சனி, 7 பிப்ரவரி, 2015

How did Vodka get its name?

ஊற்று நீர் ஓடுமிடம் ஊற்றுக்கால் எனப்படும். பேச்சுத் தமிழில் 
ஊத்துக்கா என்றும் ஊத்துக்காலு என்றும் வரும்.  றகர ஒற்று முதலியவை  தகர ஒற்றாகத் திரிதல் யாண்டும் காணப்படுவதே.

இது பிறமொழி சென்று உ‍‍‍‍-த-கா என்று திரியும்,  இதன் திரிபுகள் பிற இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் சென்றுள்ளன.

உ என்று தொடங்கும் சொல், ரஷ்ய மொழிக்குச் சென்று வோ என்று திரிவதாய் ஆய்வறிஞர் கூறுவர்.

உ த கா ( ஊத்துக்கா)  அங்கு வோட்கா என்று திரிந்து மதுவின் பெயராகிறது.

இதில் ஒன்றும் வியப்பில்லை. சிக்கன் என்னும் கோழிக்குஞ்சின் பெயர் 
பெயர் இப்போது கறிக்கோழிக்குப் பயன்படுத்தப்படுகிறதல்லவா? 
இது பொருள் திரிபில்லையா?   "தண்ணி"  குடிவகையைக் குறிக்கவில்லை?   இப்படிப் பல .

கருத்துகள் இல்லை: