ஐயப்ப சாமியைக் கும்பிடுவாய் --- பல
அன்றே நலம்வரும் நம்பிடுவாய்.
கோயிலானாலும் குடியிருப்பானாலும்
கும்பிடுவாய் நம் ஐயப்பனை!
ஆயிஅப்பன் பிள்ளை குட்டிகள்
அத்தனை பேரையும் காப்பாத்துவான்,
மாயமும் இல்லே மந்திரம் இல்லே
மனத்திலே வைத்தாய் அன்பதனால்
தாயின்நாட்டில் மலைக்குப் போய்வர
தடையிருந்தால் வீட்டில் தாள்பணிவாய்.
மலையில் பார்த்தாலும் அழகானவன்
ஊரில் பார்த்தாலும் அழகானவன்
சிலையில் பார்த்தாலும் அழகானவன்---- உன்னைச்
சின்னப் பிள்ளைபோல் சீராட்டுவான்.
சிலையில் இருப்பதோர் அழகு --- அதைச்
சிந்தித்து அடங்கிச் செவ்வனே பழகு..
( எந்த வீட்டுச் சிலை என்று தெரியவில்லை.
எங்கிருந்தாலும் ஐயப்பனே.)
தாயின் நாட்டில் - தாயின் இன் நாட்டில் : தாய் பிறந்த இனிய நாட்டில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக