கோயில்குளம் போய்வருவாள் பாட்டி யம்மா,
கும்பிடுமப் போதினிலே குதூக லந்தான்!
நோயினொரு தொற்றுமிக்கு வந்த காலை,
நுடங்கிவிட்ட நடபடிகள் அடங்கா எண்ணில்,
வாயிலையே திறந்துவைத்தே உள்ளுக் குள்ளே,
வந்துவந்து பார்த்துப்போம் நடமாட் டத்தை
மேய ஒரு எழுத்தாண்மைச் செல்வி தன்னை
மேதினியில் காண்கதிரு விளைத்த வாறே.
குதூகலம் - மகிழ்வு
நடபடிகள் - செயல்பாடுகள்
நுடங்கி - முடங்கி
மேதினி - உலகம்
திருவிளைத்த - மேலான நடபடிக்கைகள் உண்டாக்கிய
ம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக