இலுப்பை
மற்றும் இனிமை
==========================
இலுப்பைக்கும்
இனிமைக்கும் உள்ள தொடர்பினை
அறிந்துகொள்வோம்.
இலுப்பைக்
காய் பழுத்தவுடன் சர்க்கரை
போலும் ஓர் இனிமை இதில் உள்ளது.
யாம் சுவைத்துப்
பார்த்தவை வியட்நாம்,
தாய்லாந்து, மலேசியா
ஆகிய நாட்டில் விளைந்தவை.
இதை மலாய் மொழியில்
"சிக்கு"
என்பார்கள்.
இலுப்பை
என்ற சொல்லின் அடி, இல்
என்பது. அது சிதைவு
அடையாமல் சொல்லில் இன்னும்
வாழ்கின்றது.
இனிமை
என்ற சொல்லின் அடி இன் என்பது.
இது, இன்>
இனி> இனிமை
என்று அமைந்தது. இன்மை
(இல்லாமை) என்பதில்
வரும் இன் - சந்தியில்
தோன்றியதாகையால் அது வேறு
என்க.
இல் என்பது
இன் என்று மாறும். இவ்விரண்டில்
இல் என்பதே மூலம். இல்
என்பது பல்பொருள் கொண்ட ஓர்
மூலச்சொல். இதன்
எல்லாப் பரிமாணங்களின் உள்ளும்
இங்கு யாம் புக முற்படவில்லை,
பரிமாணம் ஆவது பரிந்து
சிறப்பது. அதாவது
தோன்றிப் போல இருப்பவற்றினின்று
அழகுற்று வேறுபடுவது,,
தோன்றிப் போன்மையின்
வேறுபடல். மாணுதல்
= சிறத்தல். மாண்>
மாணு > மாணம்.
எனவே பரிமாணம்.
பரிதல் - வெளிப்படுதல்.
பரி > பரிதி.
முன் வெளிப்பட்டதாகிய
சூரியன். அதிலிருந்து
வெளிப்பட்டன ஏனைக் கோள்கள்.
காற்றுப் பரிதல் (
வெளிப்படல்) என்னும்
பேச்சு வழக்கை நோக்குக..
இத் தடப் பெயர்வு
நிற்க
இல் =
இன்.
இல் >இலுப்பை
இன் >
இனிப்பு.
இல்>
இலுப்பு> இலுப்பை.
இன் >
இனுப்பு > இனிப்பு.
இலுப்பு>
இனுப்பு > இனிப்பு.
இனிப்பு
என்பதைப் பேச்சில் இனுப்பு
என்று பலுக்குவோர் பலர் உளர்.
அது இனிப்புக்கு
முந்திய வடிவம்.
தமிழில்
இனுப்பு என்பதை இனுப்பு என்றே
பேசினோரும் அதை இனிப்பு என்று
பேசினோரும் என இருசாரார்
இருக்க, இனிப்பு
என்பதே எழுத்தில் முதலில்
வந்து நிலைத்துவிட்டது;
மொழி ஆய்வு
வேறு. மொழியை தற்கால
நிலைப்படி மரபு காத்தல் என்பது
வேறு. பேச்சுக்குப்
பிந்தியது எழுத்து. விரி
வரிக்க - விவரிக்கத்
தேவை இல்லை.
Shall meet and greet again. Stay
tuned.
This was written sometime back. Shall edit later.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக