கூடு :
கூடு என்ற சொல்லின் இன்னொரு பொருளை நோக்குவோம். நம் உடலில், கண்,காது, மூக்கு, வாய் என்ற உறுப்புகளும் உள்ளுறுப்புகளும் கூடி அமைந்துள்ளன. ஆகவே, உடலையும் ஒரு கூடு எனலாம்.கூடுதல் - ஒன்று சேர்தல்.மேல்தோலானது, பொருத்துவாய் தெரியாதபடி ஒன்றாய்க் கூடியுள்ளது. இதனாலும் உடலைக் கூடு என்பது பொருத்தமாகிறது.ஆன்மாவை உள்பொதிந்து வைத்திருக்கும் இவ்வுடல்,ஆன்மாவிற்கு ஒரு கூடு ஆகிறது.கூட்டுக்குள் குருவி இருப்பதுபோல, உடலுக்குள் ஆன்மா உள்ளது.ஒப்பீட்டினாலும் ஏனை
உடலியல் அமைப்பினாலும் இது பொருத்தமாகவே இருக்கிறது.தேய்ந்து அழிதலின் தேகமாயது (தே - தேய்கு > தேய்கம் > தேகம்) போலுமே, கூடு என்பதும் காரணப் பெயர்.
கூடுவிட்டு , ஆவிதான் போனபின் ஆரே அனுபவிப்பார்? பாவிகாள் அந்தப் பணம் என்ற செய்யுளில் கூடு எனற்பாலது பொருந்தவே இடம்பிடித்துள்ளது.
கூட்டுவதும்
பெருக்குவதும்
தெருவை
யாராவது பெருக்கும்போது
நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
அங்கொன்றும்
இங்கொன்றுமாகக் கிடக்கும்
காகிதம்,
சருகு,
எறியப்பட்ட
பிற என யாவற்றையும் கூட்டுமிலாரால்
கூட்டி ஒன்று சேர்த்ததும்
அவை "பெருகி"
விடுகின்றன.
அதாவது,எல்லாம்
அங்கு கிடந்த குப்பைதான் -
சேர்த்து
நோக்க,
அதிகமாகிவிடுகிறது.
எனவே
பெருக்குதல் பொருத்தமான
பதம்.
கூட்டுதல்
என்பதும் பொருத்தமானதே.
இதில்
ஒரு மீனைப் பத்து மீன்களாய்
ஆக்கிக் காட்டினதுபோல மாயவித்தை
எதுவும் இல்லை.
என்றாலும்
கூட்டுதல் பெருக்குதல் என்பன
பொருத்தமே.
கூடுதல்,
பெருகுதல்
-
தன்வினை.
கூட்டுதல்
-
பெருக்குதல்
-
பிறவினை.
கூடு, கூட்டு, பெருக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக