கொம்மை என்பது ( கொம் ) ஓர் அடிச்சொல் ஆகும்.
ஒரு சொல்லின் உறவுச்சொல்லைக் கவனித்தால் பொருள் தெளிவாகிவிடும்.
கொழு என்ற சொல்லிலிருந்து கொழுப்பு. கொழுமை என்ற சொற்களும், கொழுத்த, கொழுவிய என்ற சொற்களும் வருகின்றன. "கொழுவிய வாத்து, ஆற்று நீரில் விழுந்துவிட்டது" என்பது ஒரு வாக்கியம்.
கொழு கொழு என்று இருந்தவள், கோவிட்டுக்குப்பின் இளைத்துவிட்டாள் என்பது இன்னொரு வாக்கியம்.
கொழு > கொழுமை.
கொழுமை > கொம்மை. இதிலிருந்து " ழுகரம் " நீங்கினால் கொம்மை. இதனமூலம், பொருள் தெளிவாகிவிடுகிறது.
கொம் > கும். உருண்டு திரண்ட சதைப்பிடிப்புள்ள தன்மை. இது இளம் வயதினர்க்கு உள்ளதாகும்.
கும் > குமரன் > குமரி.
இவை இருக்கட்டும். குமாரன், குமாரி என்பன காண்போம்.
கும் - உடல்திரட்சி உடைமை.
ஆர் - நிறைவுடைமை.
கும் + ஆர் + இ > குமாரி. இளையவள். கொழுகொழு வென்னும் உடலள், திருமணம் ஆகாதவள்.
குமாரன் என்பது ஆண்பாற் சொல்.
பிற வகை விளக்கங்களும் உள்ளன.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக