வெள்ளி, 27 மே, 2016

ஆசாரம். ஆஸ்தி ஆதி

ஆசு  என்ற  அடிச்  சொல்  பல சொற்களில்
பயன்படுத்தப்பட்டுள்ளது.  அவற்றுள் சில இங்கு கவனிப்போம்.

ஆசு என்பதன் அமைப்பு முன் விளக்கப்பட்டுள்ளது.  அதை இப்போது சுருக்கமாக நினைவு கொள்ளுதல் நலம் பயக்கும்.

ஆ   >  ஆதல்.
ஆ  >  ஆதி    (ஆக்க  நாள்   தொடக்க நாள். )
ஆ  >  ஆசு,     எதையும் ஆக்குதற்கு  உதவுவது.    அது :
   ஆதரவு,  பற்றுக்கோடு.


( பற்றுக்கோடு  -   பற்றிக்கொள்ளுதல். பற்றத் தரும் பொருள்.  

ஒரு மரக் கொம்பு  பற்றி ஏறத் துணசெய்கிறது.  அதாவது பற்றக்கொடுக்கிறது.   அது பற்றுக்கோடு எனப்படும்.  கொடு > கோடு,  மற்றும்  கொள்+ து  = கோடு. இப்படி இருவகையிலும் வரும்.  )

ஆசு + தி  > ஆஸ்தி   (  ஆஸ்தி. இதில் தி என்பது தொழிற்பெயர் விகுதி.)
ஆசுதி > ஆஸ்தி.  ( ஆக்கப்பட்டு ஒருவனுக்கு உரிமையான பொருள்களின் தொகுதி.

ஆசுதி என்பது ஆஸ்தி என்று மாறி அமைந்ததால்,  ஆசுதி என்ற முதல் அமைப்புச் சொல் வழக்கில் இல்லையாயிற்று.   கடு> கட்டம் > கஷ்டம் என்ற திரிபில்,  கஷ்டம் வந்தபின் கட்டம் என்பது அப்பொருளில் உலவுதல் ஒழிந்தது.  அதுபோலவே.

ஆசு +  அருத்தல்  >  ஆசருத்தல்.

அருந்து > அருத்து:  ஊட்டுதல்.

ஆசருத்தல் > ஆசரித்தல்:     உ> இ  திரிபு.

ஆசரித்தல் >  கடைப்பிடித்தல்.  பற்றி  நடத்தல். (பற்று ஊட்டுதல் )

ஆசரித்தல் >ஆசாரம்.  (பற்றி நடக்கும் முறையமைப்பு).

மற்ற தொடர்புடைய சொற்களைப் பின் கவனிப்போம்.



ஆ+ சாரம் = ஆசாரம் :  சாரம் ஆவது;  சார்ந்து  நடக்கத் தக்கது.  வினைத்தொகையுமாகும்.

கருத்துகள் இல்லை: