சனி, 26 ஏப்ரல், 2014

Stone was the cutting instrument - கத்தி

We shall consider how the word "kaththi" (knife) developed. But before that, there are some preliminary matters.

Humans used stone as cutting instrument in the very olden days, before the advent of the iron age when humans made iron tools.

Let's look at the position in the Indo-European family of languages as it will broaden our research and knowledge.

Latin: secare (to cut) :: saxum (a stone).

seax (OE) - a knife.

The above words show that early man used stones as cutting instrument.

In Tamil, we have the word "kaththi".

In the very old days, long long before Tolkappiyam was ever written, this word "kaththi" should have been in the form: "kalthi" . kal means stone. thi is the suffix. It later dropped its "l" and became kaththi.  கத்தி

If you use the "puNarchi" rules of grammar, it should be kal+thi = kaRRi. Such rule had not yet been formulated as yet when the word kaththi was formed or it was not followed, as it occurred in other words too. We shall reserve such examples for the time being.

Thus you have kal > kaththi, a knife, the root being "kal".

Word formation in Tamil appears to be similar to the Indo-European languages.



Notes:


TWD 25052006@1# UPD 02102010: 

Anthropologists have postulated, in a classic work on European ethnology, that the modern day Basque people of the Pyrenees Mountains (northern Spain/southern France) speak a language inherited directly from Cro-Magnon Man (Ripley, 1899).The Basque (Euskara) word for knife means literally "stone that cuts,"

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

வேடு > வேடம்.

vEdam


பானைக்கு வேடு கட்டுதல் என்று ஒரு பேச்சுவழக்கு இருப்பதை அறிகிறேன். பானை வாயை துணிகொண்டு கட்டி மூடிவிடுதலை இது குறிக்கிறது.

வேடு என்ற சொல்லும் வேய் (வேய்தல்) என்பதனோடு தொடர்புடைய சொல்லே. இதை சொன்னூல் முறையில் வேண்டுமானால் காட்டலாம்.

வேடு > வேடம். (துணியினால் அல்லது வேறு பொருட்களால் மூடிக்கொள்ளுதல் அல்லது புனைந்துகொள்ளுதலைக் குறிப்பது.)

இதை வேடம் என்றே எழுதுதல் வேண்டும். usually met as esham

TWD 5@18062006REP17092010

இடும்பைக்கே கொள்கலம்

A receptacle for misery....


இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
குறள் 1029


நாயனார் பெரிய குடும்பக்கலை வல்ல அரும்பெரியார். ஒரு குடும்பக்காரனுக்குத்தான் எத்தனை அல்லல்கள்? எதையெதையெல்லாம் அவன் சரிசெய்துகொண்டு இவ்வுலகில் வாழ்க்கையைத் தொடரவேண்டியுள்ளது?
அக்குடும்பத்துக்கு ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்று கண்ணுங் கருத்துமாகச் செயல்படவேண்டி யுள்ளதே! அதனால், மன அழுத்தம் மிகுந்து, அவனுடலும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உண்டாகிவிடுகிறதே!
மன அழுத்தத்தின் காரணமாக, மாரடைப்புமுதல் புற்று நோய்வரை வந்த நோய்களேதும் மிகுவனவே தவிர , அவற்றுள் ஏதும் குறைந்து நலம்பெறுவதாய்க் காண முடியவில்லையே!

குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் = குடும்பத்துக்கு ஏற்படும் இடர்களைச் சரிப்படுத்திக்கொள்ள முயன்று உழலும் அவன் , 
உடம்பு இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ = துன்பங்களையே உள்வாங்கிச் சுமக்கும் பாத்திரமோ (அவன்) உடம்பு?

இப்படி குடும்பத்தலைவன்பால் மனமிரங்கும் உள்ளம், நாயனாரின் உள்ளம்.

துன்பம் வருங்கால் நகுக என்கிறாரே, துறவு பூண்டு ஓடிவிடு என்கிறாரோ!! மனம் இரங்கவும் செய்கிறார் அல்லவா?



453@15112010 

A day with more than 24 hours...............

பகலும் இரவுமே நீளாமலே ---  நாம் 
பார்க்கும் சோலிகள் தீராமலே,
அகலும் பொழுதுகள் ஒவ்வொன்றுமே ---  மன 
ஆறுதல் தீர்த்ததே என்றென்றுமே! 

 ( In   some countries of the world:-  )

அதிகாரிகள் வந்தே  ஆணையிட்டார் ---  ஆனால் 
அன்றாட வேலைகள் கோணவிட்டார்!
நதி  நீரும்  குடி நீரும் பஞ்சமென்பார்  --- மக்கள் 
நாடியும் பெற்றவை  கொஞ்சமென்பார் 

-----

.அலுவலர் மணிமுள்ளை நீட்டிக்கணும்  ---  அந்த 
ஆண்டவன் வந்திதை கேட்டுக்கணும்;
பகலவன்  நாள் நீட்டித் தந்துவிட்டால்  --- இன்பம் 
பாரெங்கும் கதவினை வந்துதட்டும்


ஒரு நாள்  இருபத்து  நான்கென்பதை  ----  இனி 
ஊரார்க்கு  நாற்பத்தி எட்டாக்கணும்;
இரு நாள் செய்வதை ஒரு நாளிலே ---. செய் தால் 
இன்பமே   எங்கணும் வரு  நாளிலே

வைபோகம்

வைபோகம் என்ற சொல்லை மிக்க அழகுடன் புனைந்துள்ளனர். கரு நாடக இசைப்பாடலில்  அதைக் கேட்குங்கால்  தம் சொந்த ஆனின் (பசுவின் ) அழகு  கண்டு  மகிழ்வுற்ற இன்பம் (ஆன் +அம் +தம்   > தம்  ஆன்  அம் )  எமக்கு விளைகின்றது!  அதுதான்  ஆனந்தம் !

:ஞான குரு  பரன்
 தீனர்க் கருள் குகன்,
வானவரும் தொழும்
ஆனந்த வைபோகன்!

என்று பாடுவார்   எம்.எல்  வசந்த குமாரி அம்மா.

முதலில் வைபோகம் என்பது யாது , உசாவி அறிவோம்.  இதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமாயின் grandeur,   magnificence என்றெல்லாம் குறிக்கலாம். மகிழ்வும் கவர்ச்சியும் மனத்தால் ஒரு பிணைப்பும் ஏற்படுத்தும் ஓர்  உயர்  நிகழ்வு எனலாமா?

இதை ஏன்  தேர்ந்தெடுத்தோம் ?

அவை  என்பதன்   "வை"  என்னும் சொல்லையும்  "வையகம், வையம் " என்பவற்றின் "வை"  என்னும் பயன்பாட்டையும் .  வைகுதல் என்னும் சொலாக்கக்த்தையும் ஆய்ந்துண ர்ந்த பின்பு  இவ் "வைபோகத்தில்" ஈடுபடுதல் மிக்கப் பொருத்தமுடைத்தாய்  இருக்கும்.  அதனால்தான்.

வை எனின் நுகர்வோன்முன் சிறப்பாக இடப்பட்டது.(வைக்கப்பட்டது )என்பது.  bestowed,

போகம் என்னும் பதம், ஓர் இடக்கர் அடக்கல் சொல். "இவள் அவனிடம் போய்விட்டாள்"  என்று அடக்கிச் சொல்வார்கள். இந்தப் "போவது" என்பதிலிருந்து புனையப் பட்டதே "போகம்" என்பது.  ஆ>  ஆகு,  போ> போகு> போகு+அம் = போகம் என்றாகும்.  இதுவும், வேறு பல போலவே,   பேச்சு வழக்கிலிருந்து திரிக்கப்பட்ட  (புனையப்பட்ட) சொல்.

உங்கள் ஆய்விற்கு சில சமஸ்கிருதச் சொற்கள் :

vinirbhoga m. Name. of a cosmic period ;    vinirbhoga m. (probably . from  bhuj -  Name of a partic. cosmic period. visambhoga male {bhuj} separation   vRthAbhoga

போகம்  என்பது  தமிழ் மூலத்தையுடைய  ---  ஆனால்   இப்போது அயற்சொல்!  எனப் படுவது.    இரண்டு  இலக்கத்துக்குக்  குறைவான  சங்கதச்  சொற்களில்    1/3  விழுக்காடு திராவிடச் சொற்கள் என்பது டாக்டர்  லகோவரியின்  முடிவு. சங்கத்தின் ஒலி அமைப்பு  திராவிட அடிப்படையிலானது   என்பது சட்டர்ஜி அவர்களின்  ஆய்வு.  நான்  இதுவரை  கூறிய  மொத்தம் ,   சிலவே. Less  than a couple of hundreds.

" வை" தமிழே.

வைப்புத் தொகை என்பதென்ன? உங்கள் ஆய்வுக்கு.

edit reserved.



.

வியாழன், 24 ஏப்ரல், 2014

அ வை II

அ வை  என்ற சொல்லின் உருவாக்கத்தைக் கண்டு களித்தோம்.

இனி வை என்ற சொல்லில் விளைந்த இடங்குறிக்கும்  இரு சொற்களைச் சந்திப்போம்.

வை  --  வையகம்;

வை + அகம்  - இறைவனால் வைக்கப்பட்ட இடமாகிய இந்தப் பூமி என்பது. மற்றும் நாம் இனிதே வைகும் இந்த நில வுலகு. 

வை +   அம்  = வையம்., இதுவும் அதே!

வை என்ற சொல்லில் இருந்து ஒரு வினைச் சொல்லும்  தோன்றியது..   அது என்ன?

வை+ கு  =  வைகு. > வைகுதல்.  ஓரிடத்தில் தங்குதல். 

இவை எல்லாம் அவை என்னும் சொல்லுக்கு  உறவுச்  சொற்கள்


----------------------------------------------------------------------------------------------------------
The Tamil editor has  a problem.  Could not continue. Will return  later to edit.  Enjoy what is written in the mean time.  Thank you dear readers.

அவை

அவை என்ற சொல் உருப்பெற்ற வழியை ஆராய்வோம்.

வை என்ற ஓர் எழுத்துச் சொல்  பல பொருட்களை உடையது. அவற்றுள் ஒன்று, ஓர் இடத்தில் ஒன்றை இடுதல்  என்பதாகும்.  இடப்படுவது, ஒரு  பொருளாகவும் இருக்கலாம். மக்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்.

"திருமணத்தை எங்கே  வைத்திருக்கிறார்கள்?"

"மாநாட்டை எங்கே  வைத்திருக்கிறார்கள்?

நிகழ்ச்சி வைத்த  இடம்  "வை"  ஆகும். முதனிலைத்   தொழிற்பெயர்.

அ  -  சுட்டுச் சொல். ஆகும்.

குகையிலோ   அரண்மனையிலோ  நிற்பவன்  முதன்முதலில்  சுட்டிச் சொல்லியிருப்பான்.  நாளேற நாளேற  கைகால்களை ஆட்டிச்  சுட்டிக்கொண்டிருக்க மாட்டான். வெறுமனே  "அவை"  என்றிருப்பான்.

அவர் இவர்  என்பதிலெல்லாம்    சுட்டு உள்ளது.   கைகால்களை ஆட்டிச் சுட்டுவதில்லை.

சுட்டிப்பேசுவது அவமரியாதை  என்னும் கலாச்சாரங்களும் உண்டு.  அஃது தவிர்க்கப்படும்.

நாளடைவில்  சுட்டு பொருளிழக்கவேண்டும்.     இழந்தது.

பின்  மதிதகு பேர்கள் கூடுவதற்கு  வைக்கப்பட்ட இடம் (appointed place for assembly) அவை எனப்பட்டது.  இடப் பெயர் பின் அங்கு கூடும் புலவரையும்  (அல்லது பிற பெரியோரையும் குறிக்கும் (அப்படிக் குறித்தலை ஆகுபெயர் என்பர் நம் தமிழிலக்கணத்திலே .)

Inscriptions evidence of temple built by Manickavasagar

FRESH EVIDENCE: Inscriptions found at Aavudaiyar Koil in Pudukottai district.
FRESH EVIDENCE: Inscriptions found at Aavudaiyar Koil in Pudukottai district.


The Saivite savant of the 9th century  or earlier era  used money meant for buying horses to construct the temple

Legend has it the Manickavasagar, one of the four Saivite savants, constructed the temple at Avudaiyarkoil, known as Thiruperunthurai, in Pudukottai district.
Now the State Archaeology department has stumbled upon inscriptions confirming that Manickavasagar, the Minister of Pandiya King Arimarthana Pandian, built the sanctum sanctorum and the kanagasabha mandapam.
“His contribution has been recorded in the form of a poem. The inscriptions, found in the Panchakshara mandapam of the temple built in the 16th century, also record that Thiruvachagam was inscribed on the walls,” said G. Muthusamy, registering officer of the department in Tiruchi region.
Manickavasagar belonged to the 9th century and was said to have used the money meant for buying horses for the cavalry to construct the temple at Thiruperunthurai, one of the ports of the Pandiya Kingdom. Manickavasagar penned Thiruvachagam and Thirupalliyezhuchi while camping in this temple and referred to it as Thiruperunthurai.
“So far, we have only oral narration about the temple construction. The discovery proved beyond doubt Manickavasagar's role,” said Mr Muthusamy.
Even as the temple construction was in progress, King Arimarthana Pandian waited for days for the arrival of Manickavasagar and the horses. Later, he realised that the money was already spent and commanded Manickavasagar to bring along the horses without further delay. According to tradition, Lord Siva transformed a pack of foxes into fine breed of horses. In the night, the horses became foxes and let out a deafening howl.
God appeared before the king and explained he was behind the mischievous drama. The story of ‘nariyai’ (fox) ‘pariyakkuthal’ (horse) is still enacted during temple festivals in Madurai,


புதன், 23 ஏப்ரல், 2014

"பேரேடு " and parade.

நாட்சம்பளம் பெறும் ஊழியர் மிகப்பலர் வேலைபார்க்கும் குழும்பு(companies)களில் அதிகாலை அவர்களையெல்லாம்  அணி அணியாய் நிறுத்திப்  பெயரெடுப்பதாய்க் கூறுகின்றனர். இதைப்  "பேரேடு "  (அதாவது பெயர் எடுத்தல் )  என்கின்றனர்.

இந்தச் சொல், ஆங்கிலத்தில்  உள்ள parade என்பதுடன் ஒலி  ஒற்றுமை உடையதென்பதைக் கண்டுகொள்ளலாம்.
Parade என்பது பெரும்பாலும் படைகளில் வழங்கும் சொல்லாகும். இது இலத்தீன் parare என்ற சொல்லினின்று வருகிறது.

இலத்தீன் மொழிக்கு இச்சொல் எப்படிக் கிடைத்த தென்று தெரியவில்லை.

தமிழ் ஊழியர் வழங்கும் "பேரேடு"  என்பதும் இந்த ஆங்கிலச்சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது. 
  

கண்றாவி.


பேச்சில் பெரிதும் புழங்கும் சொல் இது. இதில் முதலில் உள்ளது  "கண்" என்பது.  இது தெளிவு.

அடுத்து வருவது  அராவி.    இது அராவுதல் என்னும் சொல்லினின்று உருவானது.

அராவு ‍   ஆங்கிலத்தில்   ஃபைலிங்  (filing)  என்பர்.    அரத்தினால்  தேய்த்தல்.


கண்ணராவி எனின்  கண்ணை அரம்போட்டுத்  தேய்த்தல் போன்ற  துன்பத்தினைத் தரும்  காட்சி என்று பொருள்.

கண்ணை வருத்தும் காட்சி.

கண்ணராவி >  கண்றாவி.

தேர்தல் கலை

 இந்தியப் பெருந்தேர்தல்  --- கள்ளம்
 இல்லாப்  பொதுமக்கள்!---சொல்லால்
 வந்து பொழிந்திடுவார் ‍‍‍‍‍‍‍‍‍;--- வேட்பர்
 வயம்தமை   இழந்திடுவர்.

 எங்கும் நடப்பதுபோல்  --- தருவார்
 தம்முறுதி  மொழிகள்‍--- களத்தில்
 தங்கி  உழைப்பவர்போல் --- தோன்றின்
 வென்றி விளைப்பவரே!

 தேர்தல்  போனபின்னே  ‍‍‍‍--- சொன்னவை
 தேற வில்லை யென்றால் --- அதுவும்
 யார்தம்  குற்றமையா ‍‍‍---  அதுவே
 தேர்தல் கலையல்லவோ!

 மீண்டும்  வேறொருவர் ‍‍‍‍--- தம்மை
 மேற்கொண்டு செல்வதன்றி  ‍‍--- ஞாலம்
 யாண்டும்  வேறுவழி ---- இல்லார்
 யாது     தலைப்படுவார்?‍‍



வேட்பர்   ==  வேட்பாளர்.   
சொல்லால் வந்து (உறுதிமொழிகளைப்) பொழிந்திடும்  வேட்பாளர் வயம்  தம்மை இழ ந்திடுவர் என்ற படி.  சொல்லாடும்  திறம்  கூறியது. 
 வென்றி ==  வெற்றி.
மேற்கொண்டு -   தேர்ந்தெடுத்து.
தலைப்படுவார்? =  செய்ய இயலும் ? என்பது 





செவ்வாய், 22 ஏப்ரல், 2014

uthayam உதயம்

அ , இ , உ  என்பன சுட்டுக்கள். இவற்றிலிருந்து அது, இது உது என்பனவும் அவை, இவை, உவை  என்னும்  அவற்றின்  பன்மை வடிவங்களும் தோன்றின.
மொழியில் உது, உவை என்பன இருப்பினும், நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை; அதற்கான இயல்பான வாய்ப்பும் ஏற்படுவதில்லை.

அ , இ , உ  என்பன  பல சொற்களுக்குத் தாயானவை. இவற்றுள் "உ" மிகப்பல சொற்களுக்குத் தாய்.  உ - ஒரு மக்களைப் பெற்ற மகராசி.

காலை முன் எழுவித்து ஒரு பொருளை சற்று கடினமாகத் தொட்டால்,  உது  என்பதிலிருந்து உதை என்ற சொல் பிறந்து, அச்செயலைக் குறிக்கின்றது.

பிற மொழிகள் பெரும்பாலும் தமிழ்ச்  சொல்லின் இரண்டாம் 3எழுத்தை முதலாக்கி அதிலிருந்து சொற்களைப் படைத்துக்கொள்கின்றன.

எடுத்துக்காட்டு:

உது > உதை  (தமிழ் )  பேச்சு வழக்கு : உத - ஓத
உதை  > ஒத  >  த >  தி(ண்டாங்)  (மலாய்)..

You have to make a research into many similar words to ascertain what is ("ண்") ("டாங்")

அரு > அருமை  (தமிழ்)
அரு>  ரேர்  (  rare)  ஆங்கிலம். "re" is hardly pronounced or not stressed.

இப்படிப் பல முன்  காட்டியுள்ளேன். அறிஞர்  பிறரும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

 சரி, இப்போது உதயம் என்ற சொல்லுக்கு வருவோம்.

உ  (முன்னிலை )

உது  >  உத > உதயம் .   (முன் னெழுதல்)

பல்லாயிரம் ஆண்டுகள் மொழிகள் தனித்தனி வளர்ச்சி  கண்டு உருப்பெற்றதனால்,   சொற்களின் ஒற்றுமை  குன்றியும் வேற்றுமை விரிந்துமே  காணப்பெறும். தொடர்நோக்கின்  (prolonged and focused examination)  பயனாகவே உண்மை உணரலாகும்.

திங்கள், 21 ஏப்ரல், 2014

தேவை & தேள்வை

தேவை என்ற சொல்லைச் சிலர் தேள்வை என்றே சொல்வர்.

இவற்றின் தொடர்பினை ஆய்வு செய்வோம்.

நீள் என்ற சொல்,  நீடு எனறும் தோன்றும்.

நீள் + அம் =  நீளம்;

நீடு + அம் =  நீட்டம்.

நீள் =  நீடு.  நீளுதல் ‍    நீடுதல்.   நீள் >  நீடு.

எனவே,  தேள்  >  தேடு.   

தேவை என்பதில் வை என்பது விகுதி. --- மூலம்  தே என்பது.

தே >  தேள் > தேடு.

தே+ வை = தேவை.

தேள் + வை = தேள்வை.

எனவெ, தேள் எனபதில்   ளகர  ஒற்று  குறைந்திருக்கலாம். தே என்றாகியிருக்கலாம்.

அல்லது தே என்பது ள் பெற்று நீண்டிருக்கலாம்.

எனவே,  தேள்வை என்பதும் ஏற்றுக்கொள்ளற்பாலதென்போம். 

பேய்விரட்டும் மந்திரச்சொல்

பின்னல்பாய்  தேங்காய்கள் இவற்றை வைத்துப்
பேய்விரட்டும் மந்திரச்சொல் பிசகா நிற்ப‌
முன்னிவரும் வானூர்தி முயன்றார் காண
முனிவுகொண்ட மக்கள்சிலர் முழுவீச் சாக
என்ன இது! ஏய்ப்பதென எதிர்ப்புக் கொண்டார்
எங்கு சென்று வீழ்ந்ததுவோ எழில்வா  னூர்தி,
அன்னநிகழ் வோடிவரும் அயர்ந்தார் என்றே
அனைவரும்ஓய்ந்  திருந்தார் இவ்  அழகு நாட்டில். 

சின்னாட்கள் முன்பாகச் சிங்கு (1)  மாண்ட‌
செல்வழியே சேர்சாலை இடத்தில் பேய்கள்
இன்னும்தாம் இருப்பவையே என்று கூறி
இவர்மீண்டும் மந்திரம் செய்  நிகழ்வில் நின்றார்
மின்னொளிபோல் புகழ்கூட்டும் செய்கை ஈண்டு
மீள இவர் ஆகாதே என்பர் பல்லோர்
பன்னுமொரு செய்திதனைப் படித்து  நீங்கள்
பாரில்மந்   திரவாதத் துண்மை சொல்வீர்.  


Raja Bomoh spouting mumbo-jumbo again

Magic to chase away spirits

Note:  Recently there was a road accident in which a famous lawyer Kirpal Singh(1)  died.  Now a bomoh (Malay magician) claims that the accident was caused by spirits which he wanted to drive way with his magic.
The poem is on this topic  To get a clearer picture, you may wish to also read the news at the link above.


On a related topic:
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_18.html




ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வருத்தகம் II

இத்தகைய (வரு-  வர  -  வர்  )    என்ற முதலசைகளின் மாற்றமும் மிகவும் தேவையானதே   ஆகும்.   காரணம்  "வரத்து > வரத்தகம்" என்ற நிலையில்
அஃது  பொருள் ஊருக்குள் வருதலையே  குறிக்கும் இயல்பு உடையதாய்த் தோன்றுவதே

அதை .  "வர் "   என்று மாற்றினால்  பொருள் உள்வரவும் வெளிச்செல்கையும்  
ஆகிய இருவழி நிகழ்வுகளையும் குறித்ததாக அமையக்கூடும்.  சொல்லைப் பயன்படுத்துவோர் இச்சொல்லின் பொருள்   உள்வரு  பண்டங்களுக்கே உரியது போன்ற உணர்வினை   எளிதில் மறந்து மனத்  தடை யாதும் இன்றிப் பயன்படுத்தும் வழி கோலப்படும்
.
மேலும்   வரு> வர்  என்னும் திரிபு பேச்சில் இல்லாததன்று   "வர்ரியா ",   "வர்ரான்"  ,   "வர்ராள் "  "வர்ராங்க"   என்று மடை  திறந்தன்ன திரிபுகள் உள்ளனவே.

வர்த்தகம் என்பது ஓர் அழகிய தமிழ்ச்சொல். ஆய்ந்துணர அது தெளிவாம். 

வருத்தகம் ...................

யப்பானியர் (ஜப்பானியர்)  தென்கிழகாசிய நாடுகளைக் கைப்பற்றி  யாண்ட காலங்களில் தடுப்புக் கைதிகளைத் துன்புறுத்தும் நிலையங்கள் பல செயல்பட்டன வென்பர். பிடித்துக் கொணர்ந்து  வருத்தும் இவ்விடங்களை  "வருத்தகங்கள்"  எனின் எத்துணைப் பொருத்தம் என்று சொல்லவும் வேண்டுமோ?  (torture chambers)

வருத்து  + அகம் =  வருத்தகம். எனல் பொருத்தமே. ஆனாலும் இவற்றை யாரும் இப்படிக்  குறித்ததாக யான் அறியேன். 

ஆனால்  நான்  கூற விழைந்தது  இவை பற்றி அல்ல.

ஏற்றுமதி - இறக்குமதி சரக்குகள் மாற்று வணிகத்தில் பயன் பெறும் "வர்த்தகம் "   என்னும் சொல்லே நாம்  ஆயப்   புகும் சொல்லாம்.

போக்குவரத்து  என்னும் சொல்லை நோக்குங்கள்.  இதில் "வரு "(வருதல்) என்பதில் உள்ள "ரு "    சொல்லாக்கத்தில் "ர " என்று  திரிந்துள்ளது. ஆக, ரகர ஒற்றின் மேலேறிய உகரம் கெட்டு அகரம்  வந்துற்றது.  எனவே பொருள்களை வருவித்தல் என்னும் பொருளில்  "பொருள் வரத்து" எனப்பட்டது. இது பேச்சு வழக்கில் சொல்லப்படுவது  ஆகும்.

இந்த   வரத்திலிருந்து அமைந்ததே வரத்தகம். அதுபின் "வர்த்தகம் " என்று அழகு படுத்தப்பட்டது.  ( word polishing).  இதன்மூலம் அது  வரு என்னும் மூலத்தை உடையது என்பதை மறந்து   தடையின்றிப்  பயன்படுத்தவும் ஒரு வாய்ப்பு நல்கப்பட்டது.

குறிப்பு:

வரம்+ அத்து +இல்+ இருந்து  =  வரத்திலிருந்து.  (அத்து -  சாரியை)
வரத்து +  இல் + இருந்து.=  வரத்திலிருந்து . (வரத்து -  சொற் பகுதி ,  இல் -  உருபு .இருந்து - சொல்லுருபு.)
வருத்து =  துன்புறுத்து என்பது.. .



  

சனி, 19 ஏப்ரல், 2014

Words of cleanliness

ஐந்து புலனுணர்ச்சிகளில் "தொட்டறிவு" (sense of touch)  அல்லது "தோலுணர்ச்சி " ஒன்றாகும். இதனை  ஊறு  என்போம்.

ஊறு  என்பதோ உறுதல் என்னும் வினையடியாய்ப் பிறந்த சொல். உறு என்பது  ஊறு என்று முதலெழுத்து நீண்டு பெயர்ச்சொல் ஆயிற்று. இப்படித் திரிந்து பெயரானவை எண்ணிறந்தவை ஆகும்.

உறத்   தக்கது, அதாவது தொடத் தக்கது தூய்மை.  தொடத் தகாதது அழுக்கு அல்லது துப்புரவு இல்லாதது.

குழந்தைப் பருவத்திலேயே நமக்கு இது சொல்லித் தரப்படுகிறது.

எனவே உறுதல் தொடத்தக்கது என்பதையும் அப்புறம் தொடத்தக்கது தூய்மையையு,ம் குறித்தன.

உறு> உது > உத்தம் > சுத்தம் என்று திரிந்தது.

உது+அம்  = உத்தம்.   (இங்கு  து+அம் = த்தம் என்றானது).

உறு + அம்  > உற்றம் > உத்தம் எனினுமாகும்.

உத்தம் > உத்தமர் . (தொடற்குரியவர்,  நல்லவர், நல்ல குணங்களை உடையவர். என்று   பொருள் விரிவு கொள்ளும்).

"தின்மை செய்பவரே --  அண்டித் 
தீண்ட ஒண்ணாதார் "

கவிமணி தேசிக விநாயகம்  பிள்ளை.  



"தீயாரைக் காண்பதுவும் தீதே" என்பதனால்,  தீயார் அல்லது  சுத்தம் இல்லாதவர், மனத்தாலும் கையாலும்  மெய்யாலும் தொடற்குரியர் அல்லர்

மொழி வளர்ச்சி என்பது கருத்து வளர்ச்சியும் அதற்கேற்ற சொல் திரிபும் ஆகும்

உத்தமர் என்பது உ+ தமர் எனவும் பிரியும். உ = முன்னிலை; தமர்  = நம் ஆள்  என்பது.  முன்னிலையாய் உள்ள நம்மவர் என்றும் பொருளாம். இப்படி இச்சொல் இருபொருள் தரும்.

"தான் என்றும் தமர் என்றும் நினைப்பதன்றித் 
தமிழ் நாட்டின் நலத்தினுக்கே உயிர் உடல்கள் 
அமைக "

--  பாரதிதாசன் 



வெள்ளி, 18 ஏப்ரல், 2014

காட்டில் வாழ்ந்த காலத்திலே......




காட்டில் வாழ்ந்த காலத்திலே  ---  பல
கரடிகள் புலிகள் கொன்றன நம்மை
நாட்டில் வாழும் நாளுற்றதும்  --- நலம்
நல்கிடும் உந்துகள் கொல்வன உண்மை !

வேறு சந்தம்


ஏழை இன்பொருள் மேல்பெற்றவன்---- ‍‍‍ ஞாலம்
ஏத்திடும் போற்றிடும் நூல்கற்றவன்
மோழை மூடன் யாரென்கிலும்---  ‍‍‍உந்து
மோதிக் கொல்படை! கூராயுதம்.

மரணம் வருவது காத்தோமா நாம்?  -  பல
மரணப் படைக்கலன் சேர்த்துவைத்தோம்!
கரணம் தப்பினால் மாண்டுவிடும் ---   அந்தக்
காரியம் மாறுமோ?  யாண்டுமில்லை!

விபத்தில் இறந்தார் யாவருக்கும் ---  நெஞ்சு
விம்மிய துயருடன் விடைபகர்வோம்!
சிவத்தில் இணைந்தார் இன்னவர்கள்!---  நம்மின்
சீர்பெறு உலகில் முன்னவர்கள்!.


http://www.nst.com.my/latest/font-color-red-karpal-singh-s-death-font-a-picture-of-grief-at-the-hospital-1.570504


http://www.thehindu.com/news/international/world/eminent-malaysian-lawyer-karpal-singh-dies/article5921311.ece

வியாழன், 17 ஏப்ரல், 2014

முயற்சித்தல்


இந்தச் சொல்லின் அடிச்சொல் எதுவெனின்,  முயலு(தல்) என்பதே ஆகும். அல்லது முயல்தல் எனினும் ஏற்கற்பாலதே. முயலல் என்பதும் சரிதான்.

முயல் என்பதே அடியாய் உள்ள வினைச்சொல்.  "கேள்வி முயல்" என்று ஆத்திசூடியில்   வருகிறது  அன்றோ?.  அப்படி  என்றால்,  கேள்வி  கேட்டு அவற்றின் மூலம்  அறிவை விரிவு படுத்திக் கொள் என்பது பொருள்.

முயல் என்று  ஓர்  உயிரி  உண்டு. இங்கு  நமது கவனத்தில் இருப்பது ஓர்  வினை.  ஓர் உயிரி  (விலங்கு )  அன்று.

முயல் + சி  =   முயற்சி.  சி -  விகுதி.

வினைச்சொல்லினின்றும்  சி விகுதி பெற்று ஓரு தொழிற்பெயர்  அமைந்துள்ளது.

முயற்சி  மீண்டும் வினையாகுமா?

முயற்சித்தல்   என்பது சரியானால், பயிற்சித்தல், உயர்ச்சித்தல்  என்றெல்லாம் வரவேண்டுமே. தொழிற் பெயர்கள் இங்ஙனம் அமையா.

"முயற்சிக்கிறான்" என்று பேசக் கூடாது,  எழுதவும் கூடாது.

தொல்காப்பியத்தில் தொழிற்பெயரிலிருந்து வினை அமைவது காணப்படுகிறது.

"மெய்யி   னி யற்கை  புள்ளியொடு  நிலையல் "   (தொல் 15).

என்ற நூற்பாவைப் பாருங்கள்.

நில்  + ஐ =  நிலை.

நிலை -  நிலையல் மற்றும்  நிலைத்தல் என்று  நிலை என்ற பெயர்ச்சொல்  மீண்டும் வினை ஆகவில்லையா?

பெயரே மீண்டும் வினை ஆனாலும்,  நிற்றல் என்பதன் பொருள் வேறு,  நிலைத்தல் என்பதன் பொருள் வேறு. முயற்சித்தல் என்ற சொல்லமைப்பிலிருந்து இது வேறுபடுவது ஆகும்.
முயலுதல் என்பதும் முயற்சித்தல் என்பதும் பொருள்  ஒன்றுதான். ஆகையால், முயற்சித்தல் என்பது வேண்டாத நீட்சி என்பர்.

எனினும் முயற்சித்தல் என்பது இன்னும் வழங்கவே செய்கிறது  -- தவறென்று ஆசிரியர் கடிந்தாலும்.

muyaRchiththal is a malformation.

கோர்வை, முயற்சிப்பது" என்பவெல்லாம் பிழைகள் என்பதில் ஐயமில்லை.தாளிகைத் துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொல்கிறார்: கோவை என்று எழுதினால் மக்களுக்குப் புரியாது, முயலுதல் என்றால் முயலைப்பற்றிய எண்ணம் வந்துவிடுகிறது என்று! -- சொல்லிப் புன்னகை வேறு புரிந்தார். அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் போலிருக்கின்றது. நாம் நல்லதமிழ் பயில்வோம் ------Sivamala, writing on 18.6.2006




புதன், 16 ஏப்ரல், 2014

உத்தரவு

 இச்சொல் தமிழன்று என்று சொல்வாருமுண்டு.  

இச்சொல் வேற்று மொழி அகராதிகளிலும் இடம் பெற்றிருந்திருக்கக் காணப்பட்டமை ஒரு காரணமாயிருக்கலாம். ஒரு சொல் எங்கு தோன்றியிருப்பினும் அது வழங்கும் மொழிக்குரியதாக எடுத்துக்கொள்வதும் ஒரு வழியாம். எ - டு   காவல் என்பது தமிழ் ஆயினும் அது மலாய் மொழியிலும் தனியாகவும் முன்னொட்டு பின்னொட்டுகளுடனும் வலம்  வருகிறது. வழக்கின் காரணமாய் அதுவும் மலாய்ச் சொல் ஆகும். மற்றும் அது தமிழ்ச் சொல்லும் ஆகும். தமிழில் தோன்றி வழங்கியும் வருகிறது.  இப்படி  முறைப்படுத்துவதில் தவறில்லை.  இது  நிற்க.

அ ,  இ, உ  என்பன தமிழ்ச்     சுட்டுகள்.  இவற்றுள் உ என்பது முன்னிலை குறிப்பது.

தரவு  =  தரப்படுவது.  தரு+ வு  = தரவு  ஆகும்.  ஒப்பீடு: வரு + வு > வரவு.

 ,முன்னிலையாய் உள்ளவர் தருவதே உத்தரவு ஆகும்.

இது தமிழன்று என்பதற்கு காரணம் ஒன்றுமில்லை. கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் இல்லாமல் இருக்கலாம். அது சரியான காரணமன்று.
இப்படியான இலக்கியங்கள்  உலகின் பல மொழிகளில் இல்லை.

வந்தனை

வினைப் பகுதியிலிருந்து தொழிற் பெயர்களை அமைத்தலே தமிழ் முறையாம். ஆனால் பிற மொழிகளில் எச்ச வினைகளிலிருந்தும் (1)  பெயர்ச் சொற்களை அமைப்பதுண்டு. இப்படித் தமிழில் அமைந்தவை ஒரு சிலவே ஆம். இதை நாம் முன்பே அறிந்துள்ளோம்.

ஒருவர் நம் வீட்டுக்கு வருகிறார் என்றால், "வா'ங்க வா'ங்க" என்போம். செய்யுள் நடையில் "வந்திடுவீர், வந்திடுவீர் "  என்றோ "வருக வருக"   என்றோ சொல்லும் பழக்கம் பெரும்பாலும் நம்மிடம்  இல்லை எனலாம்.
 எங்ஙனமாயினும் வந்தவரை  வணக்கத்துடன் அழைக்கும் பண்புடையார்  தமிழரெனின் மிகையன்று.

 இப்பண்பு பிறரிடத்து இல்லையென்பது பொருளன்று .

இப்போது விடையத்திற்கு வருவோம்.

வந்திடுக என்பதே "வந்தித்தல்" ஆகும். வருமாறு வணங்கி ஏற்றுக்கொள்ளல்.

வந்திடு > வந்தி > வந்தித்தல்.
அல்லது  வந்து > வந்தி > வந்தித்தல்.

இரண்டும் ஒன்றுதான். வந்து என்பது எச்ச வினை. (1)

வந்தி + அன்+ ஐ  =  வந்தனை.
வந்தி + அன்+ அம்  = வந்தனம்.

 அடிச்சொல்  "வா" என்பதே.

"யாம் வந்தோம்" என்பதை "யாம் வந்தனம்" என்று சொல்லலாம். நீவிர்  வந்தீர்  என்பதை "நீவிர்  வந்தனிர் " எனலாம். ஈண்டு வந்தனம் வந்தனிர்  என்பன வினை முற்றுக்கள். இவை அன் சாரியை பெற்றன.

வந்தனம் என்பது அமைந்த விதமே இங்கு கூறப்பட்டது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.  ---- பாரதி.


மிதம். meaning moderation, medium

மிதம் என்ற தமிழ்ச் சொல்லையும் அதனோடு தொடர்புடைய பிறவற்றையும் காண்போம்.

மிதத்தல் என்பது கனமற்ற  பொருள்கள் நீரில் மிதப்பதை குறிக்கும்

.குறிக்கவே,  அதன்கணிருந்து  தோன்றிய மிதமென்பது,  கனம் குறைவானது, என்பதைக் குறித்து, பின்பு கூடுதலாக இல்லாத எதையும்  குறிப்பதாக விரிவடைந்தது. அதன்பின், கூடுதலுமில்லை,  குறைவுமில்லை, நடுத்தரமென்று கணிக்கத் தக்கது என்னும் பொருளை இறுதிவிளக்கமாய் வந்தடைந்தது.

மித + அம் = மிதம்.

மித  என்ற சொல்லில்  இறுதியில்  அகர உயிர் நிற்கின்றது.  மி+ த்  + அ.
அம் என்ற விகுதியில்   "அ" இருக்கிறது.
ஆகவே, ஓர்  உயிர்எழுத்து (அ) தவிர்க்கப்ப‌டும்.


மிதமாகவே உண்டால் நீச்சலின் போது நன்கு மிதக்கலாம்.

சில சொற்கள் தங்கள் அடிச்சொல்லின் பொருளினின்று சற்று    விரிவு அடையும்.

எடுத்துக்காட்டாக ஜாதி என்ற சமஸ்கிருத வடிவச் சொல்லைப பாருங்களேன்.  சமஸ்கிருதப் பண்டிதன்மார்  ஜா - பிற  be born  என்ற அடியில் தி விகுதி சேர்ந்து சொல்லமைநதது  என்கிறார்கள்.  அப்படியானால் அது பிறப்பு  என்று மட்டும் பொருள்படவேண்டுமே!   A group of people of a certain occupational  class, who became members of that class by birth and who are not allowed to change their membership of that class during their lifetime  என்று பொருள்  அழகுடன் .விரியவில்லையா  .........இதைத்தான் பொருள்விரி என்கிறோம்.

will revise. text editor too slow. 

திங்கள், 14 ஏப்ரல், 2014

சிலை

இனிச்  சிலை என்னும் சொல்.

மனிதன் கல்லைச் செதுக்கிச் சிலைகள்  செய்யத் தொடங்கிய காலை அவை சிறியவையாய் இருந்தன. நன்கு திறன் மற்றும் செய்பொருட்கள் பெற்ற பின்பே பெருஞ் சிலைகள்  உருவாகின.

பெரிய சிலைக்குப் பெரிய கல் வேண்டும். தூக்க  ஆள் வேண்டும்.   தூக்குவோரையும் சாப்பாடு  போட்டுக் கவனித்துக்கொள்ளவேண்டும். செதுக்கப் பலர் வேண்டும் . சிறியதில் தொடங்கியதே "இயற்கை".யானது  மாமன்னர்கள் துணையின்றி  எப்படிப் பெருங்கற்களை, மற்றும்   பாறைகளைக்  கொணர்வது?

கண்ணகி சிலை  சமைக்க ஒரு பெரும்படையே போயல்லவா கல் கொண்டு வந்தது?

சில்  என்ற சொல்  சிறுமை குறித்தது  கண்டோம்.

ஆகவே  சில்   + ஐ  = சிலை   ஆனது.

பின் அது பெரிதையும் குறித்தது.

----------------------------------------------------------------------

குறிப்பு:-  சிலை என்பதற்கு வேறு  பொருள்களும் உள.



ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மக்களை ஏய்த்துவிட்டு....

மன்னரை வீழ்த்திவிட்டு
இன்னரும் மக்களை ஏய்த்துவிட்டு
படைத்தலைவர்  பாராண்ட  கதை
புவி எங்கும் புலப்படுகின்றது!
அன்று நடந்தது
இன்று  நடவாதென்று
கூறுவரோ யாரேனும்!
நாட்டுக்கொரு தலைவிதி உண்டோ?
இருந்தால்
நடந்தே  தீரும் அதன்படி
விதி என்றொன்று இல்லை என்றாலும்
நடப்பது நடக்கும்
நடந்த பின் நல்லோர் வந்து
புலனாய்வு பலசெய்து
சட்டத்தை மீறிய சண்டாளனை
தண்டிக்க  முயல்வதுண்டு!

நல்லதே நான் செய்தேன்!
நானா சண்டாளன்?
நானெப்படிக்  குற்றவாளி ??

சட்டத்தில் ஓட்டை கண்டுபிடிப்பதுதான்
ஒரு கலையாயிற்றே!

மன்னர் ஆட்சி ஆயின் என்ன?
 மக்கள் ஆட்சி ஆயின் என்ன?

ஓட்டை இல்லாத சட்டம்
உலகில் இல்லையே!\\

https://www.blogger.com/blogger.g?blogID=7941642520803533372#allposts

சீனி

சீனி என்ற தமிழ்ச்சொல் தமிழ் நாட்டில்  மெதுவாக மறைந்துவருகிறது போலும்.  தமிழகத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் sugar என்கிறார்கள்.  இனிப்பு  நோயாளிகளும் sugar ஏறி விட்டதென்று சொல்வர்.

சீனி என்ற சொல் எப்படி வந்தது  அறிந்தால்,  ஒருவேளை அச்சொல்லை மிக  விரும்பிப்   பயன்படுத்துவரோ என்னவோ`!

எதற்கும் நாம் அதை அறிந்துகொள்வோம்.

கற்கண்டு சற்று பெரிய கட்டிகளாக வருகின்றது.  சீனி  தூள் செய்யப்பட்ட கற்கண்டு தான். ஆகவே அது சிறு துகள்களாக இருப்பது.

இதுவும் சில்  அடிச்சொல்லிலிருந்து வருகிறது என்பர். Pl see chinthu and chillaRai , previous posts.

சில் >  சின் >  சீன் > சீனி .

சின்னவன் சின்னப்பன் முதலிய சொற்களில் சில் > சின் என்று திரிகிறது.

சின்  > சீனி   {முதனிலை நீண்டது.).

இதுபோன்று முதலெழுத்து நீண்ட சொற்களைப் பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள்.

இங்ஙனம்  அன்றி ,  தமிழறிஞர் க. ப  மகிழ்நன் (    K.P. Santhosh )  (1948)    இது  சீனாவிலிருந்து வந்தமையால்  சீனி என்று பெயர் பெற்றது என்கிறார். இந்தப் பிற்கால ஆய்வினை அவர் அறிந்திருக்கவில்லை.

இரண்டு வகையிலும் பொருத்தமாய் அமைந்தது இச்சொல்.  சில வகைக் காய்கறிகள், சிறிய உருவில் இருப்பதால் சீனி என்ற அடைமொழி பெற்று குறிக்கப்பட்டன.  ஆனால், சீன வெடி, சீனாக் கற்கண்டு, சீனத்துக் கிளி
என்ற சுட்டுகைகளையும் கவனிக்கவேண்டும்.

Neither is wrong.   

சில்லறை



சில்லறை என்பதைக் கவனிப்போம்.

சில் என்பது சிறுமை குறிக்கும்  ஓர் அடிச்சொல்.

அது சிந்து என்ற அழகிய சொல்லமையத் தன்னை ஈந்தது.  அதை முன் இடுகையில் கண்டோம்.

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_996.html

சிறு என்பதும் சில் என்பதன் திரிபே.

"அந்த வெடிவிபத்தில் ஒரு சில் வந்து அவனைத் தாக்கிக் காயம் ஏற்படுத்தியது."

சில் - பெயர்ந்து வரும் சிறிய கல் .

சில் என்பது தானே ஒரு சொல்லாகவும் நிற்கும் ; ஏனைச் சொற்களுக்கு அடிச்சொல்லாகவும் வரும்.

சில் + அறு +ஐ   =   சில்லறை ,   சிறிது சிறிதாய் "அறுக்கப்" பட்டதென்று பொருள் .

Room எனப் பொருள் படும் அறை என்பதும் "அறுக்கப் " பட்டதென்றெ பொருள்தரும் .

குறிப்பு:

அர்த்த  -  இது பாதி என்று பொருள் தரும்.  இதுவும் "அறுத்த"  என்பதன் திரிபே என்று தமிழறிஞர்  சிலர் கருத்துரைத்துள்ளனர்.  எ-டு  :  அர்த்தயாமம் 

சிந்து

இனி சிந்து என்ற சொல்லினைப் பார்ப்போம்.

தமிழில் சிந்து என்றால் இயல்பான அளவிற் குறைந்தது என்பது பொருள்.

எடுத்துக்காட்டாக,ஒரு கவிதையில் ஓர் அடிக்கு 4 சீர்கள்  இருக்கவேண்டும். மூன்றே சீர்கள் இருந்தால் அது சிந்து எனப்படும்.

பாட்டுக்கு / ஒருபுலவன் /  பாரதியடா.

இது சிந்து.

இதன் அடிச்சொல் சில் என்பது.    சில் ‍   சின்   சிந்+ து.  சிந்து.

இது பின் ஆற்றின் பெயராகவும்  இந்து என்று மாறி ஓர்  இறை நெறியின் பெயராகவும் வந்துள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------
This post was lost  and so much has been retrieved,

-----------------------------------------------------------------------------------------------------------

note:
A discussion on Sindhu

http://forumhub.com/tlit/13516.8379.22.07.56.html  

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பாணரும் பாணினியும்

பழந்தமிழகத்திலும் அதன் கற்று வட்டங்களிலும் சிறப்புத் தொழிலுடையோர் பலர் வாழ்ந்தனர் என்று தெரிகிறது.  பழந்தமிழ்  நூல்களையும் கலைகளையும் காக்கும் தொழிலை மேற்கொண்டு  "காப்பியக் குடியினர்" என்போர் விளங்கினர் !  தொல்காப்பியனார் இக்குடியில் பிறந்து மிகுபுகழ் எய்தினர் என்பர் ஆய்வாளர் சிலர். இங்ஙனமே  வள்ளுவக் குடியினரும் அவர்கள்தம் சிறப்புத் தொழிலை (நூல் இயற்றுதல்,  காலக் கணிப்புகள் செய்து பிறர்க்கு அறிவுறுத்துதல் )  செய்து வந்தனராம்.

இப்படித் திறன்மிக்கத் தொழில்களில் ஈடுபட்டோர் பிற நாடுகளிலும் இருந்தனர்.  யூதர்களில், எழுதுவோர் (scribes),  வேதம் பற்றுநர் ( pharisees ), சாதுசீக்கள் அல்லது நம்பாதார் (saducees)**,  பொதுவூழியர் ( publicans)  என்றெல்லாம் பல குழுவினர்  இருந்தனர்  என்று தெரிகிறது.1  அரபு நாட்டிலும் கத்தீபுகள் என்று குறிக்கப்பட்ட கல்வியாளர்கள் இருந்தனர்.

தமிழ் நாட்டில் பாணர்கள் இருந்தனர். இவர்களின்  வேலை கற்றலும்   பாட்டுகள் புனைந்து பாடுதலும் பிறவுமாம். இவர்கள் திறன் மிக்கோராய் இருந்ததுடன்.அரசர் மந்திரிகள் முதலானோருடன் ஒருங்கு நின்று தம் வேலைகளில் மகிழ்ந்தோராயும் இருந்தனர் என்பது தெளிவு.2

சமஸ்கிருதத்துக்கு முன்னோடியான மொழிக்கு இலக்கணம் இயற்றிய பெருமைக்குரிய பாணினியும் இந்தப் பாணர் வகுப்பைச் சேர்ந்த பெரும்புலவர் என்று தெரிகிறது.

பண் >  பாண் > பாணன்.  

பாண் + இன் + இ =  பாணினி  .  "பாண்" வகுப்பினன்.3

பிற்காலத்தில் இவ்வகுப்பினர் தம் நிலையினின்று  இறங்கிவிட்டனர்

பாணினி   என்ற சொல் இதைத் தெளிவாக்குகிறது.

அத்தியாயம் என்ற சொல்லை இவர் அமைத்ததிலிருந்து அல்லது பயன் படுத்தியதிலிருந்து  இவர் தமிழறிந்தவர் போல் .தெரிகிறது .

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_3362.html

இவர்தம் சொற்றொகுதியை (vocabulary)  நன்கு ஆராய்ந்தால் மேலும் சான்றுகள்  கிடைக்கலாம்.


பாணினி  தம் குடி விளங்குமாறு "பாணினீயம் " இயற்றியது பிற குடியின் அறிஞர் போற்றிய வழியே ஆம். பரதவர்  வழி வந்தவர் தம் குடி மறக்காமல் பாரதம் இயற்றியது காண்க.  பாண்டியர் மீன் கொடி உடையராய் ஆண்டதும், பரவை என்ற சொல் கடலைக் குறித்தலும், பரதவர் என்பது மீனவர் என்று பொருள்படுதலும்,  பரதம் > பாரதம் என்ற சொற்களும், பாரதம் இயற்றியோன் மீனவ வழி வந்தவனாயிருத்தலும் மீனவர்கள் அரசு நிறுவியிருந்ததைத் தெரிவிக்கும்.  மனிதனின் கடலோர நாகரிகம் மீனுடன் தொடர்புடையது. கடல் வண்ணன் விட்ணு மச்சாவதாரம் எடுத்ததும் காண்க. அரசு நிறுவியபின் மீன் உணவை நிறுத்தி அதனை இறைமையுடன் தொடர்புறுத்தினர். இது நாகரிக மேம்பாட்டைக் குறிக்கிறது.  ஆய்ந்துணர்க.

----------------------------------------------------------------------------------------------------

Notes:

1  Described in other terms by  Tamil NT translators.

2  Consult  Tamil Studies   by  M Sreenivasa Ayyangkar on the position of these castemen  or groups in by-gone days.

3 Some western researches thought "pan" must be his father's name.  They thought so because janaka+ i  = janaki, was  Janaka's daughter.  Also, dasaratha+ i = Dasarathi, i., Rama, the son of Dasaratha. Following this. we can say that if he was not a  Panan, then his father was one. Maybe, his mother was not a Panan!! This is not so different an outcome.

**  Saducees  did not believe in resurrection,  ghosts etc. You may post your comments about this group if you have something additional or at variance.

will edit

நம் இளைஞர்

அழகுள்ளோர்க் கரசென்றே   அறைந்தார் பெண்ணை;
அதுதானும் நாமேற்க மாட்டோம் என்று
மிளகுள்ள சொற்களிலே இளைஞர் சில்லோர்
மேல்வழக்கில் ஈடுபட்டார் இற்றை ஞாலம்
சிறகுள்ள பறவைகளைக் கொண்ட தம்மா
சீரான கட்டுக்குள் சேர்ந்து நில்லார்
விறகுள்ள அடுப்புக்குள் விட்ட தீயில்
வெந்து தணல் காணாமல் விடவே மாட்டார்



Notes
அறைந்தார்  -    declared.  மிளகுள்ள  -    காரமான  (சொற்கள் .)    
மேல்வழக்கில்  -   வாக்குவாதத்தில்.   ஞாலம்  -  உலகம் .

சிறகுள்ள பறவை -   free birds without restrictions  (can fly as and when they feel like....).
சீரான கட்டு  - tightly regulated conditions.  சேர்ந்து  நில்லார்  -- would not tie themselves down to abide by what is set for them by others.
  விறகுள்ள அடுப்புக்குள் விட்ட தீயில்   வெந்து தணல் காணாமல் விடவே மாட்டார் --(they)  would not leave the matter without attaining what they set out to achieve.

\(meaning is given above.  not exact translation of  words.)
  

வியாழன், 10 ஏப்ரல், 2014

வேறுபடும் உத்தரவுகளை..........

இருவேறு நீதி மன்றங்களின் ஒன்றுக்கொன்று வேறுபடும் உத்தரவுகளைப் பிறப்பித்ததால் பிள்ளைகளின் தாயாருக்கும் சட்டவல்லுநர்களுக்கும்  தலைச்சுழற்சியாய் உள்ளதாம்.

இந்த  முன் இடுகையின் தொடர்ச்சி.

https://www.blogger.com/blogger.g?blogID=7941642520803533372#editor/target=post;postID=4002681425338457102;onPublishedMenu=posts;onClosedMenu=posts;postNum=3;src=postname

http://www.thestar.com.my/News/Nation/2014/04/11/Cops-No-probe-on-Izwan-Father-who-allegedly-took-son-has-custody-order-too-says-OCPD

Police will not investigate ................... You may read the news by clicking the above

அத்தியாயம்.

முன் இடுகையில்  நாம் "அத்தியாயம் " என்ற சொல்லினைக் கண்டோம். இதற்குமுன் இதைப்பற்றிய ஒரு விளக்கம் எழுதியிருந்தேன்.  எங்கென்று தேடவேண்டும். இந்த இடுகையில்  இச்சொல் குறிக்கப்பட்டுள்ளது    .http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_10.html 

ஒரு  நூலில் ஒரு பகுதி முடிந்து, அதே நூலில் இன்னொரு பகுதி தொடங்கினால்  இது அடுத்த அத்தியாயம் என்போம். இதை ஆங்கிலத்தில் chapter என்பர் : இது உங்களுக்குத் தெரியும் .

இதற்கு ஒரு சொல் புனைந்து பார்க்கலாம்.

ஒரு பகுதி அற்றது.  அதாவது முடிந்தது. இருந்தாலும் நூல் இன்னும் முடியவில்லை. அடுத்த பகுதி அதனோடு இயைகிறது.

அற்று (ஒன்று முடிந்து)
இயை  (இன்னொன்று இயைகிறது).
அம்  என்ற விகுதி கொடுப்போம்.

அற்று + இயை + அம் .

ஆனால் பேச்சு வழக்கில் நாம் அற்று என்பதை அத்து என்றல்ல்லவா சொல்கிறோம்?

ஆகவே, 

அத்து+ இயை +அம் = அத்தியையம் .

யையையை என்று வந்தால் வாய்க்குத் தடையாய் உள்ளது. ஆக, யை என்ற எழுத்தைத் தூக்கி எறிக.  அதற்கு பதில் "யா"  போடுக.

ஆக,   அத்தியாயம்.

நன்றாக  இருக்கிறதா ?


Note:   I may look for my old writings when I have the time.  Some forums where I wrote them have closed down. Web masters gone, perhaps for good.  I too have to spend time looking for my own records. There are data charges too incurred. The best is to write anew.  If you have read it before, please bear with me.
I will edit later,

உபாத்தியாய - வாத்தியார்

உபாத்தியாய என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குப் பல பொருள் உண்டு.  வேதங்கள் வேதந்தாந்தங்கள், இலக்கணம் முதலிய சொல்லிக்கொடுத்து அது தரும் ஊதியத்தால் வாழ்பவர் என்பது ஒரு பொருள். இது ஒரு  கல்வி கற்பிக்கும் பெண்ணையும் (ஆசிரியை) குறிக்கும். மூன்றாவது பொருள் கற்பிப்போன் ஒருவனின் மனைவி என்பதுமாகும்,  சமஸ்கிருத நூல்களில் இச்சொல் வருங்காலை, இடம் நோக்கிப் பொருள் அறிய வேண்டும்.  ஆச்சார்யா என்பது வேறென்பர் சமஸ்கிருத ஆசிரியர்.

தமிழில் வழங்கும் வாத்தியார் என்பதற்கு இந்தப் பொருள்களெல்லாம் இல்லை. வாத்தி என்பவர்  வாய்மொழியாகக் கல்வி கற்பிப்பவர்.  வாய்> வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.  "வாய்  மூடு"   என்பதை "வா மூடு" என்பவர்களும் உள்ளபடியால், யகரம்   மறைதலின் இயல்புண்மை அறியலாகும். வாத்தியார் மனைவியை நாம் வாத்தியார் என்பதில்லை. ஆசிரியை என்பதை "வாத்திச்சி "என்பது சற்று "பணிவுக் குறைவு"டையதாய்த் தோன்றுகிறது . இது "வாத்தி ஸ்ரீ "  அன்று.  ஸ்ரீ  ஆயின் உயர்வு தோன்றுதல் வேண்டுமே !

அத்யாயிகா  வாசிப்போன்;   கற்போன்.

அத்யாயின்  மாணவன்.மாணவி.

அத்யாய     இது  நூற்பகுதி குறிக்கும். chapter of a  book.

உப +    அத்யாய‌ =  உபாத்யாய    -   வேத முதலியன போதிப்பவர் .

எனவே வாத்தியார் என்பது வேறு,  உபாத்யாய என்பது வேறு .

இவ்விரு சொற்களும் குழப்படி செய்யப்பட்டுள்ளன என்று புரிந்துகொள்ளல் வேண்டும்.

வாத்தியார் என்பது கொச்சை  உபாத்தியாயர் அதற்குச் சரியானது என்று நமது ஆசிரியர்கள் "தறுதலாகத் திருத்தியதன்" காரணமாக நேர்ந்த  குழப்பம்  இதுவாகும்.



புதன், 9 ஏப்ரல், 2014

நாடகம்

நாடகம் எனப்படும் சொல்லை ஆய்வோம்.

இச்சொல்லினுள்  நுழையுமுன் சில விதிகளை நாம் மனங்கொள்ள வேண்டும்.

இவற்றைக் கவனியுங்கள்.

படு >  பாடு.
சுடு  > சூடு.

படுதல் சுடுதல்  ஆகிய வினைகளினின்று  அமைந்த பெயர்களே   பாடு   சூடு  முதலியன.   முதனிலை திரிந்த (நீண்ட ) பெயர்களே.இவை

வினைச்சொல்லின் முதலெழுத்து நீண்டு பெயராய் மாறின.

காகிதம் போடு ,  காகிதம் ஒரு பொருள். அதைப் போடலாம்.
சூடு போடு .  சூடு ஒரு காணும்  பொருளன்று.  எனினும் சூடு என்ற சொல் ஒரு பொருள் போலுமே நிற்பது காணலாம்.

இவற்றுள் சில பின்னும் ஒரு விகுதி பெறுதல் உண்டு.  எ-டு   சூடம் .(அம் ).

இப்போது நாடகத்துக்குப் போவோம்.

நடி+ அகம்  =  நாடகம்.

இங்கு ந  என்பது நா  என்று  நீண்டது .  பின் நடி  என்பதன் இறுதி இகரம்  கெட்டது  (மறைந்தது).  அகம் என்ற விகுதி வர,  நாடகம் ஆயிற்று.

பாடம் என்பதும் அப்படியே.   படி என்பதில் இகரம் கெ ட்டது. பகரம் நீண்டது.
 அம்  சேர்ந்தது.

நாடகம் என்பதில் அகம் ஒரு விகுதியாய்க் கொள்வோம்.  அதை இன்னும் பிரித்துக் காட்டுதல் கூடும் எனினும் இப்போதைக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறேன். 

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

Hindu mother gets custody of her Muslim children

  
Email
Facebook
80
SEREMBAN:  (Malaysia) The High Court here awarded the custody of two children who had been converted to Islam by their father to their 30-year-old Hindu mother.
Judge Datuk Zabariah Mohd Yusof who made her decision in chambers on Monday said custody should go to S. Deepa, as she had married her ex-husband now known as Izwan Abdullah, 31, under the Law Reform Act. She also granted Deepa’s divorce application.
Also present in court was Izwan as well as the couple’s two children, aged six and nine.
Deepa who married Izwan in 2004 had during an interview with The Star in June last year claimed that her husband had abandoned the family in February the previous year.
She claimed that in April last year, he took both their children to the Pusat Dakwah Islam here, and converted them without her knowledge.
Prior to this, the Syariah Court had awarded custody of the two children to their father.
Deepa was only allowed visitation rights once a fortnight.
Her former husband will be appealing the High Court's decision.

திங்கள், 7 ஏப்ரல், 2014

இந்தியத் தேர்தல்.

கோடிபல  மக்கள்விழை குரல்கொடுக்கும் தேர்தல்,
கோணலற நெறிப்படுத்தும் ஆணையம் ஆள்  தேர்தல் !
மோடி இரு காந்திகளும் மோதுகின்ற தேர்தல்
முன்போலும் கட்சிபல முயன்றயர்த்தும் தேர்தல்
ஓடியாடி உழைப்பர் தொண்டர்   ஊர்மலிந்த தேர்தல்
ஒற்றுமைக்கோ  ஒத்துவராப்  பற்றுறுத்தும் தேர்தல்
கூடியணி      சேர்ந்தரசு  கொண்டிலங்கத் தேர்தல்
நாடும்வழி நானிலத்தார் காணவிழைந்தாரே !

விழை குரல்  = வாக்குகள் .  ஆணையம் - தேர்தல் ஆணையம்.

வானூர்திப் பய‌ணிகள் -- ‍தணியாத் துன்பம்.



கடல்படுகை தனில்கிடந்த கருப்புப்   பெட்டி
கணித்தறியக் குறியொலிகள் மேற்செ  லுத்த,
விடல்விழையாத்  தேடுகுழு மிக்கு (உ)வந்து 
விண்டதுவா   னூர்திதனைக் காண்போ  மென்று!
உடலுயிரோ டிப்பயணம் போனோ     ரெல்லாம்
ஒரு நாள்வந்  திடுவாரென் றிருந்த பேதை
அடல்தீக்குள் இறகுபற்றி  எரிந்து வீழ்ந்த 
அளியதொரு   சிறுசிதலாய்  ஆகி  னேனே!


குறியொலி  -  signals  from the black box.




Noah and Manu.

நோவா  பற்றிய கதை இப்போது  படமாக வெளிவந்துள்ளது. மலேசியாவிலும்  இந்தோனேசியாவிலும் இப்படம்  தடை செய்யப் பட்டுள்ளது அன்பர்கள் அறிந்ததே.

Malaysia-indonesia-ban-biblical-epic-noah:
:
https://my.news.yahoo.com/malaysia-indonesia-ban-biblical-epic-noah-062617292.htmll


KUALA LUMPUR, Malaysia (AP) — Malaysia and Indonesia have banned the biblical epic "Noah," joining other Muslim nations that forbid the Hollywood movie for its visual depiction of the prophet..............

ஆபி டூபா பற்றி இங்கு முன்னரே எழுதியுள்ளேன்.  முதலியார் என்ற சொல்லைப்  பற்றிய இடுகையில்.

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_2.html


ஆபி  அவர்கள் நோவா பற்றியும் குறித்துள்ளார்.

மனு  (மனுதர்ம நூலாசிரியர் )  >  (மனுவன் )*  >(  மனுவா )* > நோவா  (Noah)
Dubois prefers the reverse of this presentation, as he feels manu story is from  the Bible and adopted by the Indians.


இஸ்லாமில்  இவரும்  ஒரு நபி . ( இறைமுன்னுரைஞர்  or prophet).

* retrieved forms for connexion.

You may wish to read more on this if it interests you. The Great Flood is  mentioned in our literature as well as in Middle Eastern tradition.



ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

An exercise on word formation on adoption தத்து

This purports to be an extension of my last  post on "thaththu" .  Here we examine a number of other ways in which a term meaning or standing for "adoption"  could have been formed. Well,  we must  reach our conclusions at the end of the exercise.  Attempt has been made to keep to ways which must of necessity be unfamiliar  to the reader,  so as to of some pleasure.

தத்து  என்பது புலவர் புனைவு அன்று.    மக்கள் சொல்பேச்சு வழக்குச் சொற்களை "கொச்சைஎன்று  குறிப்பதோர்  வித அறியாமை. பேச்சு  வழக்கோ  உயிருள்ளது.
எழுத்தும்  எழுதப்பட்ட நூல்களும் பேச்சு  வழக்கைப் பார்த்து    "உன்னால்தானே வாழ்கிறேன்  நான்என்று பாடினால்   அது  முற்றும் உண்மையாம்பேச்சு  மாத்திரம் இல்லையானால்   ஏனையவை  "அழிந்து  ஒழிந்து  சிதைந்துவிடும்.   " அது  நிற்க.
இப்போது   தத்து  என்பதை வேறு  விதமாக அமைத்திருக்க  முடியுமா என்று பார்க்கலாம்.


தன்து =   தன்று.
இது  நாளடைவில்  தன்னு  என்று மாறிவிடும்ஒநோ    இன்றுஇன்னு.

தன் + + து    = தனத்து. ( தனது   வேறு).

+ அது ==  தவது.   / தயதுமற்றும் தவத்து    தயத்து.

தன்+ தன.(இதில்   ஏதேனும்   விகுதி வேண்டும்).

அது  + தன்  =  அதுதன்  அல்லது    அதுதனம்  அல்லது    அத்தனம்.

பிலிப்பைன்ஸ்  முதல்   ஃபார்மோசா  வரையில்  அவ்வம்மொழிகளுகேற்ப இந்த இரண்டு   துணுக்குகளை வைத்தே பல  புனையலாம்.

இவை யாவினும்  தத்தே   நன்று. ஒரு பையனோ பெண்ணோ எடுத்து வளர்க்கப்  படுங்காலை அவனுக்கு / அவளுக்குத் தெரியாமல் வளர்க்கப் படுதலே பெரும்பான்மை. பிறர் சுட்டும்போது இதை அடக்கியே வாசிக்க வேண்டும்   சிக்கல்கள் தோன்றுதலைத்  தவிர்த்தல்  கடமை. தத்து  என்பது இங்ஙனம் அடக்கலாகத் தோன்றி  இன்றைய அளவில் முழு  ஓட்டம் பெற்றுவிட்ட சொல். சில எழுத்துக்களை  மறைத்துச் சொல்லமைத்தல் இங்கு தேவையானது.