மக என்பது ஓர் வேர்ச்சொல். இது ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுதலைக் குறிக்கும் தமிழ்ச்சொல். மகன், மகள், மக்கள், மக> மா; மாக்கள் என்ற ஒரு சொற்குடும்பமே தமிழில் இருக்கிறது. இந்த மகச் சொல்லை நாம் உலகிற்கும் கொடையாக வழங்கியுள்ளோம். அவற்றில் மக்டோனல்டு என்ற சொல்லில் வரும் மக் (Mac) என்பதும் அடங்கும். மக்டோனல்டு என்றால் டோனல்டின் மகன் என்பதே பொருள். இது காலை அஃதொரு குடிப்பெயராய் மேலையில் வழங்கி வருகிறது.: "மக" கலப்பில்லாத இன்னொரு குடிப்பெயர் டோனல்டுசன் (Donaldson) என்பதாகும்.
மக என்பதனுடன் மை என்ற பண்புப் பெயர் விகுதியை இணைத்தால்
மகமை என்பது கிடைக்கிறது. இது பிறப்பித்தலாகிய தன்மை என்று
பொருள் தரவேண்டும். மக என்பதற்கு, இளமை, பிள்ளை, காணிக்கை என்று பொருளிருத்தலால், மகமை என்ற மை என்னும்
பண்புப்பெயர் விகுதி கலந்த சொல்லுக்கு அறக்கொடை ( அறத்தின்
பொருட்டு வழங்கும் கொடை) என்று பொருள் காணப்படுகின்றது.
மக என்பது உண்மையில் ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றிடுதல்
ஆகையினால், பூவிலிருந்து தோன்றும் பொடிகட்கு "மகரந்தம்" என்ற
சொல் விளைந்தது. மக+ அரு + அம் + தம் என்று பிரிக்க, இதன்
பொருள்: பூவிற் பிறந்த அரிய அழகிய (தூள் அல்லது பொடி) என்று
பொருளாகிறது. மக என்பதன் இறுதி அகரமும் அரு என்பதன் இறுதி
உகரமும் கெடவே, மகர ஒற்றும் நகர ஒற்றாகி மகரந்தம் என்ற
இனிய சொல் கிடைத்து மகிழ்விக்கிறது.
மகரந்தத்திலிருக்கும் இறுதிச்சொல் முடிவு குறிக்கும் அந்தமன்று.
அப்படிப் பண்டிதன் சொன்னால் அது பிசகு ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக