ஓர் ஆண்மகனும் பெண்மகளும் ஒத்த அன்பினால் செல்லாது
மாறுபட்டு நிகழ்வன அனைத்தும் பெருந்திணை என்னும் திணையின்பால் கொள்ளப்பட்டன . எடுத்துகாட்டாக மனைவியை நீங்கி இன்னொருத்திபின் சென்று அவள்பால் உள்ள காதலை ஒருவன் கூறுவதாக ஒரு பாடல் வருமானால் அது பெருந்திணை ஆகும். அதாவது எல்லை மீறிய காம ஒழுக்கம். பண்டைத் தமிழர் பண்பாட்டில் இவை போற்றப்படவில்லை.
இன்னோர் எடுத்துக்காட்டு: ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அந்த ஆடவன் அடக்கத்துடன் நிற்க
பெண் முந்திக்கொண்டு நீ என்னை உடன் கொண்டுசென்று என்னுடன் கூடியிரு என்று கேட்பாளாயின் அதுவும் பெருந்திணை ஆகும். வேட்கை முந்துறுத்தல் என்னும் துறை இது. இஃது மாறுபாடான நிகழ்வு ஆகும்.
"கையொளிர் வேலவன்1 கடவக் காமம்
மொய் 1வளைத் தோளி முந்துற மொழிந்தன்று."
என்பது புறப்பொருளின் கொளு.
கடவுதல் = தூண்டுதல்.
இத்தகைய மாறுபாடான ஒழுக்கங்கள் புறப்பொருளில் அடக்கப்பட்டன. தூய ஒழுக்கங்களே அகப்பொருளில் ஏற்கப்பட்டன.
1 : errors rectified
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக