காருண்யம் சொல் பின்புலச் சிந்தனைகள்.
இந்தச் சொல் காருண்யம் என்னாமல் காருண்ணியம் என்று எழுதப்படுதல் வேண்டும். அப்படி எழுதினால் சொல்லின் தன்மையும் அதிலடங்கியுள்ள பொருண்மையும் நன்கு புலப்படுவனவாகும்.
கார் என்பது கரு என்பதன் திரிபு. ஒளிக்குறைவு அல்லது ஒளியின்மையைக் குறிக்கும். கருமுகில்களைக் கார்முகில் என்போம்.
கார்மேகம் என்பதுமுண்டு. இந்தக் கருமையினை உண்பது எது?
அதாவது இருளை விழுங்கி இல்லாமல் ஆக்குவது ஓளியே அன்றி
வேறில்லை. கருமை இரக்கமின்மையைக் காட்டுமானால் அக் கருமையை உண்டு அதை விலக்கும் ஒளி இரக்கத்தையும் அன்பையும் காட்டுமென்று சிறாரும் கூறிடுவர். அந்த ஒளியாகிய சிவம் அக்கருமையை விலக்க உண்ட காலை, அதுவோ அவரை விட்டு
நீங்காமல் அவர் கண்டத்திற் பதிந்துகொண்டது. உண்மை யாதென்றால்
ஒளியை விட்டு இருளும் முழுமையும் நீங்காமல் . இரண்டும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்துகொண்டுள்ளன . . காயம் (ஆகாயம்) கருமை;
அதை விலக்கும் , (விளக்கும்) ஒளி செம்மை. இரண்டும் விடாமல்
மாறி மாறி வரும்.
கருமையை (கார்) உண்ட நிலையிலே, கார் என்ற கொடுமை நீங்கிய
நிலையிலே, இரக்கமும் அன்பும் தோன்றுகின்றன. இவையே மொத்தமாகக் கார் உண்ணு இயம் ( காருண்ணியம் ) என்னும் ஒன்றாகிறது. கருணை என்பதும் கரு+ உண் + ஐ = ஆகிறது. கரு என்பது
கண் என்றும் திரியும். கருண் (கரு+உண்) என்பதும் கண் ஆகும்.
கரிய உள்ளத்துத் தோன்றும் இரக்கமின்மையை உண்டு ஒளியை வெளிப்படுத்துவதே கருணை, காருண்ணியம் எனப்பட்டன.
இவை இந்தோ ஐரோப்பியச் சொற்கள் அல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக