சாலமோன் என்ற சொல்லை முன்னர்ச் சிலமுறை யாம் விளக்கியதுண்டு.
சால - மிகுந்த. நிறைவான.
இதன் அடிச்சொல் சாலுதல் என்பது. இச்சொல் ஒரு வினைச்சொல்.
சால என்பதை ஓர் உரிச்சொல் என்பதுண்டு. சாலச் சிறந்த என்ற தொடரில் சிறந்த என்ற எச்சச் சொல்லை சால என்பது தழுவி நிற்றல் காணலாம். இது உரிச்சொல் எனப்படினும் இது "சாலுதல்" என்னும்போது வினைவடிவெடுப்பதை அறியலாம்.
இது எவ்வாறாயினும், சால என்பது பிறமொழிகளிலும் பரவிச் சொற்களைப் பிறப்பித்துள்ளது.
சாலை என்பது சால்+ஐ என்றமைந்த சொல். இப்போது வாகனங்கள் செல்லும் பெரும்பாதையை நாம் சாலை என்`கிறோம். எடுத்துக்காட்டு: விரைவுச்சாலை.
பாடம் என்பது தமிழ்ச்சொல். படி+ அம் = பாடம் எனவரும். படி என்பதில் உள்ள பகரம் நீண்டு பாகாரம் ஆனது. டி என்பதில் உள்ள இகரம் கெட்டு ட் என்று நின்று வரும் அம் என்னும் விகுதியுடன் இணையப் பாடம் என்ற சொல் அமைகிறது.
பாடம் + சாலை என்பனவற்றைச் சேர்க்கப் பாடசாலை ஆகிறது, இதன்பொருள் பாடம் படிக்கப் பிள்ளைகள் கூடியுள்ள இடமென்பது. இப்போது பள்ளி என்ற சொல்லே இதற்குப் பயன்படுகிறது. பாடசாலை என்பது பிறமொழிக்குச் சென்று பயன்பட்டதால் அதன்பால் ஏற்பட்ட ஐயப்பாட்டில் அது இப்போது விலக்கப்படும்.
அறியாது அகராதி வெளியிடும் சிலர்கூட பாடம் சாலை என்பன தமிழல்ல என்று கூறிக்கொண்டிருப்பதுண்டு. இக்கூற்று உண்மையன்று என்பதை மேலே விளக்கியுள்ளோம்.
சால என்ற சொல் எபிரேய மொழிக்குள்ளும் சென்றது. சாலமோன் என்ற மன்னன் பெயரில் சால என்பது இருக்கிறது. பெயருக்கேற்ப அவன் சாலச் சிறந்தவனாகத் திகழ்ந்திருந்திருந்தான். மன் என்பது மன்னன் என்பதன் அடிச்சொல். சாலமன் என்பது சாலச் சிறந்த மன்னன் என்று பொருள்படும்.
மன் என்பதன்றி அதை சாலமோன் என்று பலுக்கிடில் மோன் எனற்பாலது மகன் என்பதன் திரிபாகவும் கொள்ளுதற்கிடனுண்டு என்பதறிக. மகன் என்பது மோன் எனவருதல் பேச்சுத் திரிபு. தமிழ் நாட்டின் சில வட்டாரங்களிலும் சேரலத்திலும் இது இவ்வாறு உருக்கொண்டு வழங்கும். இதைப் பற்றி மேலும் வாசிக்க:
https://sivamaalaa.blogspot.com/2016/05/solomon-tamil.html
ஆனால் சாலமோன் சாலமன் என்று ஓர் அரசன் இல்லை என்று சிலர் கூறியுள்ளனர். பண்டைக்காலத்தில் பல கதைகளைக் கற்பனைக் கேற்ப எழுதிப் பரப்பியோர் பலர். சில செய்திகளை ஈண்டு அறியலாம்,
https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwiikfatk_vbAhUEQH0KHbn7CXgQFggoMAA&url=http%3A%2F%2Fwww.jesusneverexisted.com%2F&usg=AOvVaw3KzUp6-ujV7qhhPUpzPcOp
சாலமன் பற்றிப் பல வியத்தகு கதைகள் உள; அவர் இருந்திருந்தாலும் இல்லாதிருந்தாலும் செய்யத்தகுந்தது ஒன்றுமில்லை. கதைகளை அறிந்து மகிழ்வேண்டியதுதான் நம் வேலை.
சாலிவாகனன், சாலியவாகனன் என்பன சிறந்த வாகன வசதிகள் உடையோன் என்று பொருள்படுதல் கண்டும் ஆனந்த மடைக. வேறுபொருள் கூறிய வரலாற்றாசிரியர் உளர். பண்டைக்காலத்தில் வாகனவசதியுடையோன் பெரிதும் மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டான். பத்து இரதங்களுடைய மன்னன் தசரதன் பெரிதும் மதிக்கப்பட்டு அவனியற்பெயர் மறக்கப்படுமாறு தசரதன் என்ற பெயரே வழக்குப்பெற்றுள்ளது.
இரதம் என்பது எப்படி அமைந்த சொல்? ( இரு+அது+ அம் : இருந்து செல்வதற்கு அது அமைப்பு )
நடந்து திரிபவனுக்கு அத்துணை மதிப்பு இல்லை.
சிறந்த நெற்பெயர் சாலி என்ற பெயர் பெற்றதும் தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும்.
தேவிக்குச் சாலினி என்ற பெயருண்மை முன்னர் நம் இடுகையில் சொல்லப்பட்டதே. இப்போது இது ஷாலினி என்று மெருகேறி ஒப்பனை நிலையில் வழங்கிவரும் சொல் ஆகும்.
பிழைத்திருத்தம் பின்.

மெய்ப்பு: 16122022