நள்ளிரவில் வாழ்த்தியம்
நாட்டு
வெப்பம் தணித்திடத்
தம்மனை
அனுப்பிய தண்ணருள்.
நானுறங்கப்
பார்த்தும்
நல்லிரு
விழிகள் மூடவில்லை;
மழை சொரியக்
குழைந்தன
என் இமைகள்!
கூடுதல்
வேகத்தில்
மூடிக்கொள்ள
முனைந்தன.
குளிரூட்டிய
அறையில்
தளிராகப்
படுத்திருந்தேன்
மழைதந்த
குளிரால்
விளைந்த ஊதியமென்ன?
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை
பின் ஏன் உறக்கம் இப்போது
முன்வந்து
எனையணைக்க
முயல்கின்றது.?
முயல்கின்றது.?
அந்தச்
சலசல ஒலி
கூரைகளின்
மேலே தடதட...
விழுந்தும வழிந்தும் ஓடியும்
என் தாயின்
தாலாட்டினை
செவிக்குள்
செலுத்தின,
சலசல தடதட
வரவர தரதர
இயற்கை அன்னையின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக