வியாழன், 18 ஜனவரி, 2024

வோயேஜ் (ஆங்). சொல்

 பயணம் என்று பொருள் தரும் "வோயேஜ்" - சொல்லைக் 'கண்கொள்வோம்'

வாய் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இடம் என்ற பொருள் உண்டு என்று சொல்லியிருந்தோம்.  நல்லபடியாகப் போய் வாருங்கள் என்பதை போன் வாயேஜ் அல்லது பான் வாயேஜ் என்பார்கள்.

பொன்னே  நல்லது." பொன்னேபோல் போய் வருக" என்றால் நன்றாக இல்லையா. பொன் எப்போதும் பாதுகாப்பாகவே போகும். வரும். திருடன் கொண்டுபோனாலும் பாதுகாப்பாகவே கொண்டுபோவான். பரம யோக்கியன்  கொண்டுபோனாலும்  பாதுகாப்பாகவே இடம் பெயர்வான். பாதுகாப்பு ஏற்படுவது பொருளின்  தன்மையினால். போனஸாக இருந்தாலும் போனாவாக இருந்தாலும் மூலமானது பொன்னே. பி-க்கு B போட்டால்  இது மறைந்துவிடாது. இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒன்றுக்கு மற்றது மாற்றீடாக வரும்.

இடத்திலிருந்து ஏகுவது,  அதாவது ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குப் போவது  வாய் ஏகுதல்.  \

வாய் ஏகு >  வாயேகு >  வாயேஜு,  அதாவது இடம்பெயர்தல்,  பயணம் போதல்.

வழி என்று பொருள்தரும் via,  வாய் என்ற சொல்லே.

சென்னைப் பல்கலையின் ஒரு வரலாற்றுப் பேராசிரியர் செய்த ஆய்வின்படி,  தமிழ்நாட்டிலிருந்து பண்டிதர்கள் சென்று உரோமப் பேரரசின் தொடக்ககாலத்தில் இலத்தீன் மொழியைச் சீரமைத்து விரிவுபடுத்த உதவினர் என்று அறியப்படுகின்றது.  இதை ஆய்வறிஞர் மயிலை வேங்கடசாமியும் தம் நூலில் பதிவிட்டுள்ளார்.  எம் பழைய இடுகை ஒன்றிலும் இதைக் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் சமஸ்கிருத ( சங்கதச்) சொற்கள் அப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன என்பது அறிக.

ஒரு சிறிய மாகாணத்தில் மட்டுமே இருந்த பழைய இலத்தீன்  புதுப்பிக்கப்பட்டு உரோமப் பேரரசுப் பயன்பாட்டுக்கு  ஆட்சி மற்றும் அலுவல் மொழியாய் விரிவு படுத்தப்படுகையில்,  மொழிவளம் பெருக்க, பல சொற்களை ஏற்றுக்கொண்டனர்.  பின் அவை மற்ற ஏனை இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் இடம்பெற்றன என்பதை அறிக. ஆங்கிலோ செக்சன் மொழியும் இவ்வாறே செழிப்புற்று வல்லரசு மொழியாயிற்று. தமிழரசு நடைபெற்ற காலை பல யவனர்களும் தமிழ் வழங்கிய நாடுகளின் அரசுகளில் பணிபுரிந்தனர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை: