செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

நிவேதிதா தேவியாரின் ஆங்கில நடை

Sister நிவேதிதா மிகச் சிறந்த  எழுத்தாளர் என்றுதான் சொல்லவேண்டும். அவரெழுதிய சிவனைப்பற்றிய ஒரு கட்டுரையும் மற்றும் புத்தரைப் பற்றிய இன்னொரு கட்டுரையும் நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. மிக்கத் தெளிவான ஆங்கில நடை. ஆற்றொழுக்குப் போன்ற அமைதியுடன் நம்மை மிதந்து செல்லவைக்கிறது.  கூடுமானவரை இலத்தீன் கிரேக்க வழிச் சொற்கள் இன்றித்   தூய ஆங்கிலமாய் உள்ளது. வரணனைகளும் அவருக்கே உரித்தான பாங்கில்  தரப்பட்டுக் கவர்ச்சி செய்கின்றன ,

பதிப்பாசிரியர்கள் ஆசிரியரைக்  கதை கூறுவதில் பெருவல்லுநர் என்று சொல்வது முற்றிலும் உண்மையாகும். அது படிக்கும்போதே தெளிவாகும். . அவர் இவ்வுலகை நீங்கிய பின்னர் அவர்தம் ஏடுகளை அலசிய‌போது இவை கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் போக்கினைக் காணுங்கால்  அவர் மேலும் பல கட்டுரைகளைத்  தம்  மேலை நாட்டு மக்களுக்காக எழுத எண்ணியிருந்தார் என்றே   நாமும்   ஊகிக்கவேண்டியுள்ளது,.
இந்து ஆசாரங்கள் பற்றியோ அல்லது மேலையர்  அறியாத  இந்தியச்  சமயவியல் கூறுகள் பற்றியோ  கூறப்புகுங்கால் அவரளிக்கும் விளக்கங்களைக் காணும்போது  இது புலனாகின்றது  .இந்து  சமயத்தை இந்துக்கள் அறிந்து வைத்திருப்பதை விட அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.



நூலின் பெயர்:  Siva and Bhudha
வெளியிட்டோர்: இராமகிருஷ்ண மடம்

நிவேதிதா தேவியாரின் ஆங்கில நடை படித்தின்புற வேண்டியதொன்றாம்,

கருத்துகள் இல்லை: