நம் அன்பருக்கு உடலெடை கூடி முதுகு வலி வந்துவிட்டது. தொற்றுப் பரவலால் வெளியில் ஒன்றும் செய்ய இயலவில்லை. உங்கள்
ஆலோசனையை வழங்குங்கள்
இக்கவிதை நடமாட்டக் குறைவினால் ஏற்படும் விளைவுகளை
முன்வைக்கின்றது.
மகுடமுகி உலவுதொற்றில் மனையைப் பூட்டி
மக்கள்தொடர் பேதுமின்றி உட்கி டந்தேன்.
வெகுநலமே தந்திடுவீட் டுணவி னாலே
வீக்கமொத்த சதைபோட்டு உடல்க னத்து
தகுபயிற்சி ஒன்றுமின்றித் தவிக்கின் றேனே
தசைகொழுப்பு தணிபதற்கோ வசமி ழந்தேன்
நகுபகடி செய்திடாது கருத்தை என்பால்
நல்லபடி சொல்லிடுவீர் இல்லம் வெல்க!
உடலெடை குன்றவே உண்டோ மருந்து
படுகின்ற என்புவலி ஏறித் ----- தொடர்ந்திடவே
யான்துன்பம் கொண்டேனே என்னதான் செய்வது
தான்தன்னில் தீராத நோய்.
நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள். பின்னூட்டம் செய்யுங்கள்
பொருள்: மகுடமுகி --- கொரனா வைரஸ்.
உட்கிடந்தேன் - உள்ளே இருந்தேன்.
வீட்டுணவு - வீட்டில் சமைத்துத் தரும் உணவு.
கனத்து - எடை கூடி
வசமிழந்தேன் - வழியில்லாமல் போய்விட்டேன்
நகுபகடி - சிரித்துக் கேலி கிண்டல் (செய்யாமல். )
என்பு - எலும்பு. தான் தன்னில் - தானாகவே
மெய்ப்பு: 14022022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக