"குதர்க்கம்" பேசி என்னை மயக்க
எங்கு கற்றீரோ?"
உனது கடைக்கண் பார்வை காட்டும்
பாடம் தன்னிலே,"
இந்தப் பாட்டின் கடைசிக்கு முந்திய இரு வரிகளயே இங்குக் காட்டியுள்ளோம். பாடல் முழுமையும் குதர்க்கமாகவே உள்ளது.இப்படிப் பேசினால் அதைத்தான் குதர்க்கம் என்கிறோம்.
வரிக்குவரி, வாக்கியத்துக்கு வாக்கியம் பொருள் முரண்பாட்ட நிலையில் வருவதுதான் குதர்க்கப் பேச்சு.
இச்சொல் எப்படி அமைந்தது?
தர்க்கம் ( தருக்கம்) என்பதிலிருந்து குதர்க்கம் வருகிறது. இதற்குரிய வினைச்சொல்: தருதல்.
இங்குத் தருதலாவது மற்றொன்று தருதல் அல்லது " முரண் தருதல். '
குறு + தருக்கம் > கு + தர்க்கம்.> குதர்க்கம்
*போல* அமைந்த இன்னொரு சொல்:
பொருள்களை வரவழைப்பது வருத்தகம் எனப்பட்டது வருத்து+அகம்> வருத்தகம்>>வர்த்தகம் இது வரத்து என்று ம் திரியும் ( வருந்து> வருத்து பிறவினை வேறு,.)
வரவு>வரத்து ரு >ர திரிபு அறிக.
வரு> வர> வரன் (மாப்பிள்ளை)
வரு : இதில் இடைநிலை முன் உகரம் கெடும்
அகரம்: இடைநிலை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக