செவ்வாய், 17 மே, 2016

செருப்பணிந்து கோவில் செல்லுதல்


செருப்பை அணிந்தொரு கோயிலிற் சென்றால்  இறைவனையே
மறுப்பதற் கொத்தல் செருப்பினைக் கள்வார் எனக்கவன்றே
இருப்ப திதுமனம் கொள்வாய் இதற்கணி யாதுசென்றால்
இழப்பதொன் றில்லையொண் பாதங்கள் மட்டுமே எண்ணினையே.


செருப்பை அணிந்து ஒரு  கோயிலிற் சென்றால்  --  காலணிகளை  அணிந்துகொண்டு ஓர்  ஆலயத்திற்குப்  போனால் ;

செருப்பினைக் கள்வார்  என  =  (வெளியிற் போட்ட ) செருப்பினை யாராவது திருடிவிடுவார்கள்  என்று ;

கவன்றே இருப்பது  -   கவலையோடே  உள்ளே அமர்ந்திருப்பது;

இறைவனையே மறுப்பதற்கு  ஒத்தல் -   கடவுளையே இல்லை யென்று  சொல்வதற்கு  ஒப்பாகும்;  (  காரணம் இறைப்பற்றில்  ஈடுபடாதிருந்தமை ;)

இது மனம் கொள்வாய்  - இதைப் புரிந்து கொள்வாயாக;

இதற்கு-   இப்படிச் செய்யாமல் ;

செருப்பு  அணியாது சென்றால்  -    செருப்பே போடாமல் போனால்;

இழப்பதொன்றில்லை  -   நீ  அடைந்த நட்டம் ஒன்றுமில்லை;


ஒண்பாதங்கள் மட்டும் எண்ணினையே -    செருப்புக் கவலை ஒழிந்து  இறைவன்  பாதங்களை மட்டுமே  உன் எண்ணத்தில்  நிறுத்தி  நீ  வெற்றி கண்ட காரணத்தினால்.

என்றபடி 

கருத்துகள் இல்லை: