மிராசு என்ற சொல் தமிழ் நாட்டில் வழக்கிலிருக்கிறது, இந்தச் சொல்லைச் சங்க இலக்கியங்களில் காணமுடியவில்லை. இது ஒரு உருதுச் சொல் என்று கொள்ளப்படுவது.
உருது என்பது இந்திபோலப் புதிய இக்கால மொழி. அதன் சொற்கள் பழைய மொழிகளிலிருந்து திரிந்திருக்க வேண்டும், அல்லது நெருங்கிய தொடர்புடைய அரபி முதலிய மொழிகளிலிருந்து வந்திருக்க வேண்டும். அல்லது இம்மொழியில் புதுப் புனைவுகளாக இருக்கவேண்டும்.
பிற மொழிச் சொற்கள் வந்து வழங்குவது எல்லா மொழிகளிலும் காணப்படுவது என்பது ஓட்டோ ஜெஸ்பெர்சன் முதலிய மொழி நூலறிஞர்களின் கருத்தாகும்.
தமிழைப் போலவே வேடமிட்டுவரும் ஒரு பிறமொழிச் சொல்லை விலக்கிப்
பேச்சு எழுத்து முதலியவற்றைக் கையாளுவதென்பது பேசுவோன் மற்றும் எழுதுவோனுக்கும் கடினமே. எல்லோரும் சொல் ஆய்வு செய்வதற்கு இடமும் பொருளும் பிறவும் துணை நிற்பதில்லை.
இவற்றை மனத்தில் இருத்திக்கொண்டு இங்கு தொடர்வோம் .
அரசு என்ற சொல் இலத்தீன் முதலிய மொழிகளிலும் சென்று வழங்கி உள்ளது. Rex Regina முதலியவை காண்க. தமிழுக்கும் இந்த மேலை மொழிகளுக்கும் தொடர்பே இல்லாது இருந்திருந்தால் அரிசி இஞ்சி முதலிய சொற்கள் அங்கு சென்றிருக்க மாட்டா. தோகை என்ற சொல்லும்
எபிரேய மொழியில் இடம்பெற்றிருக்காது. சுமேரியா முதலிய இடங்களில் தமிழர் வாழ்ந்தனர் என்பதையும் மனத்தில் இருத்துக.
மீ + அரசு = மீ + ராசு = மிராசு ஆகும். முதல் எழுத்துக் குறுகிற்று, அரசு என்ற சொல் வழக்கம்போல் தலை இழந்தது. இத்தகு திரிபுகள் பெருவரவு ஆகும் .
மேலாண்மை என்பது பொருள். பின் பரம்பரை நிலத்து மேலாண்மை குறித்தது. மீ - மேல். அரசு = ஆட்சி .
இது : தமிழ் > அரபி > உருது> தமிழ் என்றோ, தமிழ் > உருது > தமிழ் என்றோ இதன் செல்பாதை அமைந்திருக்கலாம். இதுவே இனி நுணுகி ஆய்தற்குரியது ஆய்வாளர்கள் இது தொடர்க,, ஆர்வமிருப்பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக