வியாழன், 26 பிப்ரவரி, 2015

மயிலும் வடமொழியும்.


ஆரியர் நண்ணில வட்டாரங்களிலிருந்து (Mediterranean area) இந்தியத் துணைக்கண்டத்திற்கு ஏகினர் . என்பது ஒரு தெரிவியல் (theory) கருத்து ஆகும். ஆராய்ச்சியாளர்களுக்கு இதைத் திட்டவட்டமான முறையில் முடிவு செய்ய இயலவில்லை. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படுவதை எப்படி முடிவு செய்ய இயலும்?  ஆகவே அதைப்பற்றிய வாதங்களும் எதிர்வாதங்களும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்.வரலாற்றாசிரியரான ரோமிலா தாப்பார் அம்மையார் ஆரியர் வந்தனர்  என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆரியர் வந்தனர் என்பதற்கே ஆதாரம் கிட்டாமல் அலமருகின்ற வேளையில்,  அவர்கள் படையெடுத்து வந்தனர் என்பதற்கு ஆதாரம் என்ன இருக்கின்றது என்று கேள்வி எழுவது இயற்கை.  ஆரியர் என்பது ஓர் இனத்தின் பெயர் அன்று என்பது  ஒரு 
மறுப்பு ஆகும். ரிக் வேதம் முதலிய நூல்களில் இந்தச் சொல் இனத்தைக் குறிக்கும்  சொல்லாக‌ வரவில்லை. எல்லை கடந்து மக்கள் வந்துகொண்டுதான் இருந்திருப்பார்கள். இப்போதுபோலவே, தனிப்பட்ட கூட்டங்களும் தனி ஆட்களும் வந்திருப்பார்கள். சில படையெடுப்புகளும் நடந்திருக்கும்.

 ஆனால் இவை சமஸ்கிருதம் என்ற மொழியைக் கொண்டுவந்த‌ நிகழ்வுகள் என்று மெய்ப்பிக்க வேண்டுமே! ஆனால் பல சமஸ்கிருதச் சொற்கள், 
மேலை நாட்டு மொழிகளில் காணப்படுகின்றன.இவை எங்ஙனம் அங்கு சென்றன?   மக்களிடை ஏற்பட்ட தொடர்புகளால் ( அவை படையெடுப்பானாலும் வெறும் போக்குவரவானாலும்) சொற்கள்
பரிமாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
-
வரலாறு எழுதிவைத்து வாழ்ந்தவர்கள் சீனர்கள். அப்படி எழுதிவைக்காமல் வாழ்ந்தோர் இந்தியர். பல்வேறு வழிகளில் இந்திய வரலாற்றை எடுத்துக்கட்ட வேண்டியுள்ளது. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடுகள், மண் ஓடுகள், சொல் ஆய்வு, மொழி ஆய்வு என்றெல்லாம் அலைந்து திரிந்து தேடி எடுத்துப் புனைந்தாலும், அவை கற்றோர் கருத்துரைகளாய் (merely educated opinions and not facts ) நிற்கின்றன.

வடமொழி வடதிசையில் வழங்கிய மொழி என்று பொருள் கூறலாம். ஆனால் அப்படியின்றித்  தென் திசையிலும் அது வழங்கிவந்திருக்கிறது. அப்புறம் எப்படி வடமொழி? வடமொழி எனப்படும் மொழியில் எழுதிய ஆசிரியர்கள் பலர் தென்னாட்டினர். மேலும் வடமொழி யாருடைய மொழியுமில்லை. அது எந்த இனத்தவரால் வழங்கப்பட்டது? ரிக் வேதத்திலேயே  எண்ணூறு முதல்  ஆயிரம்  வரையிலான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்துள்ளனர். ( Kamil Svellebelle ) தமிழர்கள் ரிக் வேதத்தில் சில பாடல்களையாவது பாடாமல்  எப்படி இந்தச் சொற்கள் அங்கே  போயின?

வடம் என்றால் மரம் என்றும் பொருள்.  இப்படிப் பார்த்தால், வட மொழி மரத்தடி மொழி என்று பொருள்பெறும்.(திரு வி.க) மரத்தடிச்  சாமியார்கள் பயன்படுத்திய ஒரு மந்திரமொழி. பின் அது நன்றாகச் செய்யப்பட்டுச் சமஸ்கிருதமாயிற்று. சமஸ்கிருதத்தில் 1/3 விழுக்காடு
சொற்கள் தமிழ் அல்லது தமிழின்  இனமொழிகளுடையன. (டாகடர் லகோவரி).
இன்னும் 1/3 ஆய்வுக்குரியன. சமஸ்கிருதத்தின் ஒலியமைப்பு திராவிட ஒலியமைப்பு. (எஸ்.கே. ச‌ட்டர்ஜி) ஆங்கிலமொழி அல்லது சீனமொழிபோல் இல்லை. வேதவியாசன் மீனவன்; வால்மீகி வேடன்;
பாணினி என்னும் சமஸ்கிருத இலக்கணியன், பாணன். இறையருளால் இவர்கள் விந்தை விளைத்தனர் என்பது உண்மை. பிரம்மைத்தை உணர்ந்தவர்கள். பெரும்புலவோர்.

சரி, இனி மயிலுக்கு வருவோம்.  ஆரியர் நண்ணில நாடுகளிலிருந்து வந்தோர் எனில், சமஸ்கிருதம் ஆரிய மொழி எனில்  அங்கே   மயில் இல்லை. மயில் தென்னாட்டில் உண்டு. ஆகவே மயில் பெயர், சமஸ்கிருதத்தில் இல்லை. மயில் என்ற தமிழே.  சமஸ்கிருதத்தில் மயூரமாய்த் திரிந்து மலர்ந்தது.

அசோகனும் தன் கல்வெட்டுகளில் மயிலைக் குறிப்பிட்டுள்ளான். அவனது கர்னர் சாசனத்தில்  "மொர" என்றும், அவனது வடமேற்கு சாஸனத்தில்  மஜுர என்றும்  அவனது கால்சி சாஸனத்தில் மஜுல என்றும் இச்சொல் திரிந்துள்ளது

மை + இல் = மயில்.
மை > ம :  ஐகாரக் குறுக்கம்..
யி :  இதில் ய்  யகர உடம்படு மெய்.
இல் = இடம்.  ( கடலில் , மண்ணில் :  இடம் குறித்தது  "இல்" 1)
ஆகவே  மைக்குறிகள்  இட்ட இடங்களை (இறகுகளை )உடைய பறவை..

திருமயிலாடுதுறை  என்பது மயூரம் என்று  மாற்றப்பட்டது.மயூர என்பது சங்க்கதத்துக்காக உருவெடுத்த சொல்.  இதுவும்  மை+ஊர்(தல் )  என்ற இரு தமிழ்ச் சொற்களைக் கொண்டு புனையப்பட்டது.  மை + ஊர் + அம் . We do not know what is currently the official name of this place.    We have not checked it.    ஆனால்  மயூரம் என்பது மாயவரம் என்று மருவிட்டதாகச் சொல்வர் . இது மாயமான  முறையில் கிடைத்த வரமென்றும்  மாய்வதற்குக் கிடைத்த  வரமென்றும்  இரு வழிகளில் பிரிக்கப்படலாம் என்பர்.. 
மையூர்ந்த  சிறகுகள்,  


Footnotes:

-------------

1 வீடு என்பது இன்னொரு பொருள்
2 Panini's Sanskrit grammar was updated by later authors, as demanded by whatever subsequent circumstances.  Karthiyayana and Pathanjali of South India (the lattter from Chidambaram,Tamil Nadu  and a disciple of Mamular) were known updaters. Panan was a minstrel  whence the name Panini. ( just  as the term parathavar means fishermen, whence the word Bharatham,  p-b interchangeable in many words and can be adequately explained.)  .










கருத்துகள் இல்லை: