பரந்தாமன் என்ற பெயர் மிக்க அழகாய் அமைந்த பெயர் தமிழ்மொழியில் இதற்குக் கிடைக்கும் பொருளை நாம் கவனித்து மகிழ்வோம், இதனுடன் ஒருபோன்மை உடைய பரந்தாப என்ற சொல்லை நாம் சற்று ஒதுக்கிவைப்பது நன்று. அது தனியாய் கவனிக்கப்படவேண்டியதாகும், பொருள்வேறுபாடு ஒரு காரணம் ஆகும்,
பரம் என்ற சொல் கடவுள் என்று பொருள்படுவது. இதன் விரிவு பரம்பொருள் என்பது. பரத்தல் எனில் எங்கும் விரிந்து பரந்து இருத்தல் அல்லது பரவி நிற்றல். பரவை என்றொரு சொல் உண்டு, பரந்ததாகிய கடல் பரவை
கவனிக்கவேண்டியது:
பறவை - பறந்து திரிவன; குருவி முதலியவை ,
பரவை - ?பரந்த நீர்ப்பரப்பு.? அதாவது கடல்.
பரம் என்ற சொல் கடவுள் எனப் பொருள் படும், கடல் நீல நிறமென்பது நீங்கள் அறிந்தது, பரந்தாமனும் நீலனாக உருவகம் செய்யப்படுதலுண்டு,
விண்ணு (விண் ) தோற்றம் தந்த விட்டுணு ஆகிய விஷ்ணுவும் நீல நிறமே.
,
சிவமும் தானும் இறைவனும் ஆன்மாவும் என்று சிவஞான போதம் விளக்குகிறது. இதை அவனும் தானும் என்ற சொற்களால்
விரித்துரைக்கிறது.
நாராயணன் அல்லது விட்ணு பக்தர் அல்லது பற்றர் குழாம் உடையோன் .அவர்கள் பாடுவது கேட்டு மனமகிழ்பவன். ஆகவே சிவமும் தானும் என்பதுபோல பரமும் தாமும் என்ற கருத்துத் தோன்றி வளர்ந்தது.
பரம் கடவுள். பெரும்பாலும் விட்டுணு. தாம் என்ற பன்மைத் தற்சுட்டு பற்றர்குழாமைக் குறிக்கிறது. அவன் புகழ் பாடிப் பின் செல்வோர்.
தாம் என்ற குழுவுடன் மனமகிழும் பரம், பரந்தாமன்
ஆகிறான். (பரம்+தாம்+அன்). ஆதாவது தாம் என்று பின்செல்லும் அவர்களைப் பரமன் உடையவன். ஆகவே பரந்தாமன் ஆகிறான்.
பரந்தாப என்பது வேறு. பின் விளக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக