பகர்ப்புச் செய்வதென்பது  இன்னும் எளிதானது.  இதைக் காப்பி அடிப்பது என்பர்.  காப்பி அல்லது பகர்ப்புச் செய்வோன் அறிந்துகொண்டது சொற்பமே.

இப்போது ஆய்வுக்கு வருவோம்.

இகரம் அகரமாகத் திரிவதென்பது,  தகரச் சகரப் போலியினும் குறைவான நிகழ்தலை உடையதுதான்.  இதழ் என்பது  அதழ் என்று திரிதல் போலும் நிகழ்தல்   சொற்களின் எண்ணிக்கையில் குறைவே  ஆகும்.   சில முன் இடுகைகளில் எடுத்துக்காட்டப் பட்டன.

இசடு என்பதும்  அசடு என்று வரும்  அல்லது ஒன்று மற்றொன்றாக வரும்.  அசடு என்பது மூடத்தன்மையையும் குறிக்கும்.  புண்ணின் வடிநீர் அல்லது குருதி,  மேலாகக் காய்ந்து,  நன்கு  காய்ந்த பின் எடுபட்டுப் புதிய தோல் முளைக்கும்.  இதை அசடு என்பர்.  புண்வடிகை  காய்ந்து பெயர்தல்.   

இசடு என்பது கசடு என்று திரிதல் காணலாம்.   கசடு என்பது குற்றம் குறை என்றும்  அணியியல் வகையில் குறிக்கும்.  " கற்கக் கசடற கற்பவை" என்பது ஒரு குறள் தொடர்.  

வானின்மதிபோல் மேவும் வாழ்வே  இசடே இல்லாததே"  என்று ஒரு பாடல்வரி வருகிறது.  வான்மதியில் இசடு இருந்தாலும்,  எம் வாழ்வில் அது இலது என்பதை இதன் பொருளாகக் கொள்ளல் வேண்டும்.  இங்கு இசடு என்பது களங்கம் அல்லது கசடு என்று கொள்க.

இச்சொற்களின் திரிந்தமைவை இன்னோர் இடுகையில் காணலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 12 நவம்பர், 2022

சொல்: மலயம், மலயமாருதம்.

 ஐ என்ற எழுத்து தமிழில் நெடில்.  இதற்கு உரிய மாத்திரை  இரண்டு.  வேறுவிதமாகச் சொல்வதென்றால்  :  கண்ணை இருமுறை இமைக்கும் பொழுது அல்லது  காலம் ஆகும்.   ஐ என்னும் எழுத்து,  சொல்லில் முதலில் வரும்.  எடுத்துக்காட்டு:  ஐயனார்.,  ஐயா  என்பன.   சொல்லின் இறுதியிலும் வரும்:  எடுத்துக்காட்டு:  மலை,  கலை,  தொகை.   ல்+ ஐ: லை;  க் + ஐ = கை.  மெய்யுடன் கலந்து இறுதியில் ஐ நிற்கிறது.

ஒலிநூலின் படி,   ஐ என்பது குறுகி ஒலிக்கும் இடங்களும் சொல்லில் ஏற்படும். இந்த வாக்கியத்தைப் பாருங்கள்:

இவன் முன்னர் கலையையும் பழித்தான்,  பின்னர் நம் நிலையையும் பழித்தான்.

இது வாயால் ஒலிக்கும்போது,  "கலயயும்",  " நிலயயும்"  என்று உங்களை அறியாமல் குறுகிவிடலாம்.    இது ஒரு குறுக்கமே ஆகும்.  பேச்சில் குறுகுவது ஒரு பொருட்டன்று.  கவிதையில் மாத்திரை  அல்லது ஒவ்வோ ரெழுத்தையும் ஒலிக்கும் காலம் முதன்மை பெறுவதால், ஐகாரம் குறுகுவது ஐகாரக் குறுக்கம் எனப்படும்.   இவ்வாறு குறுகும்போது, இசைமுறிவு ஏற்படாமல் கவிஞன் பார்த்துக்கொள்ளவேண்டும்,    ஐகாரம் முழு அளவில் ஒலிக்கும்போதும் இதைக் கவனிக்கவே வேண்டும்.

மலை என்ற முழுச்சொல்,   அம் விகுதி பெற்று,  மலையம் என்றாகும்.   அப்போதும் மலையம் என்பதற்குப் பொருளில் ஒன்றும் வேறுபாடில்லை.  இருப்பின், அம் என்பது அழகாதலின்,  மலையழகு என்று விரித்துரைக்கலாம்.  எழுதுவோன்  மலை என்ற இடம் குறித்தானோ?  அல்லாது அதனழகு குறித்தானோ எனின்,  அழகைக் குறிக்கவில்லை,  வெறும் மலையைத்தான் சொல்கிறான் என்றுணர,   அம் என்பது வெறும் சாரியை என்று ஆகிவிடும். இது பொருள்கோள் என்பதில் கவனிக்கவேண்டியதாகும். உரையாசிரியன் சிறந்த பொருளை எடுத்துக்கூறுவது என்பதைத் தன் கடனாகக் கொண்டவன் ஆவான்.

மலை, மலையம் என்பவற்றில் மலையம் என்பது மலயம் என்று குறுகுவதுண்டு.  இவ்வாறு கவிதையிலன்றி, இயல்பாகவே பேச்சில் குறுகுவதுண்டு.  இதற்குக் காரணம் கூறவேண்டின், முயற்சிக் களைப்பு எனல் ஏற்புடைத்து. எனவே, சொல் திரிபடைந்தது.  இதுவே உண்மை.  இது ஒன்றும் பிறமொழி ஆகிவிடாது. இவ்வாறு திரிந்தபின், மாருதம் என்ற சொல்லுடன் கலந்து, மலயமாருதம் ஆகும். 

இனி இன்னொரு வகையில் சிந்திப்போம்.  மலை என்று மனிதன் மலையைக் கண்டு மலைத்து நின்றதனால் ஏற்பட்ட சொல் என்பதுண்டு.  இருக்கலாம்.  மல் என்ற அடிச்சொல் வலிமை குறிப்பதால்,  மல் > மலை என்றும் வந்திருக்கலாம். அப்படி வரவில்லை என்பதற்குக் காரணம் எதுவுமில்லை.  மல்> மல்+அ + அம் >  மலயம் என்று வந்துமிருக்கலாம்.  அ என்பது இடைநிலை;  அம் ஈறு அல்லது விகுதி.  மல்- வல் போலியுமாகும். மலயம் என்பது மலை குறிக்கும் சொல்லே. "ஓங்குயர் மலயம்" என்கின்றது மணிமேகலைக் காப்பியம். மலயம் என்பது மலை.

மலயமாருதம் என்பது அழகிய தமிழ்ச்சொல்லே. ( சொற்றொடர்  அல்லது கூட்டுச்சொல்.  மருவிச்செல்வது காற்று.  மரு+து+ அம்> மாருதம்  முதனிலை நீண்டு திரிந்த பெயர்.  மருவு என்ற வினையும் மரு எனபதனை அடியாய்க் கொண்டதே ஆகும்.  

பரத்தல் வினை:    பர >   பார் ( உலகு).   பரந்து விரிந்த உலகம் என்பது,   வியனுலகம் என்றார் தேவரும் திருக்குறளில்.  இதுவும் முதனிலை  நீண்டு திரிந்து பெயரானதே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


திங்கள், 7 நவம்பர், 2022

தருபார் அல்லது அரசவை.

 அரசனுக்கு இரண்டு வேலைகள் முதன்மை வாய்ந்தவை.

ஒன்று  இல்லை என்று வந்து கையேந்தி நின்றார்க்கு வழங்கி அருள்புரிவது.

இதைத் "தருவது" அல்லது தருமம் என்போம்.  

தரு+ ம் + அம்  = தருமம்.  பிறருக்குத் தருவது,  கொடை.  ம் என்பது இடைநிலை.

இதே போல் அமைந்த இன்னொரு சொல்  அறிக:   பரு(த்தல்) + ம் + அன் > பருமன்.

இர் இர் இர் என்பது ஒலிக்குறிப்பு.   இதிலிருந்து இரு என்ற ஒலிக்குறிப்பு அடிச்சொல் வருகிறது.

இரு+ ம் + உ -  இருமு>  இருமுதல்.

இரு +  (உ)ம் + அல் =  இருமல்.

"ம்" என்பது உம் என்பதன் முதற்குறை ( தலை இழப்பு).

கொடை/ தருமம்:

இவ்வாறு சும்மா வாங்கிக்கொண்டு போகும் நபர்கள் நாட்டில் பலர் இருப்பர். இல்லையென்றால் அது " உலக அதிசயம்"  அல்லது ஞாலவியப்பு ஆகும்.  இதை அரசின் வேலையாக, இங்கு சொல்லப்படுவது அவ்வாறான  கருத்துகள் முன் இருந்தமையால். இற்றைநாள் அரசுகள் இலவசம் தந்து மகிழ்விப்பதுபோலுமிது.

அடுத்தது நாட்டுக் காரியங்களைப் பார்ப்பது. பார்ப்பது கண்பார்வை அன்று. இயக்குதல் முதலியன நிகழ்த்தி அரசு நடாத்துதல்.

இதைப் " பார்ப்பது" , நாடுபார்ப்பது என்னலாம்.

தமிழ் மன்னர்கள் தருவதும் பார்ப்பதுமாக அரசவையில் இருந்தனர்.  ஆகவே அது "தருபார்"  ஆனது.

இதை மற்ற மன்னர்களும் அம் முதனிலைச் சொற்களால் சுட்டினர்.

நாளடைவில் தருபார்  ( தர்பார்) என்ற கூட்டுச்சொல் உண்டானது.

இதில் வியப்பு ஒன்றுமில்லை.

பகவொட்டு என்ற இடுகையையும் பார்க்கவும்.

உருதுச்சொற்கள்:   இத்தகைய தமிழ் வழக்குகள் பலவற்றால் உந்தப்பட்ட சொற்களைக் கைக்கொண்டன.   உருது தொடர்பாக எழுதிய இடுகைகளைப் பார்க்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

மாதமும் மாசமும்.

 தகரம்  (  அதாவது த என்ற எழுத்து)  பலவிடங்களில் சகரம்  (  ச  எழுத்து) என்று மாறிவிடுவது இயல்பு  என்று  நாம் பல இடுகைகளில் கூறியுள்ளோம்.   புலவர்கள் என்போர் அரசு அமைக்கும் இடத்தில் விருந்தினராகத் தங்கிக்கொண்டு,  கவிகள் இயற்றி  அரசவையிற்   சென்று பாடும் ஏற்பாடுதான்   சங்கம்.   இது ஒரு திரிபுச் சொல். இதன் மூலம் தங்கு என்பது.   தங்கு -  சங்கு,  சங்கம் என்றானது இச்சொல். அரசன் "புலவர்களை நாளை பார்க்கிறேன்"   என்றால் நாளைதான் சங்கம்.  அதைத் தீர்மானிபவன் அரசன்.  இதுபோலும் ஏற்பாடுகள் எங்கும் நடக்கலாம்.  அவையெல்லாம் ஏன் சங்கம் என்று பெயர் பெறவில்லை?

இந்தச் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்கள் கூட்டங்கள்  பிறவற்றை அவ்வாறு அழைக்கவில்லை.  நீங்களும்தாம்.

சங்கம் என்று பிறரால் அறியப்பட்ட  கட்டடங்கள் எவையும் இல்லை.  அரசவை ( அதுகூடி இலக்கியம் ஆயும்போது ) சங்கம்.  எல்லாவற்றுக்கும் அரசிறைவனே தனிநடுநாயகம்.

இத்தகைய த > ச திரிபு  மொழியிற் பரவாலாத் தோன்றும் ஒன்றாகும்.  மாதம் என்ற சொல் மாசம் என்று வருவதிலிருந்து இதை உணர்ந்துகொள்ளலாம்.   தனிச்சிறப்பு உடைய சனிக்கிரகம் அல்லது கோள்,  தனி > சனி என்று  திரிந்ததும் அதுவாம்.

சகர முதற்சொற்கள் பலவும் முற்றடைவுகள்.  த என்று தொடங்கும் பல தொட்டமைவுகள். பண்டைத் தமிழில் தொடுதல் என்பது தொடங்குதல் என்றும் பொருள் தரு சொல்.  பலர் மறந்திருக்கலாம்.

அவள் மாசமாய் இருக்கிறாள் என்ற இடக்கரடக்கலையும் கவனிக்க.  இதற்கு மாதம் என்ற சொல்வடிவைப் பயன்படுத்துவதில்லை,

அறிக மகிழ்க

பின் செப்பம் செய்வோம்.

ஞாயிறு, 6 நவம்பர், 2022

தான்சானிய வானூர்தி விபத்து.

 பறவூர்தி ஏறுபய   ணிகளே அந்தோ

புறவேரிக்குள் நடந்து  நீந்திச் சென்று

பெறுகாப்பு  வெகுசிறப்பு  உறுதுன்  பங்கள்

கருதுமுனம் நடந்தத(ம்)மா கடந்த  தம்மா!


தான்சானி யாமக்கள் துயரம் தன்னைத்

தாமுணர்ந்த பெருமக்கள் கண்கள் நீரில்!

யானெனது கண்ணீரைச் செலுத்து  கின்றேன்

யாவரையும் எம்மிறைவன் காக்க வேண்டும்.


இறங்குதுறை சேராமல் ஏரிக்  குள்ளே

கறங்கிவீழ் வானூர்தி கவலை சேர்க்கும்

நொறுங்குவிபத் துக்களினி நடவா வண்ணம்

திறம்செறிந்த நலம்காக்க இறைவா நீயே.


பறவூர்தி  -  வானூர்தி

புறவேரி   -  பக்கத்து ஏரி

இறங்குதுறை -  வானூர்திநிலையம்

முனம் -  முன்னம்,  முன்னர்.


நீங்கள் ஆக்குதிரைக்குள்   [[compose mode ]    தவறி நுழைந்துவிட்டால்

எதையும் மாற்றாமல் வெறியேறிவிடுங்கள். அதற்கு

எங்கள் நன்றி.

வெள்ளி, 4 நவம்பர், 2022

விலாசம் - தமிழ்

 

விலாசம் என்பதென்ன? பெயர் என்பதென்ன?

 ஒரு  மனிதனுக்குப் பெயர் என்பது மிக்கத் தேவையானது ஆகும். இதனாலே பெயர் என்ற சொல்லுக்குப் புகழ் என்ற பொருளும் நாளடைவில் மக்களிடையே ஏற்படுவதாயிற்று.  பெயர்தலாவது ஓரிடத்தினின்று இன்னோரிடம் செல்லுதல். இதிலடங்கிய கருத்தை, ஒரு மனிதனிலிருந்து இன்னொருவனைப் பெயர்த்து அல்லது வேறுபடுத்தி அறிய உதவுவது என்று விரிவுபடுத்தினர். எவ்வளவு சிறிய இடமாயினும் ஒரு மனிதன் இன்னொருவனிடமிருந்து அப்பால்தான் இருக்கமுடியும். ஒருவனின் கால்வைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் இன்னொருவன் கால்வைக்கமுடிவதில்லை. அதற்குப் பக்கத்தில் கால்வைக்கலாம், இதன் காரணமாகப் பெயர்த்தறிதல் என்பதைத் தமிழன் கூர்ந்துணர்ந்துகொண்டான். இடப்பெயர்வு போன்றதே மனிதக் குறிப்பின் பெயர்வும் ஆகும்.  ஆதிமனிதற்கு மிகுந்த அறிவு இருந்தது என்பது இதனால் புரிந்துகொள்ளமுடிகிறது. The space occupied by an individual  on ground can only be taken up by one person at a time. Different persons occupying the same place at different times must be differentiated. 

ஒருவன் தன் வீட்டைக் கட்டிக்கொண்டு அதில் வாழ்கிறான்.  இன்னொருவன் அதற்கு  அடுத்துக் கட்டுவான்.  இப்போது உள்ள அடுக்குமாடி வீடுபோல், அதே இடத்தில் முற்காலங்களில் வீடமைக்கும் வழக்கமோ திறனோ வளர்ந்திருக்கவில்லை என்றாலும் ஒருவீட்டிலிருந்து இன்னொரு வீட்டைப் பெயர்த்தறிதல் நடைபெறவே செய்தது.  வீட்டுக்கும் பெயரிட்டுக் குறித்தான். அந்தப் பெயர்,  அழகாக, "நீவாசம்" என்றோ  " அக்காவீடு" என்றோ இருந்திருக்கலாம். பெயர்ப்பலகை போடாமல் குறிப்பிட்டு அறிந்துகொள்வது  " அக்காவீடு"  என்பது.  மாமாவீடு என்பது வேறுவீடு.  இதன்மூலம், மாமாவீடு என்பது அக்காவீட்டிலிருந்து " விலக்கி"  அறியப்பட்டது.  விலக்குதலுக்கான இந்த சிந்தனைத் தெளிவு 'பெயர்" என்பதன் தன்மையை உணர்ந்ததனால் ஏற்பட்டதாகும். 

இவ்வாறு விலக்கி அறிய ஏற்பட்டதுதான் விலாசம் என்பது.  வில என்பது அடிச்சொல். ஆசு என்பது விலக்க ஆவதான பற்றுக்கோடு ஆகும்.  ஆகவே வில+ ஆசு+ அம் = விலாசம் ஆகும்.   நல்ல தமிழ்ச் சொல் என்று அறிந்து,  உங்கள் மாணவர்களுக்கோ கேட்பவர்களுக்கோ விளக்கிச் சொல்லுங்கள். பிற்காலத்தில் இது முகவரியைக் குறித்தது.  கடைகள் முதலிய இடங்களுக்கு இடப்படும் குறிப்புச்சொல்லையும் முன்நிறுத்தியது.  விலாசம் என்பதை விலாஸ் என்று பலுக்கினால் அது பிற சொல்லைப் போல் தெரியும்.  அன்று என்று அறிக.

ஆசு என்பது முண்டாசில் கூட இருக்கிறதே. முண்டு என்பது துண்டுத்துணி. முண்டு ஆசு முண்டாசு.

வில்லிருந்து அம்பு புறப்படுகிறது.  அம்பை விலகிச் செல்ல உதவுவதே வில். வில் என்பது இங்கு அடிச்சொல் -  பிரிந்து சொல்லுதல் குறிக்கும்.  இதிலிருந்து விலகுதல் என்ற சொல் ஏற்பட்டது.  விலாசம் என்பது இவ்வடியிற் பிறந்ததுதான்.

வில்லா என்ற இலத்தீன் சொல்லும் இதனோடு தொடர்புடைய இரவல்தான். வில்லாக்கள் தனித்தனியான மாளிகைகள்.

வங்காளத்தில் தாம் கண்ட வளையல்களை  வங்காளம் > பங்காள் > பேங்கள் என்று குறித்த ஆங்கிலேயனும் கெட்டிக்காரனே.

வில் ஆசு அம் என்பது வில்லாசம் என்று லகரம் இரட்டிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால்,  ஒரு லகர ஒற்றை இடைக்குறைத்து விளக்கலாம்.  உங்கள் மனநிறைவுக்கு.  எம் சிந்தனையில் அது தேவையில்லை.

விலகி விலகி அமைந்த உடற் பக்க எலும்புகள் விலா என்ற பெயர் பெற்றன. ஒரு மனிதனிடமிருந்து ஏதேனும் பெற்றுக்கொண்டு அடுத்தவனிடம் சென்ற பொருள்  வில்> வில்+தல் > விற்றல் ஆனது.  வில் > விலை.  வில் பு அன் ஐ > விற்பனை.

ஒரு சொல்லமைவது,  அந்த அமைப்புச் செயலின் முன்நிற்போனையும் அவன்றன் சுற்றுச்சார்பினையும்,  அவன் சிந்தனையையும்  சிறிதளவு அவன் சார்ந்துள்ள மொழிமரபினையும் நிலைக்களனாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.  எடுத்துக்காட்டாக பெயர்தல் என்ற சொல் அவன் சிந்தைக்குள் வரவில்லை என்றால்,  "வேறு" என்பதையே அவன் எண்ணிக்கொண்டிருந்திருப்பான் என்றால், பெயர் இட்டுக்கொள்ளப்படுவதன்று, ஆடைபோல் உடுத்துக்கொள்ளப்படுவது என்று கருதிக்கொண்டிருந்திருப்பான் என்றால்  அவன் அமைக்கும் சொல்:  வேறுடை என்று வந்துவிடும். உடுத்தும் உடையைக் குறிப்பதால் சரியில்லை, அடை என்பதே சரி என்று அவன் மனைவி சொல்கிறாள் என்றால் அதை அவன் வேறடை என்று மாற்றிக்கொள்வான்.இதில் இன்னும் கருதுவதற்கு இடமுள்ளது. இத்துடன் நிறுத்துவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

வியாழன், 3 நவம்பர், 2022

பொருள்--- சொல்லமைந்ததெப்படி?

 பொருள் என்னும் சொல்  ஒரு பகாப்பதம் அன்று.  இஃது ஒரு  தொழிற்பெயர் போல உள்விகுதி பெற்றமைந்த சொல்.  இதன் அடிச்சொல் பொரு  என்பதே. 

உள் என்னும் விகுதி பெற்றமைந்த சொற்கள் தமிழிற் பல. சில சொல்வோம்:  கடவுள்,  இயவுள்,  அருள்,  நருள், செய்யுள் ( செய் என்னும் வினைச்சொல் அடி), பையுள்,  ஆயுள் ( ஆ(தல்) )   உறையுள் எனக் காண்க.

வினைச்சொல்லும் விகுதி பெறும்;  அல்லாதனவும் விகுதி பெறும்.    அல்லாதன விகுதி பெறா  என்னும் விதி இலது  அறிக.

தமிழர் அணுகுண்டு என்னும் ஆயுதத்தைக் கண்டுபிடித்து எவன் தலையிலும் போடவில்லை என்றாலும்,   அணுவை அறிந்திருந்தனர்.   பொருட்களெல்லாம் அணுக்கள் இடையற  அணுக்கமாக  அடைந்து நின்று இயல்கின்றன என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.  அணுவியலைத் தனிக்கல்வியாக அவர்கள் வளர்க்கவில்லை போலும்,  எனினும் இதை அறுதியாய் உரைக்க இயல்வில்லை.  இதற்கான ஏடுகள் இருந்து அழிந்துமிருத்தல் கூடும். இருந்து, அடுத்து இலங்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுமிருத்தல் கூடும். நூல்கள் இலாமை யாது காரணம் என்று இற்றை நாளில் கூறவியலாது.

பொரு என்ற அதே அடிச்சொல்லில் பிறந்து  "பொருந்து" என்று வினையாய் அமைந்த சொல் நம்மிடை உள்ளது.  எல்லாப் பொருட்களும்,  தம்மில் தூள், தூசு, பகவுகள், அணுத்திரள்கள்,  அணுக்கள் என்பன  பொருந்தி நின்றதனால் அமைந்து உலகில் இலங்குபவையே  ஆகும்.  ஒரு பொருளாய் ஒன்று இலங்குதற்குக் காரணியாவது, இவ்வணுக்கள் பொருந்தி நின்றமையே  ஆகுமல்லால், மற்றொன்றில்லை. இதனின்று பொருந்தியமைவு எனற்பாலது நன்கு அறியப்படும்.

பொருவு என்ற வினை ( ஏவல் வினை)  பொரு என்ற அடியினெழுந்ததே  ஆகும். ஒத்தல்  நேர்தல் நிகழ்தல் என்ற பொருளில் இச்சொல் இன்னும்  உள்ளது.   பழம்பாட்டுகளில் இது வந்திருந்தாலும்,  இற்றை நாள் எழுதுவோர் பாடுவோரிடை இச்சொல் வழக்குப் பெற்றிலது என்று முடித்தலே சரியாகும். கம்பனிலிருந்து சின்னாள்காறும் இச்சொல் நிலவி வழங்கியிருத்தல் கூடும்.  உன்னைப்போன்ற அறிஞர் என்று சொல்ல விழைந்தோன்,  உன்னைப் பொருவு அறிவுடையோர் என்று கூறினாலும் பொருளதுவே ஆகும்.

புரைய என்ற உவம உருபு தொடர்புடையது.  புரைதல் வினை.  பொரு> புரை.

பொருவு+ உள் >  பொருவுள் என்றமையாமல்,  பொரு+ உள் >  பொரு+ (உ) ள்> பொருள் ஆகும்.    தேவையற்ற  உகரத்தை விட்டமைத்தனர்.   இதேபடி அமைந்த இன்னொரு சொல்:  அரு + உள் >  அருள்  ஆகும்.  இதில் உகரம் கெட்டது என்று இலக்கணபாணியிற் சொல்லலாம். இற்றை மொழியில்,  உகரம் களைந்தெறியப் பட்டது என்க.

தெர் > தெரி.

தெர் >  தெருள்.  (தெருள் மெய்ஞ்ஞான குருபரன் என்ற சொற்றொடர் காண்க)

தெரு என்பது போவார் வருவார் யாவும் தெரியச் செல்லும் பாதை. பிறபொருளும் கூறல் ஆகும்.

பொருள் என்பதே போலும் பொருளில்,    பொருக்கு என்ற சொல்லும் வழங்கும். பொருக்கற்றுப் போயிற்று என்றால்  பொருளில்லாமற் போயிற்று என்பதே. பொருக்கு என்பதில் கு விகுதி.  அடிச்சொல் பொரு என்பதாம். வழியிற் கிடக்கும் பொருக்குகளைப் பார்த்து விலகிச் செல் என்பதில் இது அமையும்.  காய்ந்த மண்ணுக்குப் பொருக்காங்கட்டி என்பதுண்டு. மண்ணாங்கட்டி என்பதும் அது.

தோல் காய்ந்து வெடித்தல்  பொருக்குவெடித்தல் என்று வழங்கும்.

பொருக்கு என்பது ருகரமிழந்து,  பொக்கு என்று குன்றும். இடைக்குறைக்கு நல்ல எடுத்துக்காட்டு.

பொருக்கு எனற்பாலது  இடைக்குறைந்து  பொருகு என்றாகி சோறு குறிக்கும்

பொருக்கு >  பொக்கு >  பக்கு:  இது சோறு முதலியவற்றின் அடிமண்டை.  ( அடியில் மண்டியிருப்பது  அல்லது உறைகுழைவு  )

இவற்றிலிருந்து பொருள் என்ற சொல்லின் திறம்கண்டீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

௳றுபார்வை செய்யப்பட்டது 13112022 0906

 

புதன், 2 நவம்பர், 2022

மதியமும் ( நிலவும்) காலக்கணக்கும்.

 மாதம் என்ற சொல்லின் பொருண்மையைப் பலவாறு ஆய்ந்துள்ளனர்.  காலத்தை அளவிடற்கு பண்டையர்க்கு ஓர் அளவை அல்லது "அளவுக் கருவி" இருந்ததென்றால்  அது நிலவு அல்லது நிலா எனப்படும் மதியமே  ஆகும்.  சைவ ஏடுகளில்  மதியம்  ( மாலை மதியம்)  என்ற சொல்லமைப்பு காணப்படுகிறது. காலத்தை மதிக்க அல்லது மதிப்பீடு செய்ய மனிதற்குக் கிட்டிய கருவி அதுவாம்.

அது புவிக்குத் தெரியாமல் இருக்கும் காலம் "அமாவாசை" எனப்படுகிறது. நிலவு இல்லாமற் போய்விட்டது என்று பண்டை மக்கள் நினைக்கவில்லை. அது இருளில் மூழ்கிவிட்டது என்று அவர்கள் அறிந்திருந்தனர். அது இருட்டிடமாக மாறிவிட்டது,  ஆனால் நிலவு அங்குதான்* உள்ளது!  இந்த இடுகைகளைப் படித்து அறிந்துகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_24.html

 https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_17.html 

இதற்குப் பொருள்:  அந்தப் பெரிய இருள் இடம்,   அழகிய இருள்சூழ் இடம்.  அ(ம்) என்பது சுட்டாகவுமிருக்கலாம்,  அழகுப் பொருள் படுவதாகவும் இருக்கலாம், ஏன் இவ்வாறு இருவழியிற் சொல்கிறோம் என்றால்  இவை அச்சொற்களிலே காணப்படுவதால். மா என்ற சொல்லும் பெரிது என்றும் பொருள்தரலாம்.  இருள் என்றும் பொருள்தரலாம்.  அளவு என்றும் பொருள்தரலாம். மாதம் என்ற சொல்லில் மா என்பது அளவு,  பேரளவு என்று பொருள்தரும்.  அமாவாசை என்ற சொல்,  கவிதைக்கு உரிய சொல்லாக கையாளப்படவில்லை. இதை "அம்மா வாசெ" என்றே சிற்றூரார்  ஒலித்தனர் என்று தெரிகிறது.  அமா~ என்று ஒலிப்பது பிற்காலத்தில் வந்த திருத்தம்.

அமாவாசை என்பதில் இடையில் தோன்றும் மா என்ற சொல்லும்,  மாதம் என்பதில் முதலில் வரும் மா என்ற சொல்லும்,   அளவுச் சொற்களே.  நிலக்கணக்கிலும் " மா"  என்பது "ஒரு மா நிலம் "என்று அளவே குறித்தது.  மாத்திரை என்ற சொல்லிலும் " மா" என்பது அளவுதான்.  மா என்பது பல்பொருள் ஒருசொல்.  பெருமை என்று பொருள்தரும் " மானம் " என்ற சொல்லும் அளவு, மதிப்பீடு என்பவை குறிக்கும் சொல்லே.   மதிப்பு என்ற சொல்லிலும் மதி என்பதிலும் மதி என்பது அளவு, அளவிடுதல் என்னும் பொருளதே.

மா - மதிப்பு.  மாமன் - மதிக்கப்படுபவன்,  மாமா.  பெரியோன்.

மாகக்கல் -  கானகத்தில் கிடைத்த ஒரு கனிமக்கல்.

மாக்கடு -  போற்றப்பட்ட ஒரு கடுக்காய் வகை.

மேஷர் ,  மீட்டர் என்ற பலவற்றிலும் அளவு உள்ளது.  அவற்றை இங்கு விட்டுவிடுகிறோம்.

எல்லாம் மகர வருக்கச் சொற்கள்.

மதித்தல் என்பதே இவற்றுக்கெல்லாம் உறவுச்சொல். வினைச்சொல்.

மதி -  வினைச்சொல்.  ஏவல் வினை.

மதி+ அம் =  மாதம்.  [  முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல்.]

எடுத்துக்காட்டு:  சுடுதல் , வினைச்சொல். verb.  சுடு> சூடு ( முதனிலைத் திரிபு), சூடு> சூடம்> சூடன்.  காம்ஃபர் என்னும் எரிக்கத் தகுந்த வெண்பொருள்.  அம், அன் விகுதிகள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

*அங்குத்தான் - not favoured.  வலிமிகல்

ஒரு திருத்தம்: 3.11.2022 11.17

சனி, 29 அக்டோபர், 2022

கோயிற் பூசைகளில் உள்ள நடைமுறைகள்:

2018ல் நடந்த மகாசிவராத்திரி தொடர்பான விளக்கம்: 

சிவபெருமானுக்கு ஆண்டுக்கு ஓர் இராத்திரி வருகிறது. இதை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறோம். கடந்த காலத்தில் திருமதி வனஜா அம்மையார் பற்றர் சிலருடன் சேர்ந்துகொண்டு இக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி  முழுமையையும் எடுத்துச் சிறப்புகள் செய்ததுண்டு. இவர்தம் குழுவிற்குத் துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்கள் என்று கோவில் அருச்சகர்கள் பெயர் தந்திருந்தனர். இக்குழு ஒரு நாற்பத்தைந்தாண்டுகள் பல இறைவணக்க விழாக்களிலும் பங்கு பற்றியுள்ளது. இதை இறையன்பர்கள் பலர் அறிவர்.

2218 ஆண்டு வாக்கில் இதற்கான கோயில் கட்டணம்  ( சிவராத்திரிப் பகுதிப் பூசை)   ஆயிர சிங்கப்பூர் வெள்ளிகளைத் தாண்டிற்று. இதைக் கீழ்க்கண்ட படத்திற்  காணலாம்.



20.3.2018 கோயில் கட்டணம் செலுத்தியது.

மலர்கள், மலர்மாலைகள், அம்மன் சிவன் அலங்காரங்கள்,  பிரசாதம், அன்னதானம். கோவிற் கட்டிட அலங்காரம், வரிசை எடுக்கும் பொருள்கள், எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும் நாம் செலவு செய்யவேண்டும். இவையும் இன்னபிறவும் கோவில் செய்வதில்லை. இது எல்லோருக்கும் தெரிவதில்லை.  நாமும் சொல்வதில்லை. நன்றி வணக்கம்.

ஐயர்கள் மந்திரம் சொல்ல மட்டும் $1450 போல் செலவு.  அன்றைத் தினம் கோயிலில் எப்போதும் வேலை செய்யும் ஐயர்கள் பற்றாமையால்,  வேறு கூடுதல் ஐயர்களும் தேவைப்படும்.  இதையும் கோயில் சமாளிக்கவேண்டும். சம்பளம் இல்லாமல் யாரும் வேலை செய்வதில்லை.  கோயில் சம்பளமே போதாமையால்,  ஐயர்களுக்குப் பூசைகள் முடிந்தபின்,  தட்சிணை ( $100 - 150), மேள தாளக்காரர்களுக்குத் தட்சிணை, சிப்பந்திகட்குத் தட்சிணை,  வேட்டி - துண்டுகள், பூசைப் பலகாரங்கள் என்று பலவுண்டு.

பூசைகள் செய்யப்போய் செலவுகள் தாங்காமல் ஓடிப்போனவர்களும் உண்டு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

குறிப்புகள்:

விமரிசை -  https://sivamaalaa.blogspot.com/2015/08/blog-post_11.html  ( விம்மி -  மிகுந்து;  இசைதல் -  இயைதல், பொருந்துதல்.   வீங்கிள வேனிலும் - (திருமுறைகளில் உள்ள பதப்பயன்பாடு). விம்முதல் - பெருகுதல்..