இச்சொல் எங்ஙனம் அமைந்தது என்பதை இங்கு விளக்கி இருந்தோம்
வம்மின் (சொல்வடிவம் ) > வம்மிசம்
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_30.html
வருமின் என்பது வம்மின் என்றும் வரும். -- என்றால் வருக என்று பொருள்.
" நாள் முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு என "
என்ற புறநானூற்று வரியில் ( பெருந்தலைச் சாத்தனார் - பாடல் 294) இதைக் காணலாம் .
வ + மிசை + அம் = வம்மிசம்
தலைமுறைகள் மென்மேலும் வந்துகொண்டிருப்பதே வம்மிசம் .
மிசை - மேல்.
இதில் ஐகாரம் கெட்டது .
இது ஒரு நாட்டுப் புற வழக்குச் சொல்.
கிழவியர் திட்டுப்போது " உன் வம்மிசம் கருவற்றுப் போக " என்று அலறுவர்.
வா என்ற பகுதி வ என்று திரியும்.
வா > வந்தான் ;
வா> வருக. (அதாவது வாருக அன்று )
வா > வரு . அல்லது வரு> வா .
வா முதலா வரு முதலா என்பது இருக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக