பறவூர்தி ஏறுபய ணிகளே அந்தோ
புறவேரிக்குள் நடந்து நீந்திச் சென்று
பெறுகாப்பு வெகுசிறப்பு உறுதுன் பங்கள்
கருதுமுனம் நடந்தத(ம்)மா கடந்த தம்மா!
தான்சானி யாமக்கள் துயரம் தன்னைத்
தாமுணர்ந்த பெருமக்கள் கண்கள் நீரில்!
யானெனது கண்ணீரைச் செலுத்து கின்றேன்
யாவரையும் எம்மிறைவன் காக்க வேண்டும்.
இறங்குதுறை சேராமல் ஏரிக் குள்ளே
கறங்கிவீழ் வானூர்தி கவலை சேர்க்கும்
நொறுங்குவிபத் துக்களினி நடவா வண்ணம்
திறம்செறிந்த நலம்காக்க இறைவா நீயே.
பறவூர்தி - வானூர்தி
புறவேரி - பக்கத்து ஏரி
இறங்குதுறை - வானூர்திநிலையம்
முனம் - முன்னம், முன்னர்.
நீங்கள் ஆக்குதிரைக்குள் [[compose mode ] தவறி நுழைந்துவிட்டால்
எதையும் மாற்றாமல் வெறியேறிவிடுங்கள். அதற்கு
எங்கள் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக