புரு என்னும் அடிச்சொல் சில சொற்களைப் பிறப்பித்துள்ளது.
புரு > புருவம்: கண்ணுக்குப் பாதுகாப்புத் தருவது.
புரு > புருடன் பெண்ணுக்குப் பாதுகாப்புத் தருபவன்
புரு > புரி : செய்தல் .
புரு > புரை (ஒப்புமை, போன்மை இன்னும் பல பொருள் .)
புரு என்பதன் மூலச்சொல் புல் என்பதாகும். புல்லுதல் எனில் பொருந்துதல்.
புருவமாவது, கண்ணுடன் பொருந்தி நிற்பது. புருடன் என்போனும் பெண்ணுடன் பொருந்தி நிற்பவன் ,
புரு என்பதும் மேலும் பொரு என்று திரிந்து, பொருது, பொருந்து என்றாகும்.
புல் > புரு> பொரு > பொருது > பொருந்து.
புருசன் என்பது நாட்டுப்புற வழக்கில் உள்ள சொல். இங்கிருந்து அது பிற மொழிகளிலும் சென்று பழைய நூல்களிலும் இடம்பெற்றிருக்கிறது.
புருச என்பது கண்ணின் மணி என்றும் பொருள்படுவது கவனிக்கத் தக்கது.
இது புருவத்துடன் தொடர்பு உண்மை காட்டுவதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக