[ அன்பர் ஒருவர் ஒவ்வொரு நாளும் வாழ்த்துச்செய்தி அனுப்புவார். நானும் அவருக்கு பதிலனுப்புவேன். என் பதில்களில் இருந்த சொற்களைக் கோவை செய்து, இங்கு ஒரு கவிதைபோல் வடித்துள்ளேன். வாசித்து மகிழ்க. அழித்துவிடலாம் என்று எண்ணியபோது அதிலொரு கவி இன்பம் ஒளிந்துகொண்டிருப்பது தெரிந்தது. அழிக்காமல் இவ்வாறு எழுதினேன். நன்றி ]
திருவெலாம் வரவாய் ஆக்கும்
திங்கள்தித் திக்கும் நாளே!
செல்வமே சேர்க்கும் செவ்வாய்
செவ்வனே நிகழும் யாவும்.
புதுமைக்குப் புதுமை செய்யும்
புதன்பி(ன்)னே வியாழன் வந்து,
வியப்புற இனிமை சேர்க்கும்
வெள்ளியால் விரிந்த நன்மை!
மகிழ்ச்சியோ மலையாய் ஆகும்.
சனியினால் தனித்த வெற்றி.
சோதனை மாறக் கண்டு
சாதனை யாகக் கொள்வீர்
ஞாயிறு தன்னில் நீங்கள்
நாயக மாய்ச்சொ லிப்பீர்/
வழிவழி முழுமை பெற்று
வாழ்வெலாம் வெற்றி வாழ்வே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக