இந்த வகைப் புலிகட்குத் தமிழில் சிறுத்தை என்று பெயர்.
சிறு - சிறிய வகை.
சிறு + தை (விகுதி) - சிறுத்தை.
இச்சொல்லில், று என்பது வல்லின எழுத்து. பெரும்பாலும் தமிழ் மூலச்சொற்கள் வேறு மொழிக்குப் போனால், வல்லின எழுத்து மறையும். கட்டுமரம் > கட்டமாரான் என்பது போலும் சொற்கள் இதற்கு விதிவிலக்கு. வல்லின எழுத்து மறையவில்லை.
சிறுத்தை > சி (று) [ த் ] ஐ
சிறுத்தை > சி (றுத்) தை
சி > சீ. நெடிலாகிவிட்டது.
தை > தா.
ஐகாரத்தில் முடியும் எழுத்துக்களை அயலார் ஆ என்று நீட்டி முடிப்பர். எடுத்துக்காட்டு:
சின்னையா > சீ-நா-யா
சிறுத்தை என்பது சீ(த்)தா என்ற புலிப்பெயருக்கு மூலம்.
றுகரம் மறைந்த இன்னொரு பழஞ்சொல்:
சிறுசு > சிசு. ( குழந்தை ). இங்கு று என்ற வல்லின எழுத்து மறைந்தது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக