தூற்றுவது என்ற சொல்லை இயல்பான நிலையில் அறிய வேண்டுமானால் அதனை ஒரு வாக்கியத்தில் இட்டுக் காட்டலாம். இதற்கு ஒரு பழமொழி பொருத்தமாய் வருகிறது. அஃதாவது: " காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்" என்பதாகும்.
இந்தப் பழமொழியிலிருந்து இது விவசாய மக்களிடை ஏற்பட்டதென்பது தெரிகிறது. உமி வேறாகப் பிரிப்பதற்கு அவர்களே பெரும்பாலும் தூற்றுதலைச் செய்வார்கள். இது பொலிதூற்றுதல் எனவும் படும்.
விவசாயம்: இங்குக் காண்க: விவசாயம் https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html (சொல்லமைப்பு)
ஒரு மனிதனைப் பற்றி இன்னொருவன் சென்று தவறான செய்திகளைப் பரப்புதலாவது, விவசாயிகள் பொலி " தூற்றுவதற்கு" ஒப்பானதென்று கண்டு, அதற்கு பழிதூற்றுதல் என்ற பொருளும் மொழியில் ஏற்பட்டது.
தூற்றுதலும் தூவுதலும் தம்மில் ஓர் ஒற்றுமை உடைய செயல்களாகும். அதனால் தூவுதல் என்ற சொல்லையும் தூற்றுதல் என்பதன் பொருட்சாயல்கள் பற்றிக்கொண்டது. இவற்றில் அடிச்சொல்லாவது : " தூ" என்பதுதான்.
தூ > தூத்து > தூற்று.
இதைப்போலவே ஏற்று என்ற சொல்லும் ஏத்து என்று வழங்கும். எது முதல் என்பதை ஈண்டு விளக்கவில்லை. சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம் என்று வந்ததுபோலுமேயாகும். (போலி: ற- த; ல - ர முதலியன). நிற்றல்> நித்தல் ( ஒவ்வொரு நாளும்) என்பதும் அன்னது.
போலி என்றால் ஒன்றைப்போல் மற்றொன்று நிற்றல்).
ஒரு மனிதனைப் பிடிக்கவில்லை என்றால், அவனைப் பற்றித் தூவி எடுத்துவிடுவார்கள்.
எடுத்துவிடுதலாவது, சொல்வதைத் திடப்படுத்தித் தூக்கிப் பிடிப்பது போலும் செயல். இதைக் காற்றுடன் நெருப்பு என்றும் வரணிப்பதுண்டு.
எடுத்துப் பிடிப்பது என்ற வழக்கையும் நோக்கி, எடுத்தல் என்பதன் சொற்பயன்பாட்டை உணரலாம்.
தூவி எடுத்தல்.
தூவு எடு+ அம்.
எடு அம் என்பது ஏடம் என்று முதனிலை திரிந்து ஏஷம் என்றாகிப் பிறசொற்களின் பகுதியாய் நிற்றலும் உண்டு.
தூவு + ஏடம் > தூவேடம் > துவேசம் என்று ஆனது. மூலம் தலை குறுகுதல்.
வா > வ(ந்தான்). எடுத்துக்காட்டு. வினை பெயர் எங்கும் குறுக்கம் உண்டு. நீட்டமும் உண்டு.
தூவேஷம் > துவேஷம் > த்வேஷம்.
இவ்வாறன்றி, தூவு( தல்) + ஏசு (தல் > தூவேசு+ அம் > துவேசம் எனினும் அமையும்.
இஃது இருபிறப்பி என்பதும் தமிழினின்று புறப்பட்ட சொல் என்பதும் அறிக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
Please do not copy, republish and/or backdate. There are
thousands of words for you to work on. Take notes when you
hear people talk. You may use this for study . But when you copy you
are adding nothing to the existing knowledge. Backdating your publication
after copying is fraud.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக