தேதி திகதி என்பன தமிழ்ச்சொற்கள் என்பதை முன்பு வெளியிட்டதுண்டு.
இதற்குரிய வினைச்சொல் திகைதல் என்பது.
இப்போது ஆங்கில மொழி மிகுதியாக வழங்குவதால் இச்சொல் பயன்பாடு குன்றி வருகின்றது. தமிழ் மொழி என்பது பெரும்பாலும் வீட்டுமொழியாகிவிட்டது.
ஆகவே திகைதல் என்ற வினைச்சொல் புழக்கம் குறைவது வியப்பிற் குரித்தென்று நினைக்கவில்லை.
சந்தையில் மாடு வாங்கப் போனவன், மாடு வாங்கிக் கொண்டிருந்த இன்னொருவனைப் பார்த்து: "விலை திகைந்து விட்டதா?": என்று கேட்பான். அதாவது விலை தீர்மான மாகிவிட்டதா என்பது கேள்வி.
நாள் எது என்று குறிப்பதே திகை > திகைதி > தேதி ஆகும்.
நாள் - பொதுச்சொல். குறிக்கப் படாததும் குறிக்கப் பட்டதும் நாள்.
24 ಮಣಿಕ್ಕೂಱು ಎನ್ಪಥು ನಾಳ್. ಪಕಲುಮ್ ನಾಳ್ ಥಾನ್.
ಥಿಕಥಿ - ಥೇಥಿ ಎನ್ಪನ ಕುಱಿಕ್ಕಪ್ಪತ್ತವೈ; ಥಿಕೈನ್ಥವೈ.
திகைதி என்பது திகதி என்று வருதல் ஐகாரக் குறுக்கம். வேறு எடுத்துக்காட்டுகள்:
பகு > பகுதி > பாதி;
தொகு > தொகுப்பு > தோப்பு.
வகு > வகுதி > வாதி. (வகுந்த அல்லது பிரிந்த நிலையில் பேசுவோன்). இதனை வேறு வழியிலும் விளக்கலாம்).
தோப்பில் வீடு என்பது கேரளாவில் ஒரு சிற்றூரின் பெயர். வீட்டுப் பெயருமாம்.
திகைதி என்பது திகதி என்று சுருங்கிய பின் திக என்பது தே என்று நீளும்,
அடுத்து ஒரு ககரமோ அதன் வருக்கமோ வரின் முதல் நீளும்.
எ-டு:
அகத்துக்காரி > ஆத்துக்காரி. அ என்பதை அடுத்து க வந்தது.
அக > ஆ,
ஆதலின் திகதி தேதி என்பன தமிழென்று உணர்க.
நாள்: 1. 24 மணிநேரம் கொண்ட கால அளவு, 2.பகற்பொழுது.
தேதி : நாட்காட்டியில் குறிக்கப்பட்ட மற்றும் தீர்மானிக்கப்பட்ட இரவும் பகலுமான கால அளவு,
திகதி தேதி என்பன தமிழன்று என்று அஞ்சிய அறியார் " நாள்" என்பதையே உகப்பர். திகதி தேதி இரண்டும் திரிசொல்; நாள் இயற்சொல்.
ஆனால் தேதி என்பது உலகசேவையில் ஈடுபட்ட சொல். "டேட்" என்ற ஆங்கிலச்சொல்கூட இதனுடன் தொடர்பு உள்ளது. இலத்தீன்: டேட்டம்,
கணினி அறிவியலில் அடிக்கடி பயன் காணும் டேட்டா என்பது இது இதன் இலத்தீன் பன்மை வடிவம்.
திகைதல் என்ற வினையினின்று உருப்பெற்று உலகப்பணி புரியும் இச்சொல்லால் எமக்கும் பெருமையே. இதனை உலகினுக்கே தந்தது நம் தமிழ்.
மகிழின் மணத்தினை மறைத்திடலும் கூடுமோ?
errors will be rectified later..

சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில்தான் இப்படி என்றால் தமிழ் நாட்டில் இன்னும் மோசம் என்றுதான் சொல்லவேண்டும். உரையாடலில் இயல்பான நிலையில் பிரிட்டன் அமெரிக்கா முதலிய நாடுகளில் வழங்காத அல்லது குறைவாகவே வழங்கும் (ஆங்கிலச் ) சொற்கள் கூட தமிழில் கலந்து பேசப்படுகிண்றன.. அன்றாடப் பொருள்களான ரொட்டி என்னும் உரொட்டி கூட "பிரட்டு" என்று ஆங்கிலச்சொல்லால் குறிக்கப் பெறுவதாகிறது. இந்நிலை மாறுமென்று எதிர்பார்க்கவில்லை. தோசையை டோசா என்பாரும் உளர். தோசை என்பதோ அரிசியையும் உளுந்தையும் நீரில் தோய்வித்து அரைத்துச் செய்யப்படுவதால் தோயல் : தோயை > தோசை என்று அமைந்தது. மற்றொன்று: அப்பிச் சுடுவதால் அப்பம் ஆனது.
ஆகவே திகைதல் என்ற வினைச்சொல் புழக்கம் குறைவது வியப்பிற் குரித்தென்று நினைக்கவில்லை.
சந்தையில் மாடு வாங்கப் போனவன், மாடு வாங்கிக் கொண்டிருந்த இன்னொருவனைப் பார்த்து: "விலை திகைந்து விட்டதா?": என்று கேட்பான். அதாவது விலை தீர்மான மாகிவிட்டதா என்பது கேள்வி.
நாள் எது என்று குறிப்பதே திகை > திகைதி > தேதி ஆகும்.
நாள் - பொதுச்சொல். குறிக்கப் படாததும் குறிக்கப் பட்டதும் நாள்.
24 ಮಣಿಕ್ಕೂಱು ಎನ್ಪಥು ನಾಳ್. ಪಕಲುಮ್ ನಾಳ್ ಥಾನ್.
ಥಿಕಥಿ - ಥೇಥಿ ಎನ್ಪನ ಕುಱಿಕ್ಕಪ್ಪತ್ತವೈ; ಥಿಕೈನ್ಥವೈ.
திகைதி என்பது திகதி என்று வருதல் ஐகாரக் குறுக்கம். வேறு எடுத்துக்காட்டுகள்:
பகு > பகுதி > பாதி;
தொகு > தொகுப்பு > தோப்பு.
வகு > வகுதி > வாதி. (வகுந்த அல்லது பிரிந்த நிலையில் பேசுவோன்). இதனை வேறு வழியிலும் விளக்கலாம்).
தோப்பில் வீடு என்பது கேரளாவில் ஒரு சிற்றூரின் பெயர். வீட்டுப் பெயருமாம்.
திகைதி என்பது திகதி என்று சுருங்கிய பின் திக என்பது தே என்று நீளும்,
அடுத்து ஒரு ககரமோ அதன் வருக்கமோ வரின் முதல் நீளும்.
எ-டு:
அகத்துக்காரி > ஆத்துக்காரி. அ என்பதை அடுத்து க வந்தது.
அக > ஆ,
ஆதலின் திகதி தேதி என்பன தமிழென்று உணர்க.
நாள்: 1. 24 மணிநேரம் கொண்ட கால அளவு, 2.பகற்பொழுது.
தேதி : நாட்காட்டியில் குறிக்கப்பட்ட மற்றும் தீர்மானிக்கப்பட்ட இரவும் பகலுமான கால அளவு,
திகதி தேதி என்பன தமிழன்று என்று அஞ்சிய அறியார் " நாள்" என்பதையே உகப்பர். திகதி தேதி இரண்டும் திரிசொல்; நாள் இயற்சொல்.
ஆனால் தேதி என்பது உலகசேவையில் ஈடுபட்ட சொல். "டேட்" என்ற ஆங்கிலச்சொல்கூட இதனுடன் தொடர்பு உள்ளது. இலத்தீன்: டேட்டம்,
கணினி அறிவியலில் அடிக்கடி பயன் காணும் டேட்டா என்பது இது இதன் இலத்தீன் பன்மை வடிவம்.
திகைதல் என்ற வினையினின்று உருப்பெற்று உலகப்பணி புரியும் இச்சொல்லால் எமக்கும் பெருமையே. இதனை உலகினுக்கே தந்தது நம் தமிழ்.
மகிழின் மணத்தினை மறைத்திடலும் கூடுமோ?
errors will be rectified later..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக