கணவரை இழந்து வாடிக்கொண்டிருக்கும் மனைவி, அக்கணவரின் எரியும் சிதைக்குள் புகுந்து தானு மெரிந்து சாம்பலாவது "தீயாகுதல்". இக்கருத்திலிருந்து:
தீயாகு + அம் > தீயாகம் > தியாகம்.
சொன்முதல் நெடில் குறுகியும் பெயரமையும். பிறவாறும் வரும்.
எ-டு:
சாவு> சவம் ( பிணம்)
தோண்டு+ ஐ > தொண்டை.
வினைச்சொல்: வா - வந்தான். வருக.
எனப் பலவாகும்.
கணவனாகிய அரசன் தோற்று இறந்தபின் அரசி வாழ விரும்பாமையால் இது நிகழும் . பின்னர் இதன் பொருள் விரிந்தது.
தியாகம்> தியாகி.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக