ஞாயிறு, 11 நவம்பர், 2018

தீபாவளியும் தொழிலாளர்களும்

சுற்றுப்புறம் தூய்மைசெய்  தொழிலாளர் எமதுநண்பர்
பற்றுமிக அவர்பால்வை; பாவமவர்  காலைமாலை
உற்றபணி செய்துயர்வார்; ஊர்சிறக்க உழைத்திடுவர்.
மற்றெவரோ நல்லகாற்று மூச்சிழுக்க வழங்குபவர்?

தீவளிக்குப் பலகாரம் தேர்ந்தெடுத்துக் கொணர்ந்துண்டாய்
ஆவனயா வும்செய்தாய்  அலங்காரம் பலவிளைத்தாய்
நாவுயர்த்தும் ஆண்டவனோ நம்தொழிலா ளர்துணைவன்;
கூவியழைத் தவர்க்கெல்லாம் நாவினிக்க விருந்தளிப்பாய்,

செய்தபல ஊணனைத்தும் சீருடனே அவர்முன்வை;
வைததுண்டோ அவர்களைநீ  வாயில்கை முட்டிக்கொள்;
நெய்ச்சோற்றை  நீகொடுப்பாய்; நேரிதாகப் பாலும்கொடு
வையமெல்லாம் வாழ்வுபெறும் பைநிறையும் கைநிறைம்மே.


நிறைமே - நிறையுமே. 
தீவளி -  தீபாவளி.  ( பா - இடைக்குறை).
வட இந்தியாவில் தீவாளி என்று வரும்.

பிழைத்திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: