அரசனுக்கு இரண்டு வேலைகள் முதன்மை வாய்ந்தவை.
ஒன்று இல்லை என்று வந்து கையேந்தி நின்றார்க்கு வழங்கி அருள்புரிவது.
இதைத் "தருவது" அல்லது தருமம் என்போம்.
தரு+ ம் + அம் = தருமம். பிறருக்குத் தருவது, கொடை. ம் என்பது இடைநிலை.
இதே போல் அமைந்த இன்னொரு சொல் அறிக: பரு(த்தல்) + ம் + அன் > பருமன்.
இர் இர் இர் என்பது ஒலிக்குறிப்பு. இதிலிருந்து இரு என்ற ஒலிக்குறிப்பு அடிச்சொல் வருகிறது.
இரு+ ம் + உ - இருமு> இருமுதல்.
இரு + (உ)ம் + அல் = இருமல்.
"ம்" என்பது உம் என்பதன் முதற்குறை ( தலை இழப்பு).
கொடை/ தருமம்:
இவ்வாறு சும்மா வாங்கிக்கொண்டு போகும் நபர்கள் நாட்டில் பலர் இருப்பர். இல்லையென்றால் அது " உலக அதிசயம்" அல்லது ஞாலவியப்பு ஆகும். இதை அரசின் வேலையாக, இங்கு சொல்லப்படுவது அவ்வாறான கருத்துகள் முன் இருந்தமையால். இற்றைநாள் அரசுகள் இலவசம் தந்து மகிழ்விப்பதுபோலுமிது.
அடுத்தது நாட்டுக் காரியங்களைப் பார்ப்பது. பார்ப்பது கண்பார்வை அன்று. இயக்குதல் முதலியன நிகழ்த்தி அரசு நடாத்துதல்.
இதைப் " பார்ப்பது" , நாடுபார்ப்பது என்னலாம்.
தமிழ் மன்னர்கள் தருவதும் பார்ப்பதுமாக அரசவையில் இருந்தனர். ஆகவே அது "தருபார்" ஆனது.
இதை மற்ற மன்னர்களும் அம் முதனிலைச் சொற்களால் சுட்டினர்.
நாளடைவில் தருபார் ( தர்பார்) என்ற கூட்டுச்சொல் உண்டானது.
இதில் வியப்பு ஒன்றுமில்லை.
பகவொட்டு என்ற இடுகையையும் பார்க்கவும்.
உருதுச்சொற்கள்: இத்தகைய தமிழ் வழக்குகள் பலவற்றால் உந்தப்பட்ட சொற்களைக் கைக்கொண்டன. உருது தொடர்பாக எழுதிய இடுகைகளைப் பார்க்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக