வா என்ற ஏவல்வினை. வந்தான் எனும்போது வ~ என்று குறுகிவிடும்.
வரு என்பதே பகுதி, இது ஏனென்றால், வருகிறேன், வருவாய், என்று
வருதல் காணலாம்.
இப்போது வசூல் என்ற சொல்லைக் காணலாம். இது தமிழ் நாட்டில்
உருதுமொழியும் வழங்கிய காலத்து வழக்கு வந்த சொல்லென்பர்.
சங்க இலக்கியங்களில் இல்லை என்பதால், இது ஒரு பேச்சு வழக்குச்
சொல் எனலாம். எக்காலத்தில் இது பேச்சில் வந்தது என்பதற்கான
பதிவுகள் இலவென்று சொல்வர். ஆனால் பிற்கால எழுத்துக்களில்
காணப்படுகிறது.
உருதுமொழியிலும் இது வழங்குகிறது என்பர் சில ஆய்வறிஞர். அங்கு
அது இருப்பதால், இங்கும் அது இருந்தாலும், அங்கிருந்து வந்திருக்க
வேண்டுமென்பர். ஆனால் உருது, இந்தி முதலியன புதிய மொழிகள்.
இந்தியும் உருதும் தக்காணி ( தெற்கணி) மொழியினின்று வந்ததென்பர். தெற்கணி என்பது தெற்கண் (தென்னாட்டில்) கிளைத்து
எழுந்த மொழி.
வரு என்பது வ~ என்று குறுகும். சூல் என்பது "உண்டானது" என்ற
பொருள்விரிவில், விளைச்சலைக் குறிக்கும். மேகம் சூல் கொண்டால், அதன் விளைவு மழை.
எனவே வசூல் என்பது தமிழ்மூலங்களை உடைய சொல்லாம்.
will edit later. Some maintenance is being done now.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக