புதன், 11 மே, 2016

very good rain வந்தமழையில் பசுமை

தூங்கிப் போன இலைகள் சோர்வு நீங்கிப் போனவே
வான்கறுத்து  வந்தமழையில் பசுமை காணவே.

சாலை பெற்ற பொழிவில்  தரையில் ஆவி மேவுமே
ஏழைத் தவளை எழுந்து கத்தி உயரத் தாவுமே

காயும் புல்லில் திவலை துள்ளக் கட்டெ   றும்புகள்
மேய எண்ணி வரிகளூரும் உணவு நம்புமே.

தண்மை அறையில் தங்கிச் சோர்ந்த கவின்கு மாரிகள்
உண்மை தானோ என்றுவானை வாழ்த்திக் கூறினார்.

ஆறு குளங்கள்  சேறு நீங்கி  நீரின் பெருக்கிலே
யாரும் நோக்கி மகிழும் வண்ணம் நடை  சிறக்கவே.



போனவே -  போயினவே   (யிகரம்  தொக்கது).
காயும்  -  மழையின்றிக் காயும். 
 திவலை - பின் வந்த மழையினால்  நீர்த்துளிகள் 
வரிகள் ஊரும் - வரிசைகளாய்  ஊரும் 
உணவு நம்புமே  - உணவு வரும் என்று நம்புமே.
தண்மை airconditioned   -  referred,
நடை - நீரின் ஓட்டம் .(நீரின் பெருக்கால் ஏற்பட்ட நடை )


கருத்துகள் இல்லை: