வியாழன், 8 நவம்பர், 2018

பலவகைச் சொல்லாக்கம்

இடைச்சுருக்குகள்:


பிறப்பிப்பது >  பிற~து  > பிராது.:  ஒரு நடவடிக்கையை  வழக்குமன்றில் (காவல் துறையிலும் ஆகலாம் )  பிறப்பிக்க அளிக்கப்படும் மனு.

மயங்குவது >  ம~து.

வயங்குவது > வ~து +அன் + அம் =  வதனம்.  இடைச்சுருக்குடன் இடைநிலை விகுதிகள் பெற்ற சொல்.

உருக்கொள்ளுமொழி:   உருக்கொள்வது >  உரு~து.  புதிதாக அமைந்துகொண்டிருந்த மொழி. தெக்காணி மொழியிலிருந்து அமைந்ததாகச் சிலர் உரைத்துள்ளனர்.  இது ஒரு கலவை மொழி.  தென்னகத்தின் வடபகுதிகளில் பலசொற்களையும் கலந்து பேசியதால் உருவானது என்பர். முஸ்லீம்களிடையே உருவானது.   உருது என்ற ஒலியொற்றுமைச் சொல் வேறுமொழிகளிலும் இருந்தாலும் இது வேறு; அது வேறு.

எடுத்துக்காட்டு:  மான் என்ற ஆங்கிலச்சொல் மான் என்ற தமிழ்ச்சொல்லைப் போலவே ஒலித்தாலும் தொடர்பற்றவை. ஆங்கில மான்: மனிதன் என்று பொருள்படும்.  தமிழ் மான் என்பது ஆட்டைப்போலும் ஒரு விலங்கின் பெயர்.

விழுமிய வாழ்க்கை ஆக  அமைவது >  விவாக அம் > விவாகம்.
விழுமிய = சிறந்த.

விழுமிய வாழ்வு சார்ந்து அமைவது:  வி-வா-சா-அம் > விவசாயம்.  யகர உடம்படு மெய் சேர்ந்த சொல்.  பயிர்த்தொழில்.

விவா என்று நீட்டாமல் விவ என்று சுருக்குண்டது.
ஆனால் இலத்தீனர்கள் விவா என்று பயன்படுத்தினர். வேற்றுமை மாற்றங்களால் சிலவிடத்து விவோஸ் என்று வரும்.  :  இன்டர் வைவோஸ் கிஃப்ட் என்பது காண்க. intervivos gift.  as opposed to  a testamentary gift.

விரிந்து பரந்து சார்ந்து ஒழுகுபவள் : .>   விபசாரி,

இடைக்குறைச் சொற்கள்:

தாழ்(வு) + மரு (வு) +  ஐ = தா+ மரு + ஐ =  தாமரை.

தாழ்வாக நீருடன் மருவி நிற்கும் மலரும் அது வளர்  தண்டுச் செடியும்.

தூக்கி எறியத் தக்க வேண்டாத ஒலிகளை விலக்காமல் எல்லாமும்
வைத்துக்கொண்டு  தாழ்வுமருவை என்று பெயர்கொடுப்பவன் நேர்மைவாதி
யாகவிருக்கலாம்.  ஆனாலும் சொல்லியல் அறிஞன் ஆகான்..

கமலம் என்ற சொல்:  கழுமலர்,  செங்கழுநீர்மலர் என்பவற்றிலிருந்து: படிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_21.html 

தாழ்வணி > தாவணி.

இல்லா அணி அமைந்தவள் >  இலாவணியாள் .>  இலாவண்யா.
இல்லா -  ஊரில் இல்லா, நீர் நம்பத்தகுந்த வேறிடத்தில் இருந்த என்பது பொருள்.

ஊரில் வசிக்கும் அழகி போன்றவள் :  ஊர்வசிப்பவள் > ஊர்வசி


 முன்பின்னாகப் புனையப்பட்டவை:


பிதா :   தாய்ப்பின்.    பி = பின்;  தா= தாய்.

தாய்க்கு அப்புறமே தகப்பன்.

மாதா :     (  அம் )மாதா(ய்).   தலைக்குறை கடைக்குறை ஒட்டுச்சொல்.


கொடுந்திரிபுகள்:

உங்க   அப்பன்  :   ங்கொப்பன் அல்லது    ஙொப்பன் 
உங்க ஆயி  :         ஙோயி

அவ  ஆத்தா :    வாத்தா
அவ அப்பா :   வாப்பா.

ஒலிச்சமன்:

ஐயர் =  அய்யர்


மெலித்தல்:

வெந்த ஆணம் >  வெஞ்சனம்
நிறைஞ்ச  அன்ன  >  நிரஞ்சன 


சில திரிபுகள்

1தன் திறம் >  தந்திரம்
2மன்னும் திறம் >  மன் திறம் > மந்திரம்
மேலிரண்டும்  1& 2 ,  பிறரும் கூறினர்.
இயங்கு  திறம் > இயந்திரம்
கரிஞ்சவன் >  கரிஞ்சன் > கஞ்சன். இரக்கம் இன்றிக் கருப்பு எய்தியவன்.
வினை ஆயகன் > வினாயகன்.  வி+நாயகன் :  விழுமிய நாயகன்.
தெரிதல்:  தெரி+ சு + அன்+ அம் : தெரிசனம் > தரிசனம்.
தெருள்:  தெருட்டி:  > திருட்டி > திருஷ்டி.> திருட்/ஶ்டாந்த.

ஈண்டு விடுபாடு இருப்பின் பின்னர் சரிசெய்யப்பெறும்.
பிழை திருத்தம் பின்.

 


 








கருத்துகள் இல்லை: