சுமங்கலிப்பூசை என்பது சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதை இங்கு அறிமுகப் படுத்தியவர், இலங்கையிலிருந்து வந்து சிங்கைச் சிவதுர்க்கா ஆலயத்தில் ( முன்னையப் பெயர்: சிவன் ஆலயம் ) இதனைத் தொடங்கியவர் ஆவார். வனஜா அம்மையாரே தம் நண்பர்களுடன் இதில் முதலில் ஈடுபட்டவர். இது பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றது. அடுத்துவந்த செவ்வாய்க்கிழமையில் இராகுகாலப் பூசை என்ற ஒரு நிகழ்வும் நடைபெற்றது.
16.8.2016ல் நடைபெற்ற இரு மேற்கண்ட வகைப் பூசைகளிலும் $6672 (வெள்ளிகள்) செலவிடப் பட்டிருக்கலாம். இதனினும் கூடுதலாக இருந்திருக்குமே தவிரக் குறைந்திருக்காது. இது கோவிலுக்குக் கட்டிய தொகையே. மற்ற அலங்கார வகைகளுக்கும் பூமாலை முதலியவற்றுக்கும் கூடுதல் செலவு ஆகியிருக்கும். அவற்றை முன் இடுகைகளில் கண்டுகொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக