வெள்ளி, 9 நவம்பர், 2018

தெக்காணியும் உருதும்.

தெக்காணி என்பது இடைக்காலத்தில் வழங்கிய ஒரு மொழியின் பெயர்.

தென்+ கண் + இ =  தெற்கணி > தெற்காணி.>  தெக்காணி;

தென் :  இது தென் திசை குறிக்கும் திசை அடை.
கண்:    இது இடமென்று பொருள்தரும்.

குறளில்

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் ...."

இல் =  கண்.

மனத்தில்=   மனத்துக்கண்,

அத்து என்பது சாரியை.  அம் விகுதி கெட்டது; அத்துச்சாரியை பெற்றது,

தெக்காணி என்பது ஆங்கிலத்தில் "டெக்கான்" என்று திரிந்தது,

டெக்கானில் பேசப்பட்ட மொழி:  டெக்கானி.



தென்பகுதியில் வழங்கிய மொழி என்று பொருள்.

அதிலிருந்து உருவானது உருது.

உருவானது :>   உரு~து   >  உருது.  இடையில் உள்ள எழுத்துக்கள் குறைந்தன.

உருது என்ற சொல் வேறுமொழியில் இருக்கலாம்.  அது ஒலியொற்றுமைச் சொல்.

ஒரே ஒலியுள்ள சொற்களுக்கு எடுத்துக்காட்டு:

மாய் (தமிழ் ) : செத்துப்போ.

மாய் ( சீனம் )  :  வேண்டாம்.

இவை வெவ்வேறு சொற்கள்.

உர்டு என்ற பாரசீகச் சொல் படைமுகாம் என்று பொருள்படுவதால் படையினர் பேசிய மொழி என்பர்.   இது வெறும் கருத்துரைதான். அப்படிப் பேசியிருக்கலாம் என்றாலும் முஸ்லீம்களின் வீட்டுமொழியினின்று தோன்றியதே உருது ஆகும்,  ஒரு மொழி உருவாகப் பலகாலம் பிடிக்கலாம்,
படைஞர்கள் திடீரென ஒருமொழியை உருவாக்கிப் பேசிக்கொண்டனர் என்பர் =  இது ஒரு வியத்தகு சிந்தனை ஆகும்.

உலகில் எத்தனையோ நாடுகளில் படைஞர்கள் கூடிப் பேசுகின்றனர்.  அவற்றுள் எத்தனை புதுமொழிகள் தோன்றின?  இது முஸ்லீம்களின் வீட்டு மொழி.  நெடுங்காலம் அமைதியாக வளர்ந்திருக்கும். கலவை மொழி.

குறிப்பு:  தக்கு என்ற சொல்லிலிருந்து தக்காணம் என்ற சொல் பிறந்தது என்பார் தேவநேயப்பாவாணர்,  தக்கு = தாழ்வு, நிலத்தின் தாழ்நிலையை உன்னியிருப்பர்,  அதனால் பெயரமைந்திருக்கும் என்பது சற்று தொலைவான
சிந்தனையாகத் தோன்றுகிறது.  நிலநூலறிஞர்களே இப்படி எண்ணலாகும். வடநாடு தென்னாடு என்று எண்ணுவது இன்னும் எளிமையானது ஆகும்.

கருத்துகள் இல்லை: