முன் யாம் இப்படி எழுதியிருந்தோம்.:
சாணக்கியன் வடதிசைச் சென்று பணிபுரிந்த தென்னாட்டுப் பிராமணன் என்பது வரலாறு. அல்லது கதை . (எதுவாயினும் ) . சோழ நாட்டினன் என்று சொல்லப்படுகிறது. இப்போது இவன் பெயரை ஆராய்வோம்.
இவன் நுண்மாண் நுழைபுலம் உடையவன். எத்தகு நுண்ணிய பொருளாயினும் அதில் உள் நுழைந்து அறிந்து வந்து விளக்கும் வல்லமையே நுண்மாண் நுழைபுலம் என்று தமிழில் சொல்லப்படும். ஐந்தடிக்கு மேல் வளர்ந்து நலமுடன் திகழ்ந்த அவன், எந்த விடயத்திலாவது புகுந்து உண்மை காணவிழைந்தால் ஒரு சாணாக குறைந்து உள் நுழைந்து மறைந்திருக்கும் உண்மையைக் கண்டுபிடித்துவிடுவான் என்று மக்கள் நம்பினார். இந்த நம்பிக்கை தமிழ் மரபில் சொல்லப்படும் நுண்மாண் நுழை திறனைப் படியொளிர்வதாக உள்ளது.
சாண் ஒரு சாணாக;அக்குதல் : குறைதல்.அ அன் என்பன சொல்லிறுதிகள்.
சாணக்கியன் சாணாகக் குறைகின்றவன்.
எனினும், நீட்டமானவற்றைச் சாணாகக் குறைத்தவன் எனப்படுவதால், தென்னாட்டினன் என்றும் சொல்லப்படுவதால், வள்ளுவனே ஏன்
சாணக்கியன் என்ற பெயரில் வடதிசைச் சென்றிருக்கலாகாது என்ற
கேள்வியும் எழுகிறது. வள்ளுவனும் சாணக்கியனும் முன்காலத்தில்
வாழ்ந்தவர்கள். அவர்கள் காலக் கணக்கெல்லாம் கருத்துரைகளே. கூற்றும் மறுப்புகளுமாய் உள்ளவை அவை.
நீண்ட கருத்துக்களையும் சாணாகக் குறைத்துக் குறளாக்கின பெரும்புலவனே வள்ளுவன். குறளும் ஒரு சாண் நீட்டுக்கு மேல்
போகாதவை எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக