சனி, 27 ஜனவரி, 2024

வராதவர்

 அழைத்து வந்தவர் அருகில் இருக்கவும்

பிழைத்த தன்மையால்  வாரா   தார்தமை

நுழைத்து     நுழைத்துப் பேசிடப் புகுதலோ

தழைத்தல் உற்றுற வாக்கிடக் கூடுமோ



அழைத்த பத்துப் பேரில் ஒன்பதின்மர் வந்துவிட்டனர். ஒருவர் வரவில்லை. வராதாவருக்குப் பல காரணஙகள் இருக்கலாம் . அவர்   வராமையை ப்   பொ து முறையில் பேசி ஆய்வு செய்யக் கூடாது.  அது ஒன்பது பேருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். பின்னர் தனிப்பட்ட முறையில் அறிந்து மகிழ்க


அழைத்து - அழைப்பிதழ் கொடுத்துக் கூப்பிட்டு, 

வந்தவர் அருகில் இருக்கவும் - அதை ஏற்றுக்கொண்டு    வந்து   அவர்கள் அமர்ந்திருக்கையில்,

பிழைத்த தன்மையால்  வாரா   தார்தமை - பிசகு ஏறியதன் காரணியினால். அழைப்புக்கு வராதவர் எவரையும்,

நுழைத்து     நுழைத்துப் பேசிடப் புகுதலோ--- மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையில் இந்த வராமை நிகழ்வினைப் புகுத்திப் புகுத்தி  உரையாடத் தொடங்குவதானது,

தழைத்தல் உற்றுற வாக்கிடக் கூடுமோ----  வராதவர் மன இணக்கம் முறிந்ததால் வரவில்லை என்றால் இப்படிக் கேட்பதால்  மீண்டும் உறவு தழைத்து எழுந்துவிடுமோ  என்றவாறு. அது காரணம் என்றாலும் அதுவன்று காரணம் என்றாலும் இப்படிக் கேட்பதனால் நிலைமை சீர்பட்டுவிடாது என்பது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


கருத்துகள் இல்லை: