இன்று பேச்சில் வரும் "எதேச்சை(யாக)" என்ற சொல்லை அறிவோம்.
இதில் வரும் " இச்சை " என்ற சொல், இங்கு விளக்கப் பட்டுள்ளது.
https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_88.html
இதில் வரும் இ என்பது ஓர் சுட்டடிச் சொல். இங்கு என்பது இதன் சொல்லமைப்புப் பொருள். இதன் பொருண்மை யாதெனின், இங்குள்ள ஒன்றன்மேல் மனத்தை இட்டு, அதன்மேல் கவிந்திருத்தல் என்பதாகும். மனத்தொடர்பு உட்படுத்தாத விடத்து , இங்கு வைத்தல் என்பது இதன் பொருள்.
இ > இ+ சை > இச்சை. சை என்பது தொழிற்பெயர் விகுதி.
இ என்பதிலிருந்து அமைந்த வினைச்சொல்தான், இ > இடுதல் என்பது.
இச்சை என்பது இ > இ+ சை ( விகுதி ) .> இச்சை.
இதனை: இடுதல்: இடு+ சை > இடுச்சை > ( இடைக்குறைந்து "இச்சை" என்றும் காட்டலாம்.).
இதில் வேறுபாடு ஒன்றுமில்லை. ஒன்றைச் சுட்டடியிலிருந்து விளக்கினோம். மற்றொன்றை வினைச்சொல்லிலிருந்து விளக்கினோம்.. இடு என்ற சொல்லில் டு என்பது வினையாக்க விகுதி. அ > அடு என்பதிலும் டு விகுதியே ஆகும்.
இன்னோர் எடுத்துக்காட்டு:
ப என்ற ஓரெழுத்துச் சொல்லின் பொருள், ஒன்று நிலத்துடன் படர்வாக இருத்தல் (lying flat) என்பதாம். படிந்திருக்கக் காணப்படுவது. ஒரு மனிதன் படுத்திருக்கையில் நிலத்துடன் படிந்துள்ளான். ப> பலகை என்பதில், மரம் அல்லது அதனால் அமைந்து நிலத்துடன் படிவான வகையில் இருப்பதைக் குறிக்கிறது. பலகை என்பது பரப்புடைய வெட்டப்பட்ட மரமாதலின் : பர > பரகை > பலகை என்று அறியப்படுதல் எளிமையான வழி. மற்றும் ல- ர அல்லது மாற்றீட்டுத் திரிபு என்பது தெளிவு. நிலத்தைச் சமன்படுத்தல், "பரம்படித்தல்" எனப்படுதலும் காண்க. பர> பரம்பு. பு விகுதி.
இவற்றால், எப்படியாவது இட்டவண்ணம் ஒன்றைச் செய்தல், " எதேச்சை" யாகச் செய்தல் எனப்பட்டதன் பொருத்தத்தை அறியலாம்.
எதாவது ஒருவழியில் "எடுத்துச்செய்தல்" எனினும் ஒக்கும். எதாவது ஒருவழியில் "எடுத்துக்கொள்ளுதல்." எது+ எடுச்சை > எதேச்சை..
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக