பலகணி என்ற சொல் அவ்வப்போது நம்மை எதிர்கொள்கின்றது. சன்னல்
என்பதே பரந்து வழங்குவதாய் உள்ளது. நாம் இப்போது பலகணி என்ற
சொல்லைப் புரிந்துகொள்ள முயல்வோம்.
ஒன்று, சில, பல என்னும் எண்ணிக்கைகளில் பல என்பதே பலகணி என்ற சொல்லில் முன்நிற்கிறது.
இது உணர்ந்துகொள்ள விளக்கம் வேண்டாதது ஆகும்.
கண் என்பது ஓட்டையையும் குறிக்கும். கண் என்ற சொல்லின் பொருளை முழுமையாக அறிந்துகொள்வோம். பொருளாவன:
அல்லி, அழகு, அறிவு, இடம், கணு, துவாரம், மூங்கில், விழி,
பீலிக்கண், தேங்காய்க்கண், மூங்கிற்கண், பெருமை, ஞானம்.
கண் என்பது பலபொருள் ஒருசொல். "துணியில் பூச்சிகடித்ததுக் கண்ணு
கண்ணாய்ப் போய்விட்டது, அதை வீசிவிட்டேன் " என்று பேசுகையில்
கண் என்பது விழியைக் குறிக்கவில்லை; ஓட்டையையே குறிக்கிறது.
முற்காலத்தில் சன்னல்களை அமைத்தவர்கள், பல வட்டமான துளைகளை ஒவ்வொரு சன்னலிலும் அமைத்து காற்றுவர வசதி செய்தனர். அதனால் சன்னலுக்குப் பலகணி என்ற பெயர் ஏற்பட்டது.
இதைப் பல + கண் + இ என்று பிரிக்கவேண்டும். பல கண்களை
உடையது என்று பொருள்.
இது அழகாய் அமைந்த ஒரு தமிழ்ச்சொல். இதைப் பயன்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக