செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

vidyAsam


விதத்தல் என்ற வினைச்சொல், தமிழ் மொழியினுடையது.
ஒன்றை விதந்து கூறுதல் அல்லது ஓதுதல் எனில், சிறப்புகளை எடுத்து
வேறுபடுத்திக் கூறுதல் அல்லது  ஓதுதல்.

விதத்தல் >  வித+ அம்=  விதம்.

ஒரு" விதம்"
 எனப்படுவது, வேறுபடும் வகையைச் சேர்ந்தது.

"vi(வித்) > வித > விதத்தல்

"vith"  is a constructed root  (artificial)  extracted from "vitha".  For illustration it is shown as
preceding "vitha".  This is Panini's method,
 இந்த  (வித் என்ற) அடியைத் தனித்து எடுத்து, இதிலிருந்து வித்தியாசம் என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டது  தெரிகிறது/

(வித்)  > வித் + இ + ஆய + அம் = வித்தியாயம் > வித்தியாசம்.

வேறுபாடு ஆயது என்பதாம்


வித என்பதே நாம் இங்கு அடிச்சொல்லாகக் காட்டியது ஆகும். அது எப்படி வித் என்பதை முன்வடிவமாகக் கொண்டிருக்க முடியும் என்று ஐயப்பாடு எழலாம்.  இப்படி வருவனவெல்லாம் மிக்க இயல்பானவை.
எடுத்துக்காட்டாக, ஸக (தோழன்) என்று பொருள்படும் சமஸ்கிருத வடிவச் சொல்லைப் பார்ப்போம். உருபு ஏற்கும் போது இது "ஸ்க்" என்று நிற்கிறது. இங்ஙனமே வித என்பதிலிருந்து வித் பெறப்பட்டுப் பின் சொல்லாக்கத்திற்குப் பயன்பட்டது வியப்பன்று   விளக்கம்:

ஸகா  <  (ஸக் )
.

ஸகா  தோழ(ன்)
ஸக்யா  தோழனால்
ஸக்யே  தோழனுக்காக‌
ஸக்யு:  தோழனிடமிருந்து.
ஸக்யௌ  தோழனிடம்

தமிழில்  தகு என்ற சொல்லிலிருந்து  தகுந்த,  தக்க  என்பவை  எடுத்துக்காட்டு.
திரிபு:  தகு+இணை = தக்கிணை >  தச்சிணை >   தட்சிணை..
.

வித்தியாசம் :   இதற்கு  வேறு முடிபும் தமிழிலேயே கூறலாம்.  
அதைப் பின்னொரு முறை காண்போம்.

கருத்துகள் இல்லை: