சனி, 4 பிப்ரவரி, 2017

சாங்கியம்

சாங்கியம்

சாத்திரம் என்ற சொல் சா என்ற அடிச்சொல்லிலிருந்து
தோன்றியது போலவே சாங்கியம் என்ற சொல்லும்
சாவின் பொருட்டுச் செய்யப்படும்  நடபடிகளை
முதலில் குறித்துப் பின் அவைபோலும் உயிருள்ளோருக்கு
இயற்றபப்டுவனவற்றுக்கும்  புழங்கப்பட் டதென்பதை எளிதின் உணரலாம்.

மதங்களும் கடவுட் கொள்கைகளும் சாவின் தன்மை அல்லது திறம் உணரப்புறப்பட்ட மனிதன் நாளடைவில்
மேற்கொண்டவை என்பது மனிதவளர்ச்சி நூலாரின்
கொள்கையாகும்.  வரலாறும் அஃதே.

சா+கு+ இ + அம்.

இ அம் என்பன விகுதிகள்.
கு சொல்லமைப்பு இடைநிலை.
ஙகர ஒற்று:  மெலித்தல் எழுத்துப்பேறு.

சா  :  சாவு , இறப்பு.
சா +கு =  சாவுக்கு. இது திரிந்து சாங்கு என்று மெலிந்தது.
மா+ கா = மாங்கா(ய்) என்பதுபோலும் புணர்ச்சி.
இ + அம் = இயங்குவது.  இயம்.  இது இறுதிநிலை ஆனது.


ஆகவே சாங்கியம் =  சாவுக்கு இயங்குவது.

வாந்தி என்பதில் ந் என்னும் எழுத்துப்பேறு போல்வதே.

My previous post prior to 2010 has been  deleted by persons who wanted
to copy it or opposed the explanation,  but surreptously.

கருத்துகள் இல்லை: